நேரடி வரி வசூல் 18.2% உயர்வு

By செய்திப்பிரிவு

நடப்பு நிதி ஆண்டின் முதல் 9 மாதங்களில் நேரடி வரி வசூல் 18.2% உயர்ந்து ரூ.6.56 லட்சம் கோடியாக இருக்கிறது. நேரடி வரி என்பது தனிநபர் வருமான வரி, சொத்து வரி மற்றும் நிறுவன வரி ஆகியவை சேர்ந்ததாகும்.

ஒட்டு மொத்த நிதி ஆண்டுக்கு நேரடி வரி வசூல் மூலம் ரூ.9.8 லட்சம் கோடி திரட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறது. இதில் 67 சதவீதம் முதல் 9 மாதங்களில் வசூலாகி இருக்கிறது. மொத்த வரி வசூல் (கூடுதலாக செலுத்திய வரியையும் சேர்த்து) 12.6 சதவீதம் உயர்ந்து ரூ.7.68 லட்சம் கோடியாக இருக்கிறது. இதில் ரூ.1.12 லட்சம் கோடி திருப்பி வழங்கப்பட்டிருக்கிறது. தனிநபர் வருமான வரி வசூல் 21.6 சதவீதமும், நிறுவன வரி வசூல் 10.9 சதவீதமும் உயர்ந்திருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

24 secs ago

க்ரைம்

6 mins ago

கல்வி

3 mins ago

உலகம்

14 mins ago

இணைப்பிதழ்கள்

28 mins ago

க்ரைம்

33 mins ago

க்ரைம்

40 mins ago

உலகம்

44 mins ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

வெற்றிக் கொடி

2 hours ago

விளையாட்டு

2 hours ago

மேலும்