நோபல் பரிசு பட்டியலில் ரகுராம் ராஜன்

By செய்திப்பிரிவு

முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் இந்த ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு இன்று வெளியாக இருக்கிறது. இதனையடுத்து யாருக்கு நோபல் பரிசு வழங்கப்பட இருக்கிறது குறித்து ஊகங்கள் வெளியாகி வருகின்றன.

கிளாரிவேட் அனாலிட்டிக்ஸ் என்ற நிறுவனம் இந்த ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வெல்லக்கூடிய வாய்ப்புள்ள ஆறு பொருளாதார அறிஞர்களை பட்டியலிட்டுள்ளது. இந்த ஆறு பொருளாதார அறிஞர்களுள் ரகுராம் ராஜன் பெயரும் இடம் பெற்றுள்ளது. இந்தப் பட்டியலில் இடம்பெற்றதால் ரகுராம் ராஜன் நோபல் பரிசு வெல்வது உறுதியாகாது. ஆனால் வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்று கிளாரிவேட் நிறுவனம் கூறியுள்ளது.

ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கி கவர்னராக பணியாற்றியவர். கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 4-ம் தேதி ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியிலிருந்து ஓய்வுபெற்று தற்போது அமெரிக்காவில் உள்ள சிகோகோ பூத் பிஸினஸ் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் எழுதிய `ஐ டூ, வாட் ஐ டூ’ என்ற புத்தகம் சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

கார்ப்பரேட் நிதி முடிவுகளின் பரிமாணங்கள் குறித்த பங்களிப்புக்காக இவருக்கு நோபல் பரிசு வழங்கப்படு வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கிளாரிவேட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

45 secs ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்