நெட்டிசன் நோட்ஸ்: ராட்சசன் - மரண மாஸ்

By செய்திப்பிரிவு

ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலா பால் நடிப்பில் வெளிவந்துள்ள 'ராட்சசன்' படம் இந்த வாரம் வெளிவந்துள்ளது. இதுகுறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்..

கப்பல் வியாபாரி

‏ராட்சசன் - அங்கங்க ஒரு சில டெம்ப்ளேட் சீன்ஸ்லாம் இருந்தாலும் நல்ல திரில்லர் பார்த்த திருப்தி. வொர்த்.

நோபிட்டா

‏எனக்குத் தெரிஞ்சு கரண்ட்லருக்க யங் ஹீரோஸ்லயே டிபரெண்ட் டிபரெண்ட் ஸ்கிரிப்ட் சூஸ் பண்ணி நடிச்சி ஹிட் தர்றது விஷ்ணு விஷால் தான்.

நாகு

‏ராட்சசன்... தமிழ்ல ஒரு சைக்கோ படத்தைப் பார்த்து இப்படி மிரண்டது இல்ல...டோன்ட் மிஸ். ஆனா ஒரே ஒரு சீன் மட்டும் கொரியன் படத்துல இன்ஸ்பெயர் ஆகியிருக்காங்க...இரண்டு நாள் போகட்டும் அப்றம் சொல்றே..படம் பாத்து நீங்களே கூட கண்டுப்பிடிங்க..மத்தபடி தாறுமாறு படம்.

சராசரி மனிதன்

சிறந்த பின்னணி இசையைக் கொண்ட திரைப்படம்..

ஜோசப் ஜென் 

‏என்னா படம்டா #ராட்சசன் உண்மையான கோலிவுட் லெவல் .... படம்  ஆரம்பிச்ச 2 செகண்ட்ல பற்றிக் கொண்ட பரப்பரப்பு கடைசிவரைக்கும் பரபரப்பாவே இருந்துச்சு. #ஜிப்ரான் உண்மையாவே ஹாலிவுட் தரத்துல இசையமைச்சருக்காப்ள மற்றும் இயக்குனர் யார்யா நீ முண்டாசுபட்டின்னு நினைச்சா ராட்சசனா வந்து நிக்குற. லவ்யூமேன்

Prasanth

‏#ராட்சசன் ட்விஸ்ட், மேக்கிங், எல்லாம் வேற லெவல்.. கொஞ்சம் கூட போர் அடிக்கல.. செம த்ரில்லர் படம்

Lucifer7

‏என்னையா இது படம் எடுக்கச் சொன்னா இப்படி எங்க எல்லாரையும் மிரட்டி விடுற அளவுக்கா எடுப்பீங்க Hatsoff you bro. படம் அருமை. முண்டாசுப்பட்டி க்கு எதிர் ஜெனர்ல மிரட்டிட்டீங்க. மொத்தத்தில் ராட்சசன் அருமை. நொடிக்கு நொடி பதட்டம்.

மைதாமாவு

‏ராட்சசன் படம் பார்த்தேன். முதல்ல டைரக்டரைப் பாராட்டணும். இந்த மாதிரி ஒரு த்ரில்லர் தமிழில் கொடுத்ததற்கு. BGM வேற லெவல். ஆனா screenplay இன்னமும் கொஞ்சம் கிரிஸ்ப்பா இருந்திருக்கணும். கொஞ்சம் இழுவை செகண்ட் ஆஃப்ல.

லோகி

‏ராட்சசன்...உண்மையிலே ராட்சசன் தான்....கதற விட்டான்...

மரண மாஸ்...ஆனா தியேட்டர் பரிதாபம் தான் #லட்சிமிராம் கருர்

Muruga actor

‏ராட்சசன் பார்த்தேன்

தரமான படம்.

முழுமையான திருப்தி.

உலகத் தரத்தில் தமிழ் சினிமா...

JSK.GOPI

‏நேற்று மற்றும் இன்று வெளியான 96, நோட்டா, ராட்சசன் ஆகிய மூன்று படங்களுமே ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வருகிறது.

அதிலும் குறிப்பாக ராட்சசன் என்ற படம் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Mahesh Kannan Solaimalai

‏என்னங்கடா பேய்ப்படம் எடுக்குறீங்க ஹாலிவுட்லயும் கோலிவுட்லயும்..

ஒத்த சைக்கோவ வச்சி மொத்த தியேட்டரையும் அலற வச்சிட்டானுக.

இசை யாசகன்

‏ஒரு சைக்கோ த்ரில்லர் படத்துக்கு பக்க பலமே அவன் ஏன் அந்தக் கொலைகளை பண்றான் என்பதுதான். அதை நல்லா பன்னியிருக்காங்க. அதே மாதிரி connections between scenes அதுவும் நல்ல ஒர்க் ஆகியிருக்கு..

Ivan Saranraj

‏1. மேற்கு தொடர்ச்சி மலை - லெனின் பாரதி...

2. பரியேறும் பெருமாள் - மாரி செல்வராஜ்...

3. 96 - C. பிரேம் குமார்...

4. ராட்சசன் - ராம் குமார்..

தமிழ் சினிமா புதிய பாதையில் பயணம் செய்யத் தொடங்கி விட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

வாழ்வியல்

8 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

11 hours ago

ஓடிடி களம்

11 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்