தொழில் தொடங்குவதில் உள்ள சிரமங்கள் நீக்கப்படும்: இஸ்ரேல் நிறுவனங்களுக்கு இந்தியா உறுதி

By செய்திப்பிரிவு

இஸ்ரேலிய நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்குவதில் நிலவும் சிரமங்கள் முற்றிலுமாக களையப்படும் என்று மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்தியாவுக்கு ஒருவார கால பயணமாக வருகை தந்துள்ளார். அவருடன் 100 நிறுவனங்களைச் சேர்ந்த 130 பேர் கொண்ட குழுவும் வந்துள்ளது.

டெல்லியில் இந்தியத் தொழிலகக் கூட்டமைப்பு (சிஐஐ) மற்றும் தொழில் கொள்கை மேம்பாட்டுத் துறை (டிஐபிபி) கூட்டாக ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் துறையின் செயலர் ரமேஷ் அபிஷேக் இதனைக் குறிப்பிட்டார். இஸ்ரேலிய தொழில் துறையினர் இக்கூட்டத்தில் பங் கேற்றனர்.

அவர் மேலும் பேசியதாவது, இஸ்ரேலிய தொழில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் ஏற்கெனவே மேற்கொண்டுள்ளன. கடந்த காலங்களில் சில பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் வர்த்தகத்தில் கணிசமான முன்னேற்றமும் எட்டப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் பிரச்சினைகள் ஏற்படாது என்பதை நிச்சயமாக கூற முடியும் என்றார்.

கூட்டத்தில் பங்கேற்ற இஸ்ரேலிய வர்த்தக ஆணையர் ஒஹத் கோஹென் பேசுகையில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூவின் பயணத்தின்போது இஸ்ரேல் -இந்தியா இடையே தாராள வர்த்தக ஒப்பந்தம் (எப்டிஏ) கையெழுத்தாகலாம் என்று கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

10 hours ago

மேலும்