தங்க கடன் பத்திர திட்டம்: ஒரு கிராம் விலை ரூ.2,886 - மத்திய அரசு நிர்ணயம்

By செய்திப்பிரிவு

தங்க கடன் பத்திர திட்டத்துக்கான விலையை மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது. ஒரு கிராம் ரூ.2,866 என்ற விலையில் தங்க கடன் பத்திரங்களை வெளியிட மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

மேலும் ஆன்லைன் மற்றும் டிஜிட்டல் முறையில் தங்க கடன் பத்திரங்களை வாங்கும் முதலீட்டாளர்களுக்கு ஒரு கிராமுக்கு ரூ.50 தள்ளுபடி வழங்கவும் அரசு முடிவெடுத்துள்ளது. ரிசர்வ் வங்கியுடன் ஆலோசித்த பிறகு மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

2017-18ம் ஆண்டுக்கான மூன்றாவது சீரிஸ் தங்க கடன் பத்திர வெளியிடும் திட்டம் டிசம்பர் 18-ம் தேதி (திங்கள்) முதல் 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தேதியில் வெளியிடும் கடன் பத்திரங்களை ஒரு கிராம் ரூ.2,866 என்ற விலையில் பெற்றுக் கொள்ளலாம் என்று நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. ஆன்லைன் மற்றும் டிஜிட்டல் முறையில் தங்க கடன் பத்திரத்தை வாங்குவோர்களுக்கு ஒரு கிராம் ரூ.2,816 என்ற விலை யில் வழங்கப்படும்.

குறைந்தபட்சம் ஒரு கிராமிலிருந்து அதிகபட்சமாக 500 கிராம் வரை ஒருவர் தங்க கடன் பத்திர திட்டத்தில் முதலீடு செய்ய முடியும். -பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

விளையாட்டு

29 mins ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்