ராபர்ட் வான் டி கிராஃப் 10

By ராஜலட்சுமி சிவலிங்கம்

அமெரிக்க இயற்பியலாளர், கண்டுபிடிப்பாளர்

அமெரிக்க இயற்பியலாளரும், கண்டுபிடிப்பாளருமான ராபர்ட் ஜேமிசன் வான் டி கிராஃப் (Robert Jemison Van de Graaff) பிறந்த தினம் இன்று (டிசம்பர் 20). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# அமெரிக்காவின் அலபாமா மாநிலம் டஸ்கலூசா நகரில் (1901) பிறந்தார். பள்ளியில் படிக்கும்போது, கால்பந்து பயிற்சி பெற்றார். ஒருமுறை, விளையாடும்போது கால் முறிந்ததால் பல மாதம் ஓய்வில் இருந்தார். அப்போது இன்ஜின்கள் குறித்து பல நூல்களைப் படித்தார்.

# அலபாமா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பயின்றார். இங்கும் கால்பந்து அணியில் இணைந்து விளையாடி வந்தவர், பிறகு அதை விட்டுவிட்டு, படிப்பில் முழு கவனம் செலுத்த தொடங்கினார். விடுமுறை நாட்களில் நீராவிப் படகு கட்டும் இடத்தில் வேலை செய்தார். கன்வேயர் மூலம் இரும்புத் தாதுவை தரப்படுத்தும் முறையைக் கண்டறிந்தார்.

# மெக்கானிகல் இன்ஜினீயரிங்கில் முதுகலைப் பட்டம் பெற்றார். பாரீஸில் 1924-ல் மேரி க்யூரி, அணுக்கருவின் சில குறிப்பிட்ட ஆற்றல் குறித்து செயல்முறை விளக்கம் அளிப்பதைக் கேட்டார். இதனால் கவரப்பட்ட இவர் அணு ஆற்றல் குறித்த ஆய்வுகளில் நாட்டம் கொண்டார்.

# இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்டு குயீன்ஸ் கல்லூரியில் 1928-ல் முனைவர் பட்டம் பெற்றார். அணு ஆராய்ச்சிகளில் பயன்படுத்தும் உயர் வேக துகள்கள் பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டார். மின்னியல் ஆக்ஸிலரேஷன் துறையிலும் பல மேம்பாடுகளை செய்தார்.

# அமெரிக்கா திரும்பியதும், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பால்மர் இயற்பியல் ஆய்வகத்தில் நேஷனல் ரிசர்ச் ஃபெல்லோவாக பணியாற்றினார். பிறகு இயற்பியல் பேராசிரியராகவும் பணியாற்றி னார்.

# ஆராய்ச்சிகளுக்கு நிதி திரட்ட, கெல்வின் வகை உயர் மின்னழுத்த ஜெனரேட்டரை மேம்படுத்தும் முயற்சியை தொடங்கினார். கடுமையாக முயன்று பல்வேறு விதங்களில் அதை மேம்படுத்தினார். இந்த ஜெனரேட்டர் குறித்து நியூயார்க்கில் 1931-ல் செயல்முறை விளக்கம் அளித்தார்.

# மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தின் அழைப்பை ஏற்று அங்கு சேர்ந்தார். அங்கு தனது ஜெனரேட்டரில் தொடர்ந்து பல்வேறு மாற்றங்களை செய்து அதன் திறனை மேம்படுத்தினார். இறுதியாக, 7 மில்லியன் வோல்ட் உற்பத்தி செய்யும் 43 அடி உயர ஜெனரேட்டரை உருவாக்கினார். இது நாடு முழுவதும் பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக இடம்பெற்றது.

# இந்த ஜெனரேட்டருக்கு 1935-ல் உரிமம் பெற்றார். மருத்துவப் பயன்பாட்டு எக்ஸ்-ரேக்களுக்கான ஜெனரேட்டர் உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் பயன்பாடுகளுக்கும் இது பயன்பட்டது. 2-ம் உலகப் போரில் இவரது ஜெனரேட்டரை பயன்படுத்தி கடற்படை தளவாடங்களை எக்ஸ்-ரே ஆய்வு செய்வதற்கான பொறுப்பில் நியமிக்கப்பட்டார்.

# மசாசூசெட்சில் ஹை வோல்டேஜ் இன்ஜினீயரிங் கார்ப்பரேஷன் (ஹெச்விஇசி) என்ற நிறுவனத்தை 1946-ல் தொடங்கினார். இந்நிறுவனம் வான் டி கிராஃப் ஜெனரேட்டர்கள், ஆக்ஸிலரேட்டர்கள் தொடர்பான பல புதிய சாதனங்களை உற்பத்தி செய்தது.

# இவரது பல கண்டுபிடிப்புகள் அணு ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமைந்தன. உடல்நிலை பாதிக்கப்பட்டதால் 1960-ல் பணி ஓய்வு பெற்றார். முக்கியத்துவம் வாய்ந்த பல சாதனங்களைக் கண்டுபிடித்த வான் டி கிராஃப் 66-வது வயதில் (1967) மறைந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

வணிகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இணைப்பிதழ்கள்

3 hours ago

க்ரைம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

உலகம்

5 hours ago

இந்தியா

7 hours ago

சினிமா

6 hours ago

மேலும்