ட்வீட்டாம்லேட்: காயும் வெயில்... கலங்கும் நெட்டிசன்கள்

By செய்திப்பிரிவு

கத்தரி தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் தமிழகத்தை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. கோடை வெயில் வெளியே கொளுத்த உள்ளுக்கு கொஞ்சம் குளிர்பானங்கள், பழ ஜூஸ், ஐஸ்கிரீம், இளநீரை தள்ளுவது போல, வெளியில் காயும் வெயிலுக்கு இணையத்தில் சூடாகின்றனர் நெட்டிசன்கள்.

வெயில் தாக்கத்தால் சமூக வலைதளங்களிலும் தகராறுகள் அதிகமாகி வருகின்றன. விவாதங்கள் காரசாரமாகின்றன. அத்தகைய சூடான மற்றும் சூட்டைத் தணிக்கும் 'வெயில்' குறித்த கருத்துப் பகிர்வுகள் இன்றைய ட்வீட்டாம்லேட்டில் இடம்பெறுகின்றன.

SivaJi Sankar ‏@sivajisiragukal - இரு சமக்குறியிட்ட சாரளத்தில் நீட்டிய கரங்கள் பரிகசிக்கின்றன. முச்சமகுறியிட்ட ஆண்டனாவில் அமர்ந்த காகங்கள் பேசி கொள்கின்றன - சென்னை சரியான சூடு.

கரிகாலன் ‏@DiNationS - தலையில ஒரு ஏசியை மாட்டிக்கிட்டு தான் வெளில போகணும் போல... என்னா வெயில்...

தமிழ் ‏@Tamil_007 - வெயிலும் வெயில் சார்ந்த இடம் - சென்னை!!!!

நந்து Talks ‏@itzNandhu - ஹாட் சன், வெயில் கொளுத்திங் ,வேர்த்துக்கொட்டிங் #மதுரை.

புகழ் ‏@mekalapugazh - நல்லோர் ஒருவர் உளரேல்...அவர் பொருட்டு மழை பெய்யுதோ இல்லையோ...கெட்டோர் ஒருவர் உளரேல்..அவர் பொருட்டு கடும் வெயில் உண்டு போல...

Anonymous ‏@pisasukutti - காதலி போனா கூட, எப்போ திரும்ப வருவான்ற கவலை இல்ல, ஆனா கரண்ட் போனா எப்போ திரும்ப வரும்ன்னு ஒரே கவலை #சம்மர்.

கருணை மலர் ‏@karunaiimalar - லெமன்+புதினா = மின்ட் ஜூஸ். செம காம்பினேஷன். டேஸ்ட் நல்லா இருக்கும். வெயில் காலத்துக்கு உடம்புக்கும் குளிர்ச்சி. ட்ரை பண்ணி பாருங்க :-)

கேள்வியாளன் ‏@kelviyalan - இறந்தாவது ஐஸ் பெட்டிக்குள் அமர்ந்து விட ஆசைப்படும் அளவிற்கு வெயில் அடிக்கிறது.

புன்னகைக்காரன் ‏@IAnand21 - ஒருத்தன் அருப்பேங்கிரான் ஒருத்தன் கிழிப்பேங்கிரான், இன்னொருத்தன் நா வீட்டுக்கு வாரதுக்குள்ள நீ சாகனும்டீங்கிரான் #வெயில் கொஞ்சம் ஜாஸ்தி தான்.

Kirukkologist ‏@santhozn - தாடி அரிச்சிங் ..... #சம்மர்.

SivaJi Sankar ‏@sivajisiragukal - குண்டு பல்ப் மாதிரி கழட்டி மாட்றதா இருந்தா எவ்ளோ நல்லாருக்கும். #வெயில் #mtc.

உளவாளி ‏@withkaran - ஏப்ரல் மாசம் வந்துச்சுன்னா வெயில கூட பொறுத்துக்கலாம் போல..ஆனா இந்த சென்னை அமிர்தா விளம்பரத்த பொறுத்துக்க முடியல.

அப்துல் காதர் மதுரை - வீட்டுக்குள்ளையே பாக்குற மாதிரி ஏதாவது வேலை இருந்தா சொல்லுங்க .....வெளிய தல காட்ட மிடீல ‪#‎வெயில்‬.

வானதி ‏@NVaanathi - வீட்டிலிருந்து வெளியே சென்றால் Fridge-லிருந்து Oven னுக்கு குடிபெயர்வதுபோல் உள்ளது.. #சம்மர்.

நட்புக்காக ‏@natpukkagaa - இந்தியாவே சம்மர் வெயில்ல சாவுது. திருநெல்வேலி மட்டும் விண்டர்ல கொண்டாடுது...செம மழை... ஒரு நாளைக்கு மேக்ஸிமம் 2 மணி நேரம் தான் வெயில்.

BabyPriya ‏@urs_priya - தட் "தண்ணிய குடி...தண்ணிய குடி" மொமன்டுகள் #வெயில்.

Champ Viky ‏@SelvaSRT - தர்பூஸ் பழத்த Lunch அ சாப்பிடனும் போல !!! இன்னாமா கொளுத்துது சென்னை வெயில். . .

வந்தியத்தேவன் ‏@kalasal - கடவுள் மட்டும் இப்ப நேர்ல வந்து உனக்கு லட்சுமி மேனன் வேணுமா, மழை வேணுமானு கேட்டா யோசிக்காம மழைதான்னு சொல்லிடுவேன்... #உஸ்ஸ் என்னா வெக்கை...

டுபாக்கூர் ‏@ootavaayan -பொன்மேனி உருகுதே என் மேனி கருகுதே......#வெயில் வாட்டுதே. ஹாஆஆஆஆஆஆன்ங்.....

சித்ரன் ரகுநாத் ‏@raghuji - பேபி கார்ன், பேபி பொட்டேட்டோ மாதிரி 'பேபி அக்னி நட்சத்திரம்' என்று ஒன்று இருக்கும்போல. #சென்னை_சம்மர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

38 mins ago

விளையாட்டு

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

சினிமா

3 hours ago

க்ரைம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

3 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

மேலும்