நெட்டிசன் நோட்ஸ்: எங்கடா இருக்கு அந்த அதிசய இட்லி !!!!????

By செய்திப்பிரிவு

ஜெயலலிதா சிகிச்சையின்போது உணவுக்காக மட்டும் ரூ.1.17 கோடி செலவு; விசாரணை ஆணையத்தில் அப்போலோ நிர்வாகம் தகவல் அளித்துள்ளது. இதுகுறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்தை பதிவிட்டு வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்..

Shivakumar Samu

 

மொத்தமா ஜெயலலிதா பேர டேமேஜ் பண்றதுன்னு முடிவு பண்ணீட்டாய்ங்கே. நாம சொல்றதுக்கு ஒன்னுமில்ல. வேடிக்க மட்டும் பார்ப்போம்..!

 

'இட்லி'

 

 

மெத்த வீட்டான்

 

 

அப்போலோவில் மருத்துவம் பார்ப்பதை விட இட்லி சாப்பிடுவதுதான் காஸ்ட்லி போல !

 

James Stanly

 

ஏண்டி அவன போய் லவ் பண்ற.. 

 

அவன் அப்பல்லோல இட்லி கடை போட்ருகான்டி.

 

புத்தன்

 

ஒரு ரூபாய்க்கு இட்லி போட்ட மகராசி ஒரு கோடி ரூபாய்க்கு இட்லி சாப்பிட்டிருக்கு.

 

Raju N

 

நம்ம குடும்பத்தோட ஒட்டு மொத்த வாழ்க்கைக்கான, சாப்பாட்டுச் செலவுக்கும் 1.7 கோடி சரியாப் போயிரும்ல...

 

அத்தனை கோடி ஓவாய்க்கு அப்பிடி எந்தக் கடையில இட்லி வாங்குனாய்ங்கன்னு இந்த சி.ஆர்.சரஸ்வதியைக் கூப்பிட்டுக் கேட்டா தெரிஞ்சுடாது...!?

 

SKP KARUNA

 

அப்போல்லோ பில்லும், சினிமா ஷூட்டிங்க் பில்லும் ஒண்ணுதான்..

பூ, புஷ்பம், ஃப்ளவர்னு....

அப்பல்லோவில் அட்மிட் ஆனாலே, ஒரு சின்ன பெண் கோட் அணிந்து உங்களை வந்துப் பார்த்து என்ன சாப்பாடுலாம் பிடிக்கும்னு கேட்டுட்டுப் போகும். உடனே டயட்டிஷியன் கன்சல்டேஷன் சார்ஜ் 800 ரூபாய் ஏறிடும்.

 

Yokhesh Narayanaa

 

அம்மா உணவகத்துல ஊருக்கே இட்லி ஒரு ரூபா

 

அப்பல்லோவுல  அம்மாவுக்கே  இட்லி ஒரு கோடி ரூபா.

நல்லா சொல்லுறீங்க கணக்கு     !

Gemini

 

இட்லின்னா அவ்வளவு சாதாரணமா போச்சா! இட்லி அரிசி, முழு உளுந்து கிடைக்காத மாவு புளிக்கவே புளிக்காத , ஹோட்டலும் இல்லாத இடத்துக்கு போனாத்தான் தெரியும். விலை மதிப்பில்லாத ஒரு உணவு அது!

 

Aadhil The Danger

 

என் ஆளு அப்பவே சொல்லுச்சி, எங்கசும் போய் #இட்லி வித்தாச்சும் போழச்சிக்கலாம்னு... ம்ம்   நான்தான் கேக்கல

 

டூட்

 

சொத்து குவிப்பு வழக்க்கு மாதிரி அம்மா இட்லி தின்ன வழக்கு னு ஒரு கேஸ் போட்டா மொத்த அப்போலோவயும் தூக்கி உள்ள வைக்கலாம்

 

Gunaraja

 

தவ வாழ்க்கை வாழ்ந்தவர் சாப்பிட்ட 2 இட்லி ரூபாய் 1.17 கோடி

 

"எங்கடா இருக்கு அந்த அதிசய

இட்லி !!!!????

 

சி.பி.செந்தில்குமார்

 

ஜட்ஜ் = ஏப்பா?இட்லி சாப்ட பில் ஒரு கோடியா?

 

கைதி= அவரைப்பாக்க வந்தவங்க சாப்பிட வந்தது

 

ஜட்ஜ் = அவரைப்பாக்கதான் யாரையும் விடலையே?மொத்தத்துல அவங்க பேரை சொல்லி நீ சாப்டுட்டே?

 

பீட்டர் மாமா

 

ஜெ : ஒரே ஒரு இட்லி கெட்டி சட்னியோட ...

 

 சிங்கிள் இட்லி கெட்டி சட்னிக்கி ஒன்ரை லட்சம் பில்ல போடே ...

 

 

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

மேலும்