ஜப்பானில் முதல் கட்டமாக 40,000 சுகாதாரப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பு மருந்து

By செய்திப்பிரிவு

ஜப்பானில் முதல் கட்டமாக சுமார் 40,000 சுகாதாரப் பணியாளர்களுக்குக் கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜப்பான் தேசிய சுகாதார அமைப்பு தரப்பில், “ஜப்பானில் கரோனாவுக்கான தடுப்பூசி நேற்று முதல் போடப்பட்டது. முதல் கட்டமாக சுமார் 40,000 சுகாதாரப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட உள்ளது.

கரோனாவைக் கட்டுப்படுத்த தடுப்பு மருந்து மிக முக்கியமானது. நேற்று கரோனா தடுப்பு மருந்து போட்டுக் கொண்டவர்களுக்கு எதிர்மறையான பக்கவிளைவுகள் ஏதும் ஏற்படவில்லை” என்று தெரிவிக்கப்பட்டது.

ஜப்பானில் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மார்ச் 7ஆம் தேதி வரை அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 11 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 லட்சத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

இந்தியா

55 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்