நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.7 சதவீதம்: ஆசிய வளர்ச்சி வங்கி கணிப்பு

By செய்திப்பிரிவு

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.7 சதவீதமாக இருக்கும் என ஆசிய வளர்ச்சி வங்கி (ஏடிபி )கணித்துள்ளது. பணமதிப்பு நீக்கம் மற் றும் ஜிஎஸ்டி அமலாக்கத்துக்கு பிந்தைய சிக்கல்களால் இந்தியாவின் ஜிடிபி குறைய வாய்ப்பிருப்பதாக ஆசிய வளர்ச்சி வங்கி கணித்துள்ளது.

மேலும் 2018-19ம் நிதியாண் டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7.3 சதவீதமாக இருக்கும் என கணித்திருக்கிறது. முன்னதாக 2018-19-ம் நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் என ஆசிய வளர்ச்சி வங்கி கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் தனியார் துறை முதலீடு போன்றவற்றால் இந்தியாவின் ஜிடிபி அடுத்த நிதியாண்டில் குறைய வாய்ப்புள்ளாதாக ஏடிபி கணித்துள்ளது.

இதுதொடர்பாக ஆசிய வளர்ச்சி வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் கொண்டுவரப்பட்ட பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி வரி முறையில் உள்ள சவால்கள் போன்றவற்றால் 2017-18-ம் நிதியாண்டில் முதல் அரையாண்டில் இந்தியாவின் ஜிடிபி மந்தமாக இருந்து வந்தது. அதுமட்டுமல்லாமல் 2017-ம் ஆண்டில் விவசாயத்துறையும் சில சவால்களை சந்தித்து வந்தன. அதனால் தற்போது இந்தியாவின் பொருளாதாரம் 6.7 சதவீதத்துக்கு வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது என கூறியிருக்கிறது. ஏற்கெனவே ஆசிய வளர்ச்சி வங்கி வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவின் ஜிடிபி நடப்பு நிதியாண்டில் 7 சதவீதம் வளர்ச்சியிடையும் என்று குறிப்பிட்டிருந்தது. அதை தற்போது மாற்றி யமைத்திருக்கிறது. சர்வதேச பொருளாதாரம் 2017-ம் ஆண்டில் சராசரியாக மூன்று சதவீத வளர்ச்சியடைந்துள்ளது என்றும் 2011-ம் ஆண்டிலிருந்து தற்போதுதான் அதிகபட்ச வளர்ச்சி விகிதத்தை அடைந் துள்ளது என்றும் ஆசிய வளர்ச்சி தெரிவித்துள்ளது. இதே மூன்று சதவீத வளர்ச்சி விகிதம் 2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் தொடரும் என்று எதிர்பார்ப்பதாக ஆசிய வளர்ச்சி வங்கி தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

48 mins ago

சினிமா

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

உலகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

5 hours ago

க்ரைம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்