சென்னையில் இடியும் நிலையில் 23,000 வீடுகள்; புதிய வீடுகள் கட்ட நடவடிக்கை: அமைச்சர் தா.மோ.அன்பரசன்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் சேதமடைந்து இடியும் நிலையில் உள்ள 23,000 வீடுகளை அகற்றிவிட்டு புதிய வீடுகள் கட்ட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் தெரிவித்துள்ளார்.

சென்னை, திருவொற்றியூர் பகுதியில் குடியிருப்புக் கட்டிடம் இடிந்த விழுந்த விபத்தைத் தொடர்ந்து தமிழகத்தில் இடியும் நிலையில் உள்ள கட்டிடங்களை ஆய்வு செய்ய அண்ணா பல்கலைக்கழகத் தொழில்நுட்பக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் தலைமையில் இன்று சென்னை மந்தைவெளியில் உள்ள ராஜா முத்தையாபுரம் பகுதியில் உள்ள குடியிருப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறுகையில், ''சென்னையில் மட்டும் 23,000 வீடுகள் வாழத் தகுதியற்றவையாகக் கண்டறியப்பட்டுள்ளன. இவை 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டன. மற்ற மாவட்டங்களில் 2,000 வீடுகள் வாழத் தகுதியற்றவையாகக் கண்டறியப்பட்டுள்ளன.

வாழத் தகுதியற்றவையாகக் கண்டறியப்பட்ட அனைத்துக் கட்டிடங்களும் படிப்படியாக இடித்து, அகற்றிவிட்டு புதிய வீடுகள் கட்டி மக்களிடம் வழங்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதற்காக முதல் கட்டமாக ரூ.2,500 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, கட்டிடப் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன" என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

விளையாட்டு

13 hours ago

இந்தியா

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்