விஐடி சென்னை, ‘இந்து தமிழ் திசை' சார்பில் `தேசம் காக்கும் நேசப் பணிகள்’ அரசு வேலைவாய்ப்பு வெபினார்: நவ. 4, 5-ம் தேதிகளில் இணையவழியில் நடைபெறுகிறது

By செய்திப்பிரிவு

சென்னை: 10, 11, 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள், இளங்கலை மற்றும் முதுகலை பயிலும் கல்லூரி மாணவர்கள் நாட்டுக்கு சேவைபுரியும் வகையில் பல்வேறு அரசுத் துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து அறியச் செய்யும் நோக்கிலும், மருத்துவம், பொறியியல், சட்டம், கட்டடக் கலையில் உயர்கல்வி தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையிலும் விஐடி சென்னை வளாகம் வழங்கும் ‘இந்து தமிழ் திசை - தேசம் காக்கும் நேசப் பணிகள்’ எனும் இணைய வழி வெபினார் ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களில் மாலை 4 மணிக்கு நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி இணைந்துள்ளது.

வரும் சனிக்கிழமை (நவ. 4) மாலை 4 மணிக்கு நடைபெற உள்ள வெபினாரில், இந்திய அரசின் தகவல் பணியக பிரதமரின் பத்திரிகை தொடர்பு இணை இயக்குநர் பி.அருண்குமார், ‘இந்திய தகவல் சேவை (ஐஐஎஸ்) வாய்ப்புகள்’ எனும் தலைப்பில் உரையாற்ற உள்ளார்.

வரும் ஞாயிற்றுக்கிழமை (நவ. 5) மாலை4 மணிக்கு நடைபெற உள்ள வெபினாரில், சென்னை டிஜிபி தலைமை அலுவலகதுணைக் கண்காணிப்பாளர் பி.சாமுண்டீஸ்வரி, ‘இந்திய காவல் சேவை (ஐபிஎஸ்)வாய்ப்புகள்’ எனும் தலைப்பில் உரையாற்ற உள்ளார். இந்த இரு வெபினார் நிகழ்வுகளையும் ஒருங்கிணைத்து, ராணுவ விஞ்ஞானியும், அறிவியல் எழுத்தாளருமான டாக்டர் வி.டில்லிபாபு கலந்துரையாட உள்ளார்.

நிகழ்வில் பங்கேற்க... இந்த நிகழ்வில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் https://www.htamil.org/DKNP005 என்ற லிங்க்-ல் பதிவுசெய்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு 9500165460 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

வணிகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

க்ரைம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

உலகம்

7 hours ago

இந்தியா

8 hours ago

மேலும்