நெட்டிசன் நோட்ஸ்: எழுத்தாளர் பிரபஞ்சன் மறைவு - பிரபஞ்சத்தை வியாபித்திருக்க சென்று விட்டார்

By செய்திப்பிரிவு

சாகித்ய அகாதமி விருதுபெற்ற மூத்த எழுத்தாளர் பிரபஞ்சன் உடல் நலக் குறைவு காரணமாக இன்று காலை மரணமடைந்தார். அவருக்கு வயது 73.

இதனைத் தொடர்ந்து நெட்டிசன்கள் தங்கள் கருத்தை பதிவிட்டு வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு இன்றைய  நோட்ஸில்.....

 

SKP KARUNA

நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடி, மானுடத்தின் மீது ஆகப் பெரும் நம்பிக்கைக் கொண்ட மனிதர், பாண்டிச்சேரியின் வரலாற்று, இலக்கிய முகம், எங்கள் ப்ரியத்துக்குரிய எழுத்தாளர் பிரபஞ்சன் நம்மை விட்டுப் பிரிந்தார்.

அந்த மகத்தான மனிதருக்கு எனது வணக்கம்.

 

VASUGI BHASKAR

 

இந்த பிரபஞ்சம் நிச்சயம் இன்னொரு பிரபஞ்சனை ஈடு செய்யவே முடியாது.

 

எழுதுவதை கடைபிடிக்கும் படைப்பாளன் பிரபஞ்சன் காலமானார், வார்த்தைகளில்லை, கடக்க முடியாத நிலை.

 

Vetri Haky

 

ஒரு ஏற்புரயை பேசி முடிக்கும்போது இப்படிச் சொல்லி முடித்தார்

"எனக்கு நம்பிக்கை இருக்கிறது

எல்லா இரவுகளும் விடியும்" என்று எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள்.

 

இன்று அவர் நம்மிடத்தில் இல்லை

 

Professor lucifer

 

 

பிரபஞ்சத்தை வியாபித்திருக்க சென்று விட்டார்.

இதய அஞ்சலிகள் பிரபஞ்சன்

 

S.Raja

 

பிரபஞ்சன் பிரபஞ்சத்தோடு கலந்தார்

 

சதுக்க பூதம் ⟁

 

சாகித்ய அகாதமி, தமிழக மற்றும் புதுச்சேரி அரசின் சிறந்த எழுத்தாளர் விருதுகள் பெற்ற எழுத்தாளர் #பிரபஞ்சன்(73) இன்று புதுவையில் காலமானார். ஓராண்டு காலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.

 

SwaraVaithee

 

எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார். எழுத்தின் வழியே காலம் கடந்தும் நிற்பார்.

 

ச ப் பா ணி

 

 

பிரபஞ்சனின் வரிகளில் ரசித்தவை

*மணி

 

#இவ்வளவு பிரச்சனைகளுக்கு மத்தியிலும் ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது

 

r.m.murugesan.

 

 

எல்லோருக்குள்ளும்

ஓர் வாழ்க்கை இருக்கும் .

அந்த வாழ்க்கையை

எழுதுங்கள்,

 

எழுதுவதால் நீங்கள்

சமூகத்தின் மனசாட்சியை

தொடலாம்.

 

சக மனிதனுக்கு நம்மால்

நம் அன்பை எழுத்தின்

வழியே கடத்துவோம்...,

 

அதை விட வேறு

என்ன செய்து விட

முடியும் நம்மால்..?

 

#பிரபஞ்சன்

 

 

Sasuke Uchiha

 

"நம் பெண்கள் கல்யாணத்துக்குப் போவது  என்றால் அழுக்குப் பாவாடையைக் கூட மாற்றாமல் பட்டுச்சேலை உடுத்திக் கிளம்புகிறார்கள்" - பிரபஞ்சன், ஒரு தொடரில்!

இன்பக்கேணி, வானம் வசப்படும், ஆனந்தரங்கப் பிள்ளையின் டைரி - எழுத்துலக வேந்தர் பிரபஞ்சன், வாழ்க!

 

கோவை ரஹ்மான்.

எழுத்துக்கு என்றும் மரணமில்லை.

பிரபஞ்சன் புகழ் வாழும்.

 

ச ப் பா ணி

 

 

பிரபஞ்சன் காலமானார்.

வானம்பாடி பறவை ஒன்று சிறகடிப்பதை நிறுத்தியது.

 

செண்பகம்

 

 

பிரபஞ்சனின் மரணம் தமிழ் இலக்கியத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். ஏனெனில், தமிழ் இலக்கியத்தில் தவிர்க்க முடியாத எழுத்தாளுமைகளில் மிக மிக முக்கியமானவர் பிரபஞ்சன்!

 

 

Murugesan

 

 

தமிழின் தன்னிகரில்லா எழுத்தாளர் பிரபஞ்சன் இன்று 21-12-2018 இயற்கை எய்தினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

தமிழகம்

3 hours ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

42 mins ago

சினிமா

52 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

5 hours ago

மேலும்