எலெக்‌ஷன் கார்னர்: அமைச்சர்களிடம் நிதி வசூலித்த மதிமுக!

By செய்திப்பிரிவு

தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட மதிமுக தேர்தல் நிதி அளிப்பு கூட்டங்களின் வழியாக இதுவரையில் 21.5 கோடி ரூபாய் வசூலாகியிருக்கிறது. இன்னும் சென்னை மண்டலம் மட்டும் பாக்கி. “இது ரொம்பக் குறைவு” என்று வருத்தம் தெரிவித்திருக்கிறாராம் வைகோ. “இதை வசூலிக்க நாங்க பட்டபாடு எங்களுக்குத்தான் தெரியும்” என்று புலம்புகிறார்கள் மதிமுகவினர்.

உதாரணமாக, மதுரை மண்டலத்தில் உள்ள 6 மாவட்டங்கள் சேர்ந்து 1 கோடி ரூபாய் நிதி கொடுத்தது. அதில், உண்மையில் கட்சிக்காரர்கள் கொடுத்த நிதி வெறுமனே 10 லட்சம் கூட தேறவில்லையாம். மீதித் தொகையானது அதிமுக அமைச்சர்கள், திமுகவில் பசையுள்ள எம்எல்ஏ-க்கள் உள்ளிட்டோரிடம் வெட்கத்தை விட்டு கேட்டுப் பெற்றதாம்.

“அரசியலில் நேர்மை, பொதுவாழ்வில் தூய்மைன்னு பேசிட்டு கடைசியில அதிமுக அமைச்சர்கள்கிட்ட கையேந்த வேண்டியதாப் போச்சே” என்று புலம்புகிறார்கள் மதிமுகவினர்.

மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த ஹாட் லீக்ஸ் செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

5 hours ago

வணிகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தொழில்நுட்பம்

8 hours ago

சினிமா

9 hours ago

க்ரைம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்