வுடி ஆலன் 10

By ராஜலட்சுமி சிவலிங்கம்

அமெரிக்காவைச் சேர்ந்த உலகப்புகழ் பெற்ற தயாரிப்பாளர், இயக்குநர், நகைச்சுவை நடிகர் என பன்முகத் திறன் கொண்ட வுடி ஆலன் (Woody Allen) பிறந்த தினம் இன்று (டிசம்பர் 1). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l அமெரிக்காவின் ப்ரூக்ளின் நகரில் யூதக் குடும்பத்தில் பிறந்தவர் (1935). ஆலன் ஸ்டீவன் கொனிக்ஸ்பெர்க் இவரது இயற்பெயர். தந்தை பொற்கொல்லர், டாக்ஸி டிரைவர். முதன் முதலாக ஐந்து வயதில் பார்த்த ஸ்னோ ஒயிட் அன்ட் தி செவன் ட்வார்ஃப்ஸ் என்ற திரைப்படம் அப்போதே பாலகனுக்கு மிகவும் பிடித்துவிட்டது.

l எட்டு வருடங்கள் ஹீப்ரு பள்ளியில் படித்தார். படிப்பை விட விளையாட்டில்தான் ஆர்வம் இருந்தது. இயல்பிலேயே நகைச்சுவை உணர்வு இரண்டறக் கலந்திருந்தது.

l ‘வுடி ஆலன்’ என்ற பெயரில் தன்னை அறிமுகம் செய்துகொண்டார். கிளாரினெட் இசைப்பதில் பயிற்சி பெற்றவர். அவ்வப்போது மன்ஹாட்டனில் இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வந்தார். 17-வது வயதில் ‘ஹேவுட் ஆலன்’ என தன் பெயரை மாற்றிக்கொண்டார். நியுயார்க் பல்கலைக்கழகத்தில் தகவல் தொடர்பு மற்றும் திரைத்துறை குறித்து பயின்றார்.

l ஹர்ப் ஷ்ரைனர் என்ற நகைச்சுவை நடிகருக்கு முழுநேர எழுத்தா ளராக பணிபுரிவதிலிருந்து இவரது திரைப்பயணம் தொடங்கியது. 19-வது வயதில் தொலைக்காட்சிகளுக்கு நாடகங்கள் எழுதிகொடுத்தார். 1961-ல் மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார்.

l ‘தி நியுயார்க்’ பத்திரிகையில் சிறுகதைகள் எழுதினார். 1966-ல் இவர் எழுதிய ‘டோன்ட் ட்ரிங்க் தி வாட்டர்’ என்ற நாடகம் திரைப்பட மாகத் தயாரிக்கப்பட்டது. இதைத் தொலைக்காட்சிக்காக, தானே இயக்கி நடித்தார்.

l இவர் எழுதிய ‘பிளே இட் அகைன் சாம்’ தொலைக்காட்சித் தொடரும் திரைப்படமாக தயாரிக்கப்பட்டது. 1965-ல் ‘வாட்ஸ் நியு புசிகாட்’ என்ற திரைப்படத்துக்கு முதல் முதலாகத் திரைக்கதை எழுதினார். 1966-ல் ‘வாட்ஸ் அப் டைகர் லில்லி’ என்ற திரைப்படத்தை முதன் முதலாக இயக்கினார்.

l 1969-ல் ‘ஆலன் டேக் தி மனி அன்ட் ரன்’ என்ற திரைப்படத்தை இயக்கி அதில் நடித்தார். விமர்சன ரீதியாகப் பரவலான பாராட்டுகளைப் பெற்றது. தொடர்ந்து பல படங்களை இயக்கினார். இவர் இயக்கிய, மிகவும் பிரபலமான ‘ஆனி ஹால்’ திரைப்படம் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகை, சிறந்த மூலக்கதை, சிறந்த இயக்குநர் ஆகியவற்றுக்கான 4 ஆஸ்கர் விருதுகளை வென்றது.

l இப்படம் அமெரிக்கன் ஃபிலிம் இன்ஸ்ட்டிட்யூட்டின் 100 சிறந்த திரைப்படங்களில் 35-வது இடத்தை பெற்றது. 1979-ல் வெளிவந்த இவரது ‘மன்ஹாட்டன்’ திரைப்படம் உலகம் முழுவதும் பிரபலமடைந்தது. நியுயார்க் மக்களைப் பற்றி இவர் தயாரித்த குறும்படங்கள் அமெரிக்காவில் சக்கைப்போடு போட்டன.

l சர்வதேசத் திரைப்பட விழாக்களில் இவரது பல படங்கள் திரையிடப்பட்டன. 2010-ல் இவரது படைப்புகள் ஒலி புத்தகமாக வெளியானது. இவை சிறந்த ஒலி புத்தகங்களுக்கான கிராமி விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டன. 23 முறை ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார். மூன்று முறை மூல திரைக்கதைக்கும் ஒரு தடவை சிறந்த இயக்குநருக்காகவும் இந்த விருதை வென்றுள்ளார்.

l பிரிட்டிஷ் அகாடமியின் பாஃப்டா விருதை 9 முறை பெற்றுள்ளார். ‘அனீ ஹால்’, ‘மன்ஹாட்டன்’, ‘ஹன்னா அன்ட் ஹர் சிஸ்டர்ஸ்’ மற்றும் ‘மிட்நைட் இன் பாரீஸ்’ ஆகியவை இவரது குறிப்பிடத்தக்கத் திரைப்படங்கள். சிறு வயதில் அடிக்கடி இவரது அம்மா கூறிய, ‘நேரத்தை வீணாக்காதே’ என்ற அறிவுரையை இன்றும் பின்பற்றி வரும் வுடி ஆலன் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

சினிமா

6 hours ago

இந்தியா

7 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

மேலும்