வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: வர்த்தகப் பயன்பாடு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.157.50 குறைக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் - ரஷ்யா போர் தொடங்கியதையடுத்து, கச்சா எண்ணெய் விலை அதிகரித்து, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலை பன்மடங்கு உயர்ந்தது. எனினும், கச்சா எண்ணெய் விலை குறையத் தொடங்கியதையடுத்து, கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை உயர்த்தப்படவில்லை.

இந்நிலையில், வர்த்தகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துள்ளன. இதன்படி, 19 கிலோ எடையுள்ள வர்த்தகப் பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ.157.50 குறைக்கப்பட்டுள்ளது. அதன் விலை ரூ.1,852.50-ல் இருந்து, ரூ.1,695-ஆக குறைந்துள்ளது.

கடந்த மே 19-ம் தேதிக்கு பின்னர் வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 5-வது முறையாக குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 mins ago

இந்தியா

18 mins ago

வணிகம்

35 mins ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

கல்வி

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்