இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நஷ்டம் ரூ.971 கோடி

By செய்திப்பிரிவு

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் டிசம்பர் காலாண்டு நஷ்டம் ரூ.971 கோடியாக இருக்கிறது. நடப்பு நிதி ஆண்டின் முதல் 9 மாதங்களில் நஷ்டம் ரூ.2,693 கோடியாக இருக்கிறது.

வங்கியின் மொத்த வருமானம் ரூ.5,062 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.5,599 கோடியாக இருந்தது. டிரஷரி மூலமான வருமானம் குறைந்திருப்பதால் மொத்த வருமானம் குறைந்திருப்பதாக வங்கி அறிவித்திருக்கிறது.

வங்கியின் காசா விகிதம் 35.33 சதவீதமாகவும், நிகர வட்டி வரம்பு 1.96 சதவீதமாகவும் இருக்கிறது. வாராக்கடனை பொறுத்தவரை மொத்த வாராக்கடன் 21.95 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் 13.08 சதவீதமாகவும் இருக்கிறது. செப்டம்பர் காலாண்டில் நிகர வாராக்கடன் 13.86 சதவீதமாக இருந்தது.

வங்கியின் டிசம்பர் காலாண்டு செயல்பாட்டு லாபம் ரூ.685 கோடியாக இருக்கிறது. நடப்பு நிதி ஆண்டின் முதல் 9 மாதங்களில் ரூ.2,693 கோடியாக செயல்பாட்டு லாபம் இருக்கிறது. ஆனால் வாராக்கடனுக்கு அதிக தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டதால் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.

லாப பாதைக்கு திரும்பும்

அடுத்த நிதி ஆண்டின் மூன் றாம் காலாண்டில் வங்கி லாபப் பாதைக்கு திரும்பும். கடந்த சில ஆண்டுகளாக சில பிரச்சினைகள் இருந்தன. ஆனால் வங்கியின் செயல்பாட்டினை மேம்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். அடுத்த நிதி ஆண்டின் மூன்றாம் காலாண்டில் லாபப் பாதைக்கு திரும்புவோம்.

2018-19-ம் நிதி ஆண்டு வங்கிக்கு சிறப்பானதாக இருக்கும் என வங்கியின் நிர்வாக இயக்குநர் ஆர்.சுப்ரமணியகுமார் கூறி னார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

இந்தியா

8 mins ago

தமிழகம்

16 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

உலகம்

23 mins ago

வணிகம்

39 mins ago

வாழ்வியல்

35 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

ஆன்மிகம்

53 mins ago

விளையாட்டு

58 mins ago

மேலும்