நெட்டிசன் நோட்ஸ்: யாஷிகா வெளியேற்றம் - சேராத இடம் சேர்ந்து...

By செய்திப்பிரிவு

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோவான  ‘பிக் பாஸ் 2’-வில் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பான நிகழ்ச்சியில், யாஷிகா ஆனந்த் வெளியேற்றப்பட்டார்.

கடினமான போட்டியாளராக இருந்த யாஷிகாவின் இந்த வெளியேற்றம் அந் நிகழ்ச்சியின் பார்வையாளருக்கு சற்று ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதுகுறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்....

தஞ்சைத்தமிழன்

‏"நல்ல மனம் வாழ்க; நாடு போற்ற வாழ்க", பிக் பாஸில் உங்களது யுக்திகள் பாராட்டுக்குரியது... வாழ்த்துகள் யாஷிகா...

Onerupee.net

‏கவர்ச்சி நடிகை என்னும் பிம்பத்தை அழுத்தமாகத் துடைத்து விட்டு ‘யாஷிகா’ என்கிற அற்புதமான பெண்ணின் பிம்பத்தை நமக்குள் பதிய வைத்து விட்டார். இந்த இளம் வயதில் அவரிடம் எத்தனை நிதானம், முதிர்ச்சி, பக்குவம்!

Mohana

‏மும்தாஜ் ஆகட்டும் யாஷிகாவாகட்டும் வெளிய வந்ததும் கமல்கூட பேசும்போது கொடுக்கிற speech நல்லாத்தான் இருந்திச்சு. உள்ளேயும் அப்படியே இருந்திருந்தால் பிடிச்சுப் போயிருந்திருக்குமோ என்னமோ?யாஷிகா , மகத் ஐஸு கூட சேராமல் வன்முறையைக் குறைத்திருந்தால்  வின்னராகக்கூட வந்திருப்பாங்க.

கரிகால்சோழன்

‏யாஷிகா வெளியேற்றம் சிறந்த முடிவு,

வேணு மாமாஸ்

‏யாஷிகா ஃபைனலுக்கு போனால் தமிழ்ப் பெண்களுக்கு பிக் பாஸ் டைட்டில் கிடைக்காதே.

Parisal Krishna

‏யாஷிகா Very Clever and Matured. சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடி பொண்ணே... வஞ்சகி ஐஸுவடி!

Joseph Suhasini

‏யாஷிகா வின் பண்ண வேண்டிய ஆளு

λ ર ĵ u ɴ

‏நான் யாஷிகா ஆர்மின்னு சொல்லிக்க

சந்தோஷப்படறேன் டாவ்...

என்ன பொண்ணுடா

நல்ல மனசு, தெளிவான புத்தி

தைரியமான பொண்ணு.

R   JA

‏யாஷிகா தி ட்ரு வின்னர்

ஜெஸி

‏ஐஸ் எம்மா நீ எத்தனை பேர காவு வாங்கியிருக்க தெரியுமா?

ஷாரிக்

மகத்

டேனி

சென்றாயன்

மும்தாஜ்

யாஷிகா

மணிமொழி

‏யாஷிகா ஒரு நல்ல நியாயமான போட்டியாளர். வெளியேறுவது நல்லா இல்லை.

சஞ்சனா ஸ்ரீ

‏யாஷிகா நவ் செஞ்சோற்றுக் கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா யாஷிகா

ரசனை ரித்து

‏18 வயசுக்கு யாஷிகா ரொம்ப மெச்சூர்டு. நான்லாம் அத்தனை மெச்சூர்டா இருந்தா இந்நேரம் பில் கேட்ஸ் ஆயிருப்பேன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

இந்தியா

8 mins ago

இந்தியா

15 mins ago

இந்தியா

24 mins ago

இந்தியா

34 mins ago

இந்தியா

46 mins ago

கருத்துப் பேழை

39 mins ago

கருத்துப் பேழை

47 mins ago

சினிமா

3 hours ago

கல்வி

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

மேலும்