இன்று அன்று | 19 நவம்பர் 1925: இசை மேதை சலில் சவுத்ரி!

By சரித்திரன்

இந்தியத் திரையுலகம் முழுவதும் அறியப்பட்ட திரைப்படக் கலைஞர்களில் ஒருவர் சலில் சவுத்ரி.

மேற்கு வங்கத்தின் 24-பர்கனா மாவட்டத்தில் 1925 நவம்பர் 19-ல் பிறந்தவர். அசாம் தேயிலைத் தோட்டத்தில் அவரது இளமைக் காலம் கழிந்தது.

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் பாடல்களும், அவரது தந்தை சேகரித்துவைத்திருந்த மேற்கத்திய இசை ரெக்கார்டுகளும் அவருக்குள் இயல்பாகவே இசை ரசனையை வளர்த்தன. வங்காள மொழித் திரைப்படங்களுக்கு இசையமைக்கத் தொடங்கினார். 1950-களின் தொடக்கத்தில் இந்தித் திரையுலகத்துக்குள் நுழைந்தார்.

பல்வேறு இசை வடிவங்களிலும் அவருக்கு இருந்த ஆழ்ந்த ஞானம், அவரது பாடல்களில் வெளிப்பட்டது. மலையாளத் திரைப்படமான ‘செம்மீன்’ மூலம் தென்னிந்திய ரசிகர்களுக்கும் இசை விருந்து படைத்தார்.

பாலுமகேந்திரா முதன்முதலில் தமிழில் இயக்கிய ‘அழியாத கோலங்கள்’ படத்துக்கும் தனது இசையால் மேன்மை சேர்த்தார். 1995-ல் மறைந்தார்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

6 hours ago

சினிமா

12 mins ago

இந்தியா

19 mins ago

இந்தியா

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

வணிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்