அம்ரிதா ப்ரீதம் 10

By ராஜலட்சுமி சிவலிங்கம்

பஞ்சாபி, இந்தி கவிஞர்

பிரபல படைப்பாளியும், சாகித்ய அகாடமி விருது பெற்ற முதல் பெண்மணியுமான அம்ரிதா ப்ரீதம் (Amrita Pritam) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 31). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

*பாகிஸ்தானின் குஜ்ரன்வாலா நகரில் (1919) பிறந்தவர். இவருக்கு 11 வயதானபோது தாய் இறந்தார். அந்த சோகமும் தனிமை உணர்வும் கவிதைகள் எழுதத் தூண்டின. தந்தை பள்ளி ஆசிரியர், சீக்கிய மதபோதகர், இலக்கிய இதழ் ஆசிரியர் என்பதால், இவரது படைப்பாற்றல் மேலும் பளிச்சிட்டது. l

*பாகிஸ்தான் பிரிவினையின்போது நடந்த வன்முறையால் ஏராளமானோர் அகதிகளாகினர். அதில் இவரது குடும்பமும் அடக்கம். லாகூரில் இருந்து டெல்லிக்கு இவர்களது குடும்பம் குடிபெயர்ந்தது.

*இவரது முதல் கவிதைத் தொகுப்பான ‘அம்ரித் லெஹ்ரான்’ 1936-ல் வெளிவந்தது. ஆரம்பத்தில் காதலும் கற்பனையும் நிறைந்த கவிதைகளைப் படைத்தார். இந்தியா - பாகிஸ்தான் தனித்தனி நாடுகளாகப் பிளவு பட்டபோது நடந்த கலவரங்களும், பல லட்சம் பேர் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வுகளும் இவரது எழுத்துப் போக்கையே மாற்றின.

*மதக் கலவரங்களால் ஏற்பட்ட அவலங்களைத் தன் படைப்புகளில் பதிவு செய்தார். முற்போக்குக் கொள்கைகளும் இவரது படைப்புகளில் அடிநாதமாக விளங்கின. கவிதை, கதைகள், நாவல்கள் தவிர, நாட்டில் நடைபெறும் முக்கியமான நிகழ்வுகளின்போது தன் கருத்துகளை கட்டுரைகள் மூலம் வெளிப்படுத்தினார்.

*தனது சொந்த வாழ்வில் நடந்த கசப்பான அனுபவங்களைக்கூட கவிதைகள், கதைகளாக வடித்தார். பெண்ணிய எழுத்தாளர் என்ற பரிமாணமும் இவருக்கு உண்டு. ‘ரசீதி டிக்கெட்’ என்ற இவரது சுயசரிதை நூல் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.

*இவரது சில நாவல்கள், திரைப்படங்களாகவும் தயாரிக்கப்பட்டு விருதுகளைப் பெற்றன. ‘நாகமணி’ என்ற இலக்கிய இதழை நடத்தினார். ஓஷோவின் சில நூல்களுக்கு முன்னுரை எழுதியுள்ளார். ஆன்மிகப் படைப்புகளிலும் சிறந்து விளங்கினார்.

*இந்தியிலும் எழுதி, இந்தி இலக்கியத்திலும் தனி முத்திரை பதித்தார். அகில இந்திய வானொலி நிலையத்தில் சில காலம் பணிபுரிந்தார். இந்தியாவில் மட்டுமல்லாது, பாகிஸ்தானிலும் இவரது படைப்புகள் போற்றப்பட்டன.

*பிரபல இசையமைப்பாளர் குல்சார் இவரது கவிதைகளுக்கு இசையமைத்து 2007-ல் ஆல்பம் வெளியிட்டார். இந்தியா, பாகிஸ்தானில் 60 ஆண்டுகளுக்கு மேலாக பஞ்சாபி மொழி இலக்கியத்தில் சிறந்த ஆளுமையாக வலம்வந்தார். இவரது படைப்புகள் ஆங்கிலம், பிரெஞ்ச், ஜப்பான் மற்றும் பல இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு, பெரும் வரவேற்பை பெற்றன.

*பஞ்சாபி, இந்தி இலக்கியத்தில் இவரது பங்களிப்புக்காக 1982-ல் இந்தியாவின் உயரிய ஞானபீட விருது, பஞ்சாப் ரத்தன் விருது, 1956-ல் சாகித்ய அகாடமி விருது, பத்ம, பத்ம விபூஷண் என பல விருதுகளைப் பெற்றார். டெல்லி, ஜபல்பூர் பல்கலைக்கழகங்கள், விஸ்வ பாரதி அமைப்பு இவருக்கு கவுரவ முனைவர் பட்டம் வழங்கின.

*பல்கேரியா, பிரான்ஸ் நாடுகளின் விருதுகளையும் பெற்றுள்ளர். பஞ்சாபி இலக்கிய விருதை பாகிஸ்தான் அரசு இவருக்கு வழங்கியது. மாநிலங்களவை உறுப்பினராக 1986 முதல் 1992 வரை பதவி வகித்தார். தலைசிறந்த கவிஞரும், பெண்ணியவாதியுமான அம்ரிதா ப்ரீதம் 86-வது வயதில் (2005) மறைந்தார்.





VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

வாழ்வியல்

2 hours ago

க்ரைம்

37 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

4 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

4 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

மேலும்