தொலைபேசி சந்தாதாரர்களின் எண்ணிக்கை 1.75 கோடி சரிவு: டிராய் அறிக்கையில் தகவல்

By செய்திப்பிரிவு

நாட்டில் தொலைபேசி (டெலிபோன்) சந்தாதாரர்களின் எண்ணிக்கை கடந்த அக்டோபர் மாதத்தில் 1.75 கோடி சரிந்துள்ளதாக டிராய் வெளியிட்ட அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் 1.75 கோடி சந்தாதாரர்கள் குறைந்து தற்போது தொலைபேசி சந்தாதாரர்களின் எண்ணிக்கை 120.1 கோடியாக இருக்கிறது டிராய் அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடபோன், ஐடியா செல்லுலார், பிஎஸ்என்எல் உள்ளிட்ட நிறுவனங்களின் மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 1.26 கோடி அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே தொலைபேசி சந்தாதாரர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது.

கடந்த செப்டம்பர் மாதம் தொலைபேசி சந்தாதாரர்களின் எண்ணிக்கை 1,20.67 கோடியாக இருந்தது. ஆனால் கடந்த அக்டோபர் மாதத்தில் இதன் எண்ணிக்கை 120.17 கோடியாக குறைந்திருப்பதாக டிராய் தெரிவித்துள்ளது. நகர்ப்புறங்களில் தொலைபேசி இணைப்புகளின் எண்ணிக்கை கடந்த செப்டம்பர் மாதத்தில் 70.48 கோடியாக இருந்தது. இது அக்டோபர் மாதத்தில் 69.75 கோடியாக குறைந்திருக்கிறது. இருந்தபோதிலும் கிராமப்புறங்களில் தொலைபேசி இணைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மொபைல் சந்தாதாரர்களை பொறுத்தவரை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துக்கு புதிதாக 73.44 லட்சம் சந்தாதாரர்கள் இணைந்துள்ளனர். பார்தி ஏர்டெல் நிறுவனத்துக்கு 31.4 லட்சம் சந்தாதாரர்கள் புதிதாக இணைந்துள்ளனர். மிகப் பெரிய நிறுவனமாக இருந்த ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 1.09 கோடி வாடிக்கையாளர்களை இழந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

மேலும்