விரைவில் கிரிப்டோ கரன்சி விதிமுறைகள்: செபி தலைவர் அஜய் தியாகி தகவல்

By செய்திப்பிரிவு

பிட்காயின் பரிவர்த்தனையை அரசு அனுமதிக்காது என்று மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி திட்டவட்டமாக அறிவித்த நிலையிலும் இது தொடர்பான குழப்பம் இன்னமும் நீடித்து வருகிறது. இத்தகைய சூழலில் கிரிப்டோ கரன்சி எனப்படும் மெய்நிகர் பண பரிவர்த்தனை தொடர்பான விதிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்று செபி தலைவர் அஜய் தியாகி கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது,

கிரிப்டோ கரன்சிகளின் புழக்கத்தைத் தடுக்க எந்தெந்த கட்டுப்பாட்டு அமைப்புகள் மற்றும் கண்காணிப்பு அமைப்புகளுக்கு அதிகாரம் அளிக்கப்படும் என்பன உள்ளிட்ட அனைத்து விவரங்களும் விதிமுறையோடு வெளியிடப்படும். பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து பிப்ரவரி 2-ம் தேதி பொருளாதார விவகாரத் துறை கூட்டம் நடத்தப்பட்டது. அதில் கொள்கைகளை உருவாக்க வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது. அதில் எந்த கட்டுப்பாட்டு அமைப்பு எந்தெந்த விஷயங்களை கண்காணிக்க வேண்டும் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

கிரிப்டோ கரன்சியின் சாதக, பாதக அம்சங்களை ஆராயுமாறு அப்போது தெரிவிக்கப்பட்டது. அத்துடன் மத்திய அரசே கிரிப்டோ கரன்சி வெளியிடலாமா என்பதை ஆராயுமாறு அறிவுறுத்தப்பட்டது. விதிமுறைகள் வெளியான பிறகே அதில் செபியின் பங்கு என்ன என்பது தெரியவரும் என்று தியாகி கூ கூறினார். இக்குழுவில் அஜய் தியாகி இடம்பெற்றுள்ளார்.

மெய்நிகர் பணமானது மின்னணு வடிவத்தில் சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. கம்ப்யூட்டர் ஹேக்கர்கள் இதில் நுழைந்து பணத்தை திருடுவது அல்லது தவறாக பயன்படுத்து வதற்கான வாய்ப்புகள் ஏராள மாக உள்ளன என்றும் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்