மெட்றாஸ் அந்த மெட்ராஸ் 8: பேங்கர்களை மிரட்டிய ஆவி!

By எஸ்.முத்தையா

மெட்றாஸ் கன்னிமாராவில் நளினி செட்டூரின் புத்தகக் கடைக்குப் பெயர் ‘கிக்கிள்ஸ்’ (கலகல சிரிப்பு). அங்கே புத்தகங்கள் வரிசை வரிசையாக மலைபோல அடுக்கி வைக் கப்பட்டிருக்கும். குண்டாக இருப்பவர் கள் அந்த வரிசைகளின் இடைவெளியில் புகுந்து எதையும் இடித்துத் தள்ளாமல் நளினி அமர்ந்திருக்கும் இடம் வரை செல்வது எளிதல்ல. அவரை எளிதில் பார்க்க முடியாதபடிக்கு சுற்றிலும் புத்தக மலைகள்தான்!

புத்தகக் குவியல்களில் நீண்ட நேரம் தேடியும் நீங்கள் விரும்பிய புத்தகத் தைக் கண்டுபிடிக்க முடியாவிட்டால் நளினி நிச்சயம் உதவி செய்வார். புத்தகத் தலைப்பு அல்லது புத்த கத்தை எழுதியவருடைய பெயரைச் சொல்லிவிட்டால், அது எந்தக் குவிய லில் இருக்கிறது என்று காட்டு வார். அப்படி அவரிடமும் இல்லா விட்டால், ஆர்டர் செய்து வாங்கி வைக்கிறேன் என்று கனிவாகக் கூறுவார்.

ஸ்டீபன் ஆல்டர் எப்படி இமயமலை யில் பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது பள்ளத்தில் விழுந்தார் பிறகு பிழைத்தார் என்பதையும் ஆவிகள் குறித்தும் பேசினோம். அப்போது நளினி என்னிடம் கேட்டார், ‘‘ஆவிகள் உண்டு என்று நம்பு கிறீர்களா?’’ என்று. நான் பதில் கூறுவதற்குள் அவரே ஒரு கதையையும் கூறினார்.

அவருடைய தந்தை ஆர்.என். செட்டூர், பாரத ஸ்டேட் வங்கியில் தலைமை நிர்வாகியாக இருந்தவர். அவரும் அவரு டைய வங்கி நண்பரும் திருவனந்த புரத்தில் பணி நிமித்தமாக ஒரு ஹோட் டலில் தங்கியிருந்தனர். அந்த ஹோட்ட லும் பாரம்பரியமானது. அதிகாலை 3 மணிக்கு செட்டூர் தங்கியிருந்த அறைக் கதவை யாரோ படபடவென்று தட்டினார்கள். செட்டூர் விரைந்து சென்று கதவைத் திறந்தார். உடன் வந்த நண் பர்தான் உடலெல்லாம் வேர்க்க விறு விறுக்க வந்திருந்தார். பயத்தில் உடல் வெளுத்திருந்தது. சரியாக பேசக்கூட முடியாமல் தடுமாறினார். உங்கள் அறை யிலேயே படுத்துக்கொள்கிறேன், அனுமதியுங்கள் என்று கெஞ்சினார். அவரை அறைக்குள் அழைத்துக் கொண்ட பிறகு என்ன நடந்தது என்று கேட்டார். கொஞ்சம் பிராந்தியைக் குடிக் கக் கொடுத்து அவருடைய பயப் பிராந்தியை ஓரளவுக்குக் குறைத்தார். தூங்கிக் கொண்டிருந்த அவருடைய காலை யாரோ அழுத்திப் பிடிப்பதைப் போல உணர்ந்து கண் விழித்துப் பார்த் திருக்கிறார். உடலெல்லாம் தெரியும் வரை யிலான சல்லாத் துணியணிந்திருந்த ஐரோப்பியப் பெண்தான் காலைப் பிடித்துவிட்டார். பிறகு புன்முறுவல் பூத்துவிட்டு கதவருகில் சென்று மறைந்துவிட்டார்.

அடுத்த நாள் காலையில் ரூம் பையன் டீயோடு வந்தான். அவனிடம் அந்தப் பெண் பற்றிக் கேட்டனர். அந்த அறையில் அந்தப் பெண் காதலனோடு இருந்ததைப் பார்த்துவிட்ட அவளுடைய கணவன் அங்கேயே கொலை செய்துவிட்டான். அவர் அவ்வப்போது அறைக்கு வந்து செல்கிறார் என்று தெரிந்து கொண்டனர். அன்றிலிருந்து அவ்விருவரும் சொர்க்கம், நரகம், ஆவி என்று எல்லாவற்றையும் நம்பத் தொடங்கினர்.

அடுத்த தலைமுறையிடம் சாவி!

பார்ப்பதற்கு சின்னப் பையனைப் போலவே இருக்கும் சேகர் தத்தாத்ரி மிகச் சிறந்த படைப்பாளி. கேரளத்தின் ‘அமைதிப் பள்ளத்தாக்கு’ (சைலண்ட் வேலி) தொடர்பாக அவர் தயாரித்த ஆவ ணப் படம் மிகச் சிறந்த வரவேற்பைப் பெற்றது. அடுத்து ‘டிஸ்கவரி சேனல்’ நிறுவனத்துக்காக ‘மான்சூன்ஸ்’ என்ற தலைப்பில் பருவ மழையைப் பற்றி படம் எடுக்கும் வாய்ப்பைப் பெற்றார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் பருவ மழைக் காலத்தில் நீர்நிலைகளில் உற்சாகமாக நடனமாடிய வண்ணம் கூடும் ஆயிரக்கணக்கான சரச நாரைகள் குறித்துப் புத்தகம் எழுதியிருக்கிறார் தியடோர் பாஸ்கரன்.

புத்தகத்தின் தலைப்பு ‘சரச நாரைகளின் நாட்டியம்’. (Dance of Sarus) சுமார் 5 அடி 11 அங்குலம் உயரம் இருக் கும் ஆண் சரச நாரை நாட்டியமாடிய படியே தனக்கு ஏற்ற பெண் நாரையைத் தேடும். தகுந்த ஜோடி கிடைத்ததும் அத னுடன் உற்சாகமாக நடனமாடும். அதன் மீது அன்பைச் சொரியும். உச்சக் கட்ட மாக, பெண் நாரை இறந்தால் ஆண் நாரை அந்த ஏக்கத்திலேயே உணவு உண் ணாமல் இருந்து உயிரை விட்டுவிடும். எனவே, நல்ல காதலன் அல்லது கணவன் சரச நாரையைப் போல இருக்க வேண்டும் என்று இலக்கியங்களிலும் இது எடுத் தாளப்பட்டிருக்கிறது. வன உயிரினங் களைக் காப்பதில் மிகுந்த அக்கறையும் அறிவும் நிரம்பப்பெற்ற தியடோர் பாஸ் கரன் இந்நூலை எழுதியதுடன் வெளி யீட்டு விழாவில் முதல் பிரதியைத் தன்னுடைய அண்ணன் மகன் தயாள னிடம் அளிக்க ஏற்பாடு செய் திருந்தார். வன உயிர்களைக் காப்பதி லும் இயற்கையை ஆராதிப்பதிலும் சித்தப்பாவின் அடிச்சுவட்டில் பயணிக் கிறார் தயாளன்.

எனவே வாழையடி வாழையாக இந்த மரபு தொடர வேண்டும் என்பதை உணர்த்தும் விதத்தில் தயாளனைத் தேர்வு செய்திருக்கிறார் பாஸ்கரன். அது மட்டுமல்ல, திய டோர் பாஸ்கரனைப் போலவே ஜிப்பா உள்ளிட்ட தனி ஆடைகளை அணிகிறார்.

தியடோர் பாஸ்கரன் பல துறைகளின் ஆர்வலர். வன உயிர்க் காதல் அதில் ஒன்று. பழைய தமிழ் திரைப்படங்கள் தொடர்பாக அவர் ‘பாம்பின் கண்’ (Eye of the Serpent) என்ற பெயரில் படம் எடுத் தார். அதற்கு தேசிய விருது கிடைத்தது. அவர் எழுதிய முக்கியமான புத்தகங் களில் ஒன்று இன்னும் சொல்லப் போனால் கடந்த 25 ஆண்டுகளில் வெளி யான புத்தகங்களில் முக்கியமானது ‘மெசேஜ் பேரர்ஸ்’ (Message Bearers). தமி ழகத்தைச் சேர்ந்த அரசியல் இயக்கங் கள் தங்களுடைய கருத்துகளை மக்களிடம் எடுத்துச் செல்ல எப்படி நாடக மேடை களையும் வெள்ளித் திரையையும் பயன்படுத்தின என்பதை விவரிக்கிறது அந்நூல். நாட்டின் அரசியல், வரலாற் றைத் தெரிந்துகொள்ள விரும்பும் அனைவரும் படித்தாக வேண்டிய நூல். தேவைப்பட்டால் இதை மறுபதிப்பும் செய்ய வேண்டும்.

பாஸ்கரனுக்கு ஆர்வம் ஊட்டும் இன்னொரு துறை தமிழ் கடிதத்துறை. தமிழ்ச் சமுதாயத்தைப் பற்றி கடிதங்கள் வாயிலாகப் பல தகவல்களைப் பெற முடிகிறது. முகப்பேரில் ரோஜா முத் தையா செட்டியார் நூலகப் பராமரிப்பி லும் அவருடைய பங்களிப்பு பெரியது. சிகாகோ பல்கலைக்கழகத்தின் தாராள நன்கொடை காரணமாக, ரோஜா முத் தையா திரட்டிய நூல்கள் செட்டிநாட்டில் புழுதிபடர்ந்து மிகச் சிலரால் மட்டும் படிக்கப்பட்ட நிலைமாறி ஏராளமான ஆய் வர்களுக்கு விருந்தாகக் கிடைக்கிறது. தமிழ்ச் சமூகம் பற்றிய ஆய்வாளர் களுக்கு உதவும் ஆய்வு மையமாக அந்நூலகம் திகழ்கிறது.

தமிழ்நாட்டு வட்டத்தின் தலைமை தபால் அதிகாரியாகப் பணியாற்றிய திய டோர் பாஸ்கரன், அந்த அலுவலகத் திலேயே இருந்த சென்னை மாநகரின் முதல் எலெக்ட்ரிக் திரையரங்கக் கட்டிடத் தைப் புதுப்பித்து, எதிர்காலச் சந்ததியின ரின் பயன்பாட்டுக்குத் தந்திருக்கிறார். வார்விக் மேஜர் ரெஜினால்ட் ஐர் என்பவர்களுக்குச் சொந்தமானது அந்த எலெக்ட்ரிக் தியேட்டர். 1913 முதல் ஊமைப் படங்கள் அதில் திரையிடப்பட் டன. 1915-ல் தலைமைத் தபால் அதிகாரி யின் அலுவலகத்தின் ஒரு பகுதியானது. தியடோர் பாஸ்கரன் 1998-ல் அதைப் பழுது பார்த்து, புதுப்பித்து தபால் தலை கண்காட்சி அரங்காக மாற்றியிருக் கிறார்.

தபால்தலை சேகரிப்போருக்கு அந்தக் கட்டிடம் இப்போது பயன்படு கிறது. பழைய மெட்றாசின் அடையாளச் சின்னமான அது இப்போதும் அதே நிலையில் பராமரிக்கப்படுவது மகிழ்ச் சிக்குரியது.

- சரித்திரம் பேசும்…

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

19 mins ago

மாவட்டங்கள்

11 mins ago

க்ரைம்

50 mins ago

தமிழகம்

53 mins ago

இந்தியா

57 mins ago

இந்தியா

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

கல்வி

1 hour ago

மாவட்டங்கள்

2 hours ago

மேலும்