2 மினிட்ஸ் ஒன்லி 10: பிசினஸ் பாட்ஷா

By ஆர்.ஜே.பாலாஜி

கடந்த ரெண்டு வாரமா ஆட்டோக்காரரைப் பற்றி சொல்ல ஆட்டோவுலேயே வர்றேன்னு சொல்லிட்டிருந்தேன். நம்ம ஊர்ல ஆட்டோவுல அவ்ளோ சீக்கிரமாவா வந்துட முடியும்? பக்கத்துல இருக்குற சாலையை கிராஸ் பண்ணிவிடுங்கன்னு சொன்னாக்கூட, அதுக்கே 200 ரூபா ஆவும்னு இப்பவும் சில ஆட்டோக்காரர்கள் சொல்லத்தானே செய்றாங்க.

கடந்த ரெண்டு வருஷத்தில் அப்பப்போ அமெரிக்காவுக்கு போய்ட்டு வர்ற சூழல் அமையுது. இப்படி போகிற ஒவ்வொரு முறையும் அங்கே நிறைய ஆச்சர்யங்களை பார்க்குறேன். அதில் இப்போ சொல்லியே ஆக வேண்டிய ஒரு விஷயம் என்னென்னா, அங்கே இருக்கும் ஹேர் கட் பண்ற மனிதர்ல தொடங்கி ஹோட்டல்ல வேலை பார்க்குற வெயிட்டர், வீதியை சுத்தமா பராமரிக்கிற தொழிலாளி வரை, செய்ற வேலையை ரொம்ப பெருமையா நினைக்கிறாங்க. நாம் போய் ஒரு இடத்தில் உட்கார்ந்ததும் அருகே ஒருவர் ஓடி வந்து, ‘நான் உங்களுக்கு சர்வீஸ் பண்றதுக்கு தயாரா இருக்கேன். என்ன வேணும்’னு அவ்வளவு ஈடுபாட்டோட கேட்குறாங்க. ஐயோ... நாம ஹேர் கட் பண்றோம், வெயிட்டரா இருக்கோம்னு இப்படி எந்தத் தாழ்வு மனப்பான்மையும் அவங்களுக்கு இல்லவே இல்ல.

அவர்தான் பெரியார்

தந்தை பெரியாரோட 140-வது பிறந்தநாளை கொண்டாடுற இந்த நேரத்தில் அவரால இங்கே அப்படி சில மாற்றங்கள் நடந்திருந்தாலும் இன்னும் சாதி பெயரால் ஒவ்வொருத்தரோட வேலைகளைப் பிரிச்சுப் பார்க்குற நிலை இருக்கத்தான் செய்யுது. அது சுத்தமா ஒழியணும். எந்த வேலை செஞ்சாலும் அதை விரும்பி நாமும் செய்யணும். அதுக்கு உதாரணமா நான் பார்த்த ரெண்டு ஆட்டோக்காரர்களைப் பற்றித்தான் இங்கே எழுதப் போறேன்.

இன்னைக்கு நடுத்தர குடும்பவாசிகள் பல பேருக்கு ஃபிளைட், கார், பைக் இப்படி எல்லாமுமா இருப்பது ஆட்டோதான். நான் பிறந்ததுலேர்ந்து இப்போ வரை அதிகம் ஆட்டோவுல போகிற சூழல்தான் இருக்கு.

ஏன் இந்த அச்சம்?

இங்கே சூப்பர் மார்க்கெட்லாம் அதிக ரிக்க ஆரம்பிச்ச நேரத்தில், நம்ம உள் ளூர் கடைகளை சர்வதேச சந்தை அழிக்க வந்துடுச்சுன்னு ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. அந்த மாதிரி கால் டாக்ஸி, ஓலா, ஊபர்னு வந்ததும் ஆட்டோக்காரர்கள் தொழில் நசுங்கிடுச்சு. ஒரு நாளைக்கு 500 ரூபா பார்ப்பதே பெரிய விஷயமா ஆகிடுச்சுன்னு சொல்றாங்க. இதுக்கெல்லாம் ஓலா, ஊபர் மட்டும் காரணம் இல்ல. கோடம்பாக்கத்துல இருந்து நுங்கம்பாக்கம் போக மீட்டர் போட்டா 35 ரூபாதான் வருதுன்னா கொஞ்சமும் மனசில்லாம 150 ரூபா கேட்டா எப்படி? மீட்டரை போடுங்கன்னாலும், ‘ம்ஹூம் அது கட்டுப்படியாகாது’ன்னு சொல்றது. சாதாரண மனிதர்கள் ஆட்டோ வேணாம்னு விலகுறதுக்கு இதெல்லாமும்தான் காரணம்.

 

ஆட்டோ வாசகம்

ஒருநாள் என் நுங்கம்பாக்கம் ஆபீஸ்ல இருந்து திருவான்மியூர் வீட்டுக்கு போறதுக்காக ஆட்டோ வுக்கு நின்னேன். ஒவ்வொரு ஆட்டோவா நிறுத்தினேன். எல்லாருமே 200 ரூபா ப்ளஸ்தான் கேட்டாங்க. அஞ்சாவதா ஒரு ஆட்டோக்காரர் நின்னார். ‘எவ்வளவுங்க’ன்னு கேட்டேன். ‘கண்ணாடியை பாருங்க’ன்னு முன்பக்கம் கையை நீட்டினார். பெரும்பாலான ஆட்டோ கண்ணாடியில அவங்க நேசிக்கிற எம்ஜிஆர், ரஜினி, விஜய், அஜித்னு ஸ்டார்ஸ் படம்தானே ஒட்டியிருக்கும். ஆனா இந்த ஆட்டோக்காரர் வண்டியில ஒரு ஏ4 பேப்பர்ல, ‘மீட்டருக்கு மேல் ஒரு ரூபாய்கூட கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது’ன்னு எழுதி ஒட்டியிருந்தார். ஆச்சர்யத்தோடு ஏறி அமர்ந்ததும், ‘பின் பக்கம் இன்னும் பெருசா ஒட்டியிருக்கேன் சார்’ன்னார்.

 

நாமே தொழிலாளி, நாமே முதலாளி

நாமதான் ஆட்டோவுல ஏறினதும் ஏதாவது பேச்சுக்கொடுத்துகிட்டே இருப்போமே. ‘எப்படி கட்டுப் படியாகுது’ன்னு கேட்டேன். ‘எனக்கும் முன்ன எல்லாம் ஒரு நாளைக்கு 500 ரூபா தேத்துறதே பெரிய விஷயமாத்தான் இருந்தது. அதுவும் நாளொன்னுக்கு ஏழுல இருந்து எட்டு பேர் ஏறுறதே பெரிய விஷயம். மீட்டர் போட்டு இப்படி எழுதி ஓட்ட ஆரம்பிச்சேன். தினமும் 25 பேராவது ஏறிடுறாங்க. முழுசா 1,500 ரூபா சம்பாதிக்கிறேன்’’ என்று பெருமையா சொன்னார். மேலும் அவர், ‘இப்படி செய்றதை ஓலா, ஊபர் கம்பெனியில கனெக்ட் பண்ணலாமேன்னு சிலர் கேட்டாங்க. அது எதுக்கு? கமிஷனை அவங்கக்கிட்ட கொடுக்குறதுக்கு நாமே தொழி லாளி, நாமே முதலாளின்னு இருந்துடு வோம்!’ன்னும் சொன்னார். எனக்கு பயங்கர ஆச்சர்யம். எனக்கு அவர் அன்றைக்கு ஒரு ‘பிசினஸ் பாட்ஷா’வாகத்தான் தெரிந்தார்.

இந்தத் தொடர்ல நிறைய மனிதர்களைப் பற்றி பேசிட்டு வர்றோம். பெரும்பாலும் யார் பேரையும் குறிப்பிடுறதில்ல. அப்படியும் சில பேரைத் தவிர்க்க முடியாம குறிப்பிடவும் செய்வேன். அடுத்து இப்போ நான் சொல்ற இன்னொரு ஆட்டோக்காரர் பேரு ‘ஆட்டோ அண்ணாதுரை’. இவர் ஓல்டு மகாபலிபுரம் சாலையில சொந்த ஆட்டோ ஓட்டுகிறார். ஆட்டோ ஓட்டுறது ரொம்ப பிடிக் கும். அதனால ஒசந்த வேலையை செய் றேன்னு பெருமையா சொல்லி பயணிக்கிறார்.

அது வேற லெவல்...

ஆட்டோ அண்ணாதுரை வண்டியில ஏறினா பத்துக்கும் மேற்பட்ட வார இதழ் கள், ஏழெட்டு நாளிதழ்கள், க்ரெடிட், டெபிட் கார்டு மெஷின், வைஃபை வசதி, ஆன்லைன் பணப் பரிமாற்ற வசதி, சிம்கார்டு, ரீசார்ஜ் வசதி, ஜெராக்ஸ் மெஷின் வரைக்கும் இருக்கும். லண்டன்ல இருந்து கிளம்பும்போதே ஆட்டோ அண்ணாதுரையை ஆன்லைன்ல பிடித்து ஏர்போர்ட்டுக்கு வரவழைக்கலாம். நவீன வசதிகளோடு பயணிகளுக்கு யூஸ்ஃபுல்லான ஓட்டுநராக வலம் வருகிறார். மாதத்துல ஒருநாள் ஆட்டோவுல பயணிக்கிறவங்க பேர்களை எல்லாம் மொத்தமா சேர்த்து சீட்டு குலுக்கிப்போட்டு, அதில் பரிசு கொடுக்கிற முறையும் வைத்திருக்கிறார்.

மகளிர் தினம்னா பெண்கள் இலவச பயணம் செய்யலாம். அப்துல்கலாம், இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி போன்ற பெரியவர்களோட பிறந்தநாளுக்கு இல வச பயணம்னு அவரோட சேவை வேற லெவல். பொறியியல் துறையில முதுகலை படித்தவர்கள்கூட இவர் அளவுக்கு சம்பா திக்க முடியாது. இந்த ஆட்டோ அண்ணா துரைக்கு அப்படி ஒரு வருமானம்.

தொழில் பண்ணலாம்; வேலை செய்ய லாம்னு நினைத்து உள்ளே வர்றவங்க எந்த வேலையா இருந்தாலும், பிடித்து செய்யணும். அதில் ஒரு ஸ்மார்ட்னெஸும் இருக்கணும். இந்த ரெண்டு ஆட்டோக்காரர்களும் அதை முழுமையான ஈடுபாட்டோடு செய்கிறார்கள்.

அடுத்த வாரம் இன்னொரு சுவாரஸ்யமான சம்பவத்தோடு சந்திப்போம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

23 mins ago

விளையாட்டு

50 mins ago

விளையாட்டு

52 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

59 mins ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

உலகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

மேலும்