காரைக்குடியில் திடீரெனச் சரிந்த சின்ன வெங்காயம் விலை: என்ன காரணம்?

By இ.ஜெகநாதன்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சின்னவெங்காயம் விலை இன்று திடீரென கிலோ ரூ.140-ல் இருந்து ரூ.80-ஆகச் சரிந்தது.

திண்டுக்கல், திருப்பூர், நாமக்கல், தேனி, பெரம்பலூர், மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகளவு சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. தவிர கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் தமிழகத்திற்கு வெங்காயம் வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் அறுவடை சமயத்தில் பெய்த தொடர் மழையால் வெங்காயங்கள் அழுகின. இதனால் வரத்து குறைந்து சின்ன வெங்காயத்தின் விலை உயர்ந்தது. இதையடுத்து காரைக்குடி தினசரி சந்தையில் கிலோ ரூ.140 வரை விற்பனையானது. இந்நிலையில் இன்று காரைக்குடி சந்தைபேட்டை வாரச்சந்தையில் திடீரென சின்ன வெங்காயம் கிலோ ரூ.80 ஆகச் சரிந்தது.

அதேபோல் ரூ.60-க்கு விற்ற பெரிய வெங்காயம் ரூ.40-க்கும், ரூ.60-க்கு விற்ற கத்தரிக்காய் ரூ.20-க்கும், ரூ.60-க்கு விற்ற உருளை ரூ.30-க்கும், ரூ.30-க்கு விற்ற தக்காளி ரூ.20-க்கும், ரூ.80-க்கு விற்ற வெண்டை ரூ.40-க்கும் விற்பனையாது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘‘வெளி மாநிலங்களில் இருந்து வெங்காயம் வரத்து அதிகரித்ததால் விலை குறைந்து வருகிறது’’ என்று கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

ஜோதிடம்

12 hours ago

மேலும்