மோட்டார் வாகன உற்பத்தியில் முன்னணி நிறுவனமான டிவிஎஸ், புதிய மேம்படுத்தப்பட்ட அப்பாச்சி ஆர்ஆர் 310 இரு சக்கர வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது. சென்னையில் நேற்று நடைபெற்ற அறிமுக நிகழ்ச்சியில் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் சுதர்சன் வேணு பேசியதாவது, இரு சக்கர வாகன சந்தையில், பிரத்யேக மாடலில் ஆர்ஆர் 310 மாடலை உருவாக்கியுள்ளோம். ஸ்போர்ட்ஸ் பிரியர்களை ஈர்க்கும் விதமாக இந்த மாடல் இருக்கும்.
வெர்டிக்கல் ஸ்பீடா மீட்டர், லிக்விட் கூலிங் சிஸ்டம் மற்றும் ஆயில் கூலிங் சிஸ்டம் என மேம்படுத்தப்பட்டுள்ளதால் இன்ஜின் செயல்திறன் அதிகரிக்கும். மேம்படுத்தப்பட்ட ஏரோ டைனமிக் வசதியால், அதிகபட்ச வேகம் மற்றும் வளைவுகளில் எளிதாக திருப்பலாம். இந்த மாத இறுதியில் இருந்து இந்த வாகனத்துக்கான முன்பதிவு தொடங்குகிறது. இருசக்கர வாகன சந்தையில் டிவிஎஸ் நிறுவவனம் 14 சதவீத சந்தையை வைத்துள்ளது. நடப்பாண்டில் இந்த மாடலுக்கான விற்பனை இலக்கு வைக்கவில்லை என்றாலும், 10,000 வாகனம் விற்பனையாகும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.
இந்த மாடல் நிறுவனத்தின் ஓசூர் ஆலையில் தயாராகிறது. பிஎம்டபிள்யூ நிறுவனத்துடன் இணைந்து விரைவில் புதிய மாடல்கள் அறிமுகமாகும். அப்பாச்சி ஆர்ஆர் 310 மாடலில் விற்பனையக விலை ரூ.2.05 லட்சத்திலிருந்து தொடங்கும் என்றும் கூறினார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
57 mins ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
2 hours ago
வாழ்வியல்
2 hours ago
தமிழகம்
4 hours ago
விளையாட்டு
4 hours ago
தமிழகம்
5 hours ago
ஓடிடி களம்
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
கருத்துப் பேழை
6 hours ago
தமிழகம்
6 hours ago