சாம் வால்டன் 10

By ராஜலட்சுமி சிவலிங்கம்

உலகப் புகழ்பெற்ற வால் மார்ட், சாம்ஸ் கிளப் ஆகியவற்றின் நிறுவனர் சாமுவேல் மோர் வால்டன் (Samuel Moore Walton) பிறந்த தினம் இன்று (மார்ச் 29). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* அமெரிக்காவின் ஓக்லஹாமா மாநிலத்தில் விவசாயக் குடும்பத்தில் (1918) பிறந்தார். வீட்டில் இருந்த பசுவிடம் பால் கறந்து புட்டிகளில் அடைத்து விற்பது, செய்தித்தாள் விநியோகிப்பது ஆகிய வேலைகளை முடித்து விட்டு, பள்ளிக்கூடம் சென்றுவிடுவான் சிறுவன் சாம். படிப்பிலும் சிறந்து விளங்கினான்.

* 8-ம் வகுப்பு படிக்கும்போது ஈகிள் ஸ்கவுட் சேவைப் படைக்குத் தேர்வு செய்யப்பட்டார். மாநில கால்பந்து அணிக்கு தலைமை வகித்தார். ஓட்டப் பந்தய வீரராகவும் பிரகாசித்தார்.

* சேமித்த பணத்தைக் கொண்டு, மிசோரி பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பொருளாதாரப் பட்டம் பெற்றார். ஜே.சி.பென்னி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அங்கு ஒன்றரை ஆண்டு பணிபுரிந்து தொழில் நுணுக்கங்களைக் கற்றார்.

* 1942-ல் ராணுவத்தில் சேர்ந்து கேப்டன் பதவி வரை உயர்ந்தார். பின்னர் ஒரு பிரபல விற்பனை நிலையத்தின் விநியோக உரிமையை பெற்றார். 6 மாநிலங்களில் இந்த விற்பனை அங்காடிகள் அதிக லாபம் ஈட்டி முதலிடம் பெற்றன. ஏராளமான ரகங்கள், மலிவு விலை ஆகியவைதான் இவரது வெற்றி ரகசியங்கள்.

* கடையை வாடகைக்கு விட்டவரிடமே நல்ல லாபத்தில் அந்த வியாபாரத்தை விற்றுவிட்டு வேறொரு கடையை வாங்கினார். கடையைப் புதுப்பிக்க வேண்டியிருந்ததால், ‘புதுப்பித்தலுக்கு முந்தைய தள்ளுபடி விற்பனை’ என்று அறிவித்தார். விற்பனை பெருகியது.

* இதுபோல பல உத்திகளை செயல்படுத்தி வெற்றிகண்டார். செல்ஃப் சர்வீஸ் சேவையை அறிமுகப்படுத்தினார். நாடு முழுவதும் கிளைகள் திறந்தார். அமெரிக்காவின் நம்பர் ஒன் அங்காடியாக அது வளர்ந்தது.

* ரோஜர்ஸ், அர்கன்சாஸ் ஆகிய இடங்களில் 1962-ல் வால் மார்ட் டிஸ்கவுன்ட் சிட்டி ஸ்டோர் தொடங்கினார். தற்போது 6 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இங்கு வேலை செய்கின்றனர்.

* அடுத்து, ஸ்டீஃபன் டெஸ்பாச் நிறுவனம் தொடங்கப்பட்டது. இதுவும் மகத்தான வெற்றி கண்டது. அமெரிக்கா முழுவதும் வால்மார்ட் சங்கிலித் தொடர் கடைகள் தொடங்கப்பட்டன. பல நாடுகளிலும் இது பரவியது.

* சிறு ஊர்களிலும் தன் கடைகளைத் தொடங்கினார். 1998-ல் டைம்ஸ் பத்திரிகை 20-ம் நூற்றாண்டின் செல்வாக்கு மிக்க நபராக இவரை தேர்ந்தெடுத்தது. ‘பிரெசிடென்ஷியல் மெடல் ஆஃப் ஃப்ரீடம்’ பதக்கம் பெற்றார். ‘சில்லறை வர்த்தகத்தில் நம்பர் ஒன் நிறுவனம்’ என்று போர்ப்ஸ் இதழில் தொடர்ச்சியாக 8 முறை அங்கிகரிக்கப்பட்டது வால்மார்ட்.

* இந்த நிறுவனத்தின் ஒவ்வொரு கிளையும் ஒரு மாணவரைத் தேர்ந்தெடுத்து கல்லூரியில் சேர்ந்து படிக்க உதவுகிறது. அமெரிக்காவின் சிறந்த தொழிலதிபரும் வறுமை நிலையில் இருந்து கோடீஸ்வரரானதோடு லட்சக்கணக்கானவர்களை முன்னேற வைத்த சாம் வால்டன் 74 வயதில் (1992) மறைந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

3 mins ago

க்ரைம்

9 mins ago

க்ரைம்

18 mins ago

இந்தியா

14 mins ago

இந்தியா

44 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்