பிஸ்மார்க் 10

By ராஜலட்சுமி சிவலிங்கம்

ஜெர்மனியை ஒன்றிணைத்தவரும், இரும்புத் தலைவர் என்று போற்றப்பட்டவருமான ஆட்டோ வான் பிஸ்மார்க் (Otto Von Bismarck) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 1). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

 பிரஷ்யாவின் ஷான்ஹாசன் நகரில் (தற்போது ஜெர்மனியில் உள்ளது) 1815-ல் பிறந்தார். தந்தை பண்ணை உரிமையாளர். ராணுவ அதிகாரியாகவும் பணியாற்றியவர். பள்ளிப் படிப்புக்குப் பிறகு சட்டம் பயின்ற பிஸ்மார்க், தந்தையைப் போலவே பிரபுத்துவத் தோரணையுடன் வலம் வந்தார். அதே சமயம், பொதுநலனிலும் அக்கறையுடன் செயல்பட்டார்.

 சிறிது காலம் வழக்கறிஞராக பயிற்சி பெற்றார். தனது கடிதங்களில் ஷேக்ஸ்பியர், பைரன் ஆகியோரது மேற்கோள்களை அதிகம் பயன்படுத்துவார். உரையாடல் கலையில் வல்லவராகத் திகழ்ந்தார். ஆங்கிலம், பிரெஞ்ச், இத்தாலி, போலந்து மற்றும் ரஷ்ய மொழிகளில் திறன்பெற்று விளங்கினார்.

 1847-ல் உருவாக்கப்பட்ட பிரஷ்ய சட்டமன்றத்தில் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1861-ல் பிரஷ்ய மன்னர் வில்லியம் இவரை தனது தலைமை அமைச்சராக நியமித்தார். வில்லியம், பெயரளவில்தான் மன்னராக இருந்தார். அதிகாரம், நிர்வாகம், முடிவெடுத்தல் ஆகிய அனைத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் பிஸ்மார்க்.

 பிரஷ்யாவை ஐரோப்பாவின் வலுவான பேரரசாக நிறுவ 1864-ல் தொடர்ச்சியாகப் போர்களில் ஈடுபட்டார். டென்மார்க், ஆஸ்திரியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு எதிராக போர் தொடுத்தார். 1862-1890 காலக்கட்டத்தில் முதலில் பிரஷ்யாவையும் பின்னர் ஜெர்மனியையும் இவர் ஆண்டார்.

 ‘இரும்புத் தலைவர்’ என்று அழைக்கப்பட்ட இவரது தலைமையில்தான் ஜெர்மனி ஒன்றிணைக்கப்பட்ட, நவீன பேரரசானது. ஜெர்மனியில் தனித்தனியாக இருந்த 39 மாநிலங்களை தனது சாதுர்யத்தால் ஒரே பிரஷ்யத் தலைமையின் கீழ் ஒன்றிணைத்தார். பல போராட்டங்களுக்கு பிறகு, ஜெர்மன் பேரரசின் பிரதமரானார்.

 ஜெர்மனி ஒன்றிணைந்ததும் நாட்டு நலனில் கவனம் செலுத்தத் தொடங்கினார். இவரது வெளியுறவுக் கொள்கைகளின் காரணமாக ஜெர்மனி அபார வளர்ச்சி கண்டது. 1889-ல் முதியோர், ஊனமுற்றோர் காப்பீடு மசோதாவை அறிமுகம் செய்தார்.

 முதியோர் ஓய்வூதியம், முதலாளிகளுக்கு சமமாக தொழிலாளர்களுக்கு காப்பீடு ஆகியவற்றை அறிமுகப்படுத்தினார். 70 வயதான தொழிலாளர்கள், விவசாயிகள், கைவினைஞர்கள், தொடக்கநிலை பணியாளர்கள் அனைவருக்கும் பாரபட்சமின்றி ஓய்வூதியம் வழங்கினார்.

 மாநில அரசுகள் இத்திட்டங்களை நேரடியாக மேற்பார்வை செய்தன. பிரஷ்யாவின் அதிபர், அமைச்சர் போன்ற பதவிகளிலும் நீடித்தார்.

 ஜெர்மனியில் ஏராளமான சீர்திருத்தங்களை செய்ததுடன் தனது பதவிக் காலத்திலும் அதற்கு பின்னரும்கூட ஜெர்மனி அரசியலிலும் சர்வதேச அரசியலிலும் பெரும் செல்வாக்குடன் விளங்கினார்.

 1860 முதல் 1890 வரை ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய அரசியல் விவகாரங்களில் பெரும் ஆதிக்க சக்தியாக விளங்கிய ஆட்டோ வான் பிஸ்மார்க் 83 வயதில் (1898) மறைந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

47 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இலக்கியம்

7 hours ago

தமிழகம்

2 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்