வெர்னர் ஹைசன்பர்க் 10

By ராஜலட்சுமி சிவலிங்கம்

நோபல் பெற்ற ஜெர்மனி இயற்பியலாளர்

நோபல் பரிசு பெற்ற ஜெர்மானிய இயற்பியலாளர் வெர்னர் ஹைசன்பர்க் (Werner Heisenberg) பிறந்த தினம் இன்று (டிசம்பர் 5). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* ஜெர்மனியின் வர்ஸ்பர்க் நகரில் (1901) பிறந்தார். தந்தை கிரேக்க மொழி மற்றும் கிரேக்க வரலாற்றி யல் அறிஞர். பள்ளி ஆசிரியர், பல்கலைக்கழக பேராசிரியராகவும் பணியாற்றியவர்.

* மூனிச் நகரில் உள்ள மாக்ஸ் மில்லன் பள்ளியில் படித்த வெர்னர், தன் கணித ஆற்றலால் ஆசிரியர்களைக் கவர்ந்தார். மூனிச் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பயின்றார். உலகப் புகழ்பெற்ற இயற்பியலாளர் மாக்ஸ் போர்னிடம் இயற்பியல் பயில்வதற்காக, கோட்டிங்கன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். மூனிச் பல்கலைக்கழகத்தில் நீர் இயக்கவியலில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்து முனைவர் பட்டம் பெற்றார்.

* கோட்டிங்கன் பல்கலைக்கழகத்தில் மாக்ஸ் போர்னின் உதவியாள ராகச் சேர்ந்தார். ராக்ஃபெல்லர் உதவித்தொகை பெற்று கோபன் ஹேகன் பல்கலைக்கழகத்தில் ஓராண்டு காலம் இயற்பியல் ஆராய்ச்சி யில் ஈடுபட்டார். லெய்ப்சிக் பல்கலைக்கழகத்தில் கோட்பாட்டு இயற்பியல் துறை பேராசிரியராக 26-வது வயதில் நியமிக்கப்பட்டார்.

* பெர்லின் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியர், கெய்சர் வில்ஹெம் இயற்பியல் அமைப்பின் இயக்குநராகப் பணியாற்றினார். சிறப்பு அழைப்பின்பேரில், அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, இந்தியாவில் உள்ள அறிவியல் அமைப்புகள், பல்கலைக்கழகங்களில் விரிவுரையாற்றினார். இவர் ஆற்றிய விரிவுரைகள் தொகுக்கப்பட்டு, நூலாக வெளிவந்தது.

* குவான்டம் மெக்கானிசத்தை தோற்றுவித்தவர்களில் ஒருவராகப் போற்றப்படுகிறார். இக்கோட்பாட்டை பயன்படுத்தி ஹைட்ரஜன் உருவ மாற்று வடிவங்களைக் கண்டறிய முடிந்தது. குவான்டம் புலக்கொள்கை குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். அணுக்கரு கோட்பாடு குறித்தும் ஆராய்ந்தார்.

* நவீன இயற்பியலின் பிரதான கொள்கைகளில் ஒன்றான ஹைசன்பர்க் நிலையில்லா (அன்சர்டைனிட்டி) கோட்பாட்டைக் கண்டறிந்தார். அணிகள் (மாட்ரிக்ஸ்) அடிப்படையில் குவான்டம் இயக்கவியலை உருவாக்கும் வழிமுறையைக் கண்டறிந்தார். இதற்காக 1932-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார். அப்போது இவருக்கு 31 வயது.

* கொந்தளிப்பான ஓட்டம் (Turbulent Flows), இணை அணுவியல் துகள்கள், அணு உட்கரு, காந்தவியல், காஸ்மிக் கதிர்கள் உள்ளிட்டவற்றின் நீர்இயக்கவியல் கோட்பாடுகளுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார். நுண்அலகு இயந்திரவியலின் வடிவமைப்பாளர்களில் ஒருவராக குறிப்பிடப்படுகிறார். ஸீமேன் விளைவு குறித்தும் விரிவாக ஆராய்ந்தார். சிறந்த தத்துவவாதி யாகவும் திகழ்ந்தார்.

* இவர் நல்ல எழுத்தாளரும்கூட. ஆராய்ச்சிக் கட்டுரைகள், தத்துவம் சார்ந்த கட்டுரைகள், பிற பொதுவான விஷயங்கள் என 600-க் கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். இவை அனைத்தும் தொகுக்கப்பட்டு, 9 தொகுதிகளாக வெளியிடப் பட்டன. கோட்பாட்டு இயற்பியல் உட்பட பல்வேறு துறைகள் குறித்தும் ஏராளமான விரிவுரைகள் நிகழ்த்தியுள்ளார்.

* போருக்குப் பிறகு நலிவடைந்திருந்த ஜெர்மனியில் அறிவியல், ஆராய்ச்சித் துறைகளை மேம்படுத்தி மறுசீரமைக்கும் செயல்பாடுகளில் முக்கிய பங்காற்றினார். ஏராளமான பதக்கங்கள், பரிசுகளை வென்றுள்ளார். பல பல்கலைக்கழகங்கள் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தன.

* ஜெர்மனி மட்டுமல்லாமல் பிரஷ்யா, ருமேனியா, நார்வே, ஸ்பெயின் உட்பட உலகம் முழுவதும் உள்ள பல்வேறு அறிவியல் அமைப்பு களின் கவுரவ உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 20-ம் நூற்றாண்டின் சிறந்த இயற்பியலாளர்களில் ஒருவராக கருதப்பட்ட வெர்னர் ஹைசன்பர்க் 75-வது வயதில் (1976) மறைந்தார்.





VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

11 mins ago

இந்தியா

16 mins ago

இந்தியா

3 hours ago

இந்தியா

34 mins ago

இந்தியா

36 mins ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

கார்ட்டூன்

3 hours ago

இந்தியா

2 hours ago

வர்த்தக உலகம்

2 hours ago

மேலும்