ஈரானில் கரோன பலி 60, 181 ஆக அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

ஈரானில் கரோனாவுக்கு இதுவரை 60,515 பேர் பலியாகி இருப்பதாக சுகாதாரத் துறை அமைச்சலம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஈரான் சுகாதாரத் துறை தரப்பில், “ ஈரானில் கடந்த சில நாட்களாக கரோனா நான்காம் கட்ட அலை பரவி வருகிறது. இதன் காரணமாக கரோனா பலி சமீப நாட்களாக அதிகரித்து வருகிறது. ஈரானில் இதுவரை 60, 515 பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் கடந்த சில நாட்களாக 8,000க்கும் அதிகமானவர்கள் கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஈரானில் ராசி கரோனா தடுப்பு மருந்து தயாரிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. ஈரானின் நூறு வருடப் பழமையான சீரம் பரிசோதனை மையம் இந்தத் தடுப்பு மருந்தைத் தயாரித்துள்ளது. கடந்த சில வாரங்களாக தன்னார்வலர்களுக்கு சீரம் கரோனா தடுப்பு மருந்துகள் போடப்பட்டு வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரானில் சமீப நாட்களாகவே கரோனா தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அங்கு பழைய கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜிம், உணவகங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்தியக் கிழக்கு நாடுகளில் ஈரானும், சவுதியும் கரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

சினிமா

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

8 hours ago

வாழ்வியல்

9 hours ago

தமிழகம்

9 hours ago

ஆன்மிகம்

8 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்