நெட்டிசன் நோட்ஸ்: நா. முத்துக்குமார் பிறந்ததினம் - அவன் அடைந்த உயரத்தில் அவன் வசிக்கவே இல்லை

By செய்திப்பிரிவு

தமிழ் திரையுலகில் ஆஸ்தான கவிஞராக விளங்கிய மறைந்த  நா. முத்துக்குமாருக்கு இன்று 44வது பிறந்த தினம். இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பலரும் அவரது கவிதைகளையும், பாடல் வரிகைகளை பதிவிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

 

BLACK

 

எந்த ஊரில் கேட்டாலும்

கரகரப்பாவே இருக்கிறது

இஞ்சி மரப்பா விற்பவனின் குரல்..!

-நா.முத்துக்குமார்

 

LemurianThiraikkalam

 

வறியவன் வாழ்க்கை, இலை போல என்ற போதிலும்,

சருகுகள் ஒரு நாள் உரமாகும்..

 

மஞ்சப்பை

 

 

சுடலையேகி

வேகும் வரை

சூத்திரம் இது தான்

சுற்றுப் பார்..,

 

உடலை விட்டு

வெளியேறி

உன்னை நீயே

உற்றுப் பார்.

 

 

Karthik

 

"புறாக்கள் வளர்க்கும் எதிர்வீட்டுக்காரன் என்னிடம் இருந்து பறிக்கிறான் பூனை வளர்க்கும் சுதந்திரம்."

-நா முத்துக்குமார்

 

கார்குழலி

 

முற்றுப்புள்ளி அருகில் நீயும்

மீண்டும் சின்னப் புள்ளிகள் வைத்தால்

முடிவென்பதும் ஆரம்பமே

 

வளைவில்லாமல் மலை கிடையாது

வலியில்லாமல் மனம் கிடையாது

வருந்தாதே வா

 

நா. முத்துக்குமார்

 

 

யாத்திரி

 

 

கூண்டுக்குள் இருக்கும் பறவை நான்,

என் கண்ணிலே

ஒரு துண்டு வானம் -

நீதானடி!

 

ரொம்பப்பிடித்த கவிஞர்/பாடலாசிரியர். இன்னும் ஆயுள் நீண்டிருக்கலாம்.

 

 

தேனி பா. வடிவேல்

 

#HBD_நா_முத்துக்குமார்

 

♥அப்பாவின் சாயலில் உள்ள

பெட்டிக்கடைக்காரரிடம்

சிகரெட் வாங்கும்போதெல்லாம்

விரல்கள் நடுங்குகிறது...

 

Nanthakumar

 

உனக்கும் எனக்கும் பிடித்த பாடல் தேநீர் கடையில் பாடிக் கொண்டிருக்கிறது...

 

கடைசிப் பேருந்தையும் விட்டு விட்டு கேட்டுக் கொண்டிருக்கிறது காதல்

 

நர்சிம்

 

"அவன் அடைந்த உயரத்தில் அவன் வசிக்கவே இல்லை" எனும் ராமின் வார்த்தைகள் அத்தனை உண்மை. நாளைகளின் கவியரசன் என்ற நேற்றுகளைக் கொண்டவன். அந்த நேற்றோடே போனவனும். பேரன்பு,பெருவெற்றி,பெருமகிழ்ச்சி,பெருஞ்சோகம் என அத்தனையும் நினைவில் வந்துபோகும் ஒற்றைப்பெயர் நா.முத்துக்குமார். 

 

Manoj Karuppusamy

 

இது வரை நெஞ்சில் இருக்கும், சில துன்பங்களை நாம் மறப்போம்..

கடிகார முள் தொலைத்து, தொடுவானம் வரை போய் வருவோம்..

அடை மழை வாசல் வந்தால் கையில் குடை இன்றி வா நனைவோம்..

அடையாளம் தான் துறப்போம், எல்லா தேசத்திலும் போய் வசிப்போம்..

 

Karthik

 

நான் ஏன் நல்லவனில்லை என்பதற்கான மூன்று குறிப்புகள்

ஒன்று

நான் கவிதை எழுதுகிறேன்

இரண்டு

அதை கிழிக்காமலிருக்கிறேன்

மூன்று

அதை உங்களுக்கு படிக்கக் கொடுக்கிறேன்.

 

மாமத யானை

 

பாடலாசிரியர்கள் நடுவே நிஜ கவிஞன்.

கவிஞர்களுக்கு நடுவே ஒளி மிக்க நட்சத்திரம்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நா.முத்துக்குமார்.

 

 

MADHAVAN.M

 

கெட்டு மாய்

கவிதைகள் கிறுக்கு,

கால்கொலுசில் இசை உணர்,

தாடி வளர்த்து தவி,

எடை குறைந்து சிதை,

உளறல் வரும் குடி,

ஊர் எதிர்த்தால் உதை,

ஆராய்ந்து அழிந்து போ,

மெல்ல செத்து மீண்டு வா

திகட்ட,திகட்ட காதலி...

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

51 mins ago

விளையாட்டு

1 hour ago

தொழில்நுட்பம்

2 hours ago

சினிமா

3 hours ago

க்ரைம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

மேலும்