தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரம்: நிர்மலா சீதாராமன் பதிலை விமர்சிக்கும் நெட்டிசன்கள்

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு பிரதமர் ஏன் வருத்தம் தெரிவிக்கவில்லையே? என்ற கேள்விக்கு 'கேட்டு சொல்கிறேன்' என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பல்வேறு அலுவல்களுக்காக நேற்று சென்னை வந்தார். ஆவடியில் உள்ள கனரக வாகனத் தொழிற்சாலை வளாகத்தில், 59 ஏக்கர் பரப்பளவில் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்ட ரூ.105 கோடி மதிப்பிலான சூரிய சக்தி மின்சார உற்பத்தி ஆலையைத் தொடங்கிவைத்தார்.

மத்திய பாஜக ஆட்சியின் 4 ஆண்டு சாதனை மலரை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் வெளியிட்டார்.

இதனைத் தொடர்ந்து நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அதில் நிர்மலா சீதாராமனிடம்  தூத்துக்குடி துப்பாக்கிச் சுடு குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது,  ”பலர் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது. அப்பகுதியில் சட்டம் ஒழுங்கு, மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது” என்றார்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கு பிரதமர் ஏன் இன்னும் வருத்தம் தெரிவிக்கவில்லை என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ’கேட்டுச் சொல்கிறேன்' என்றார். மேலும் 'இந்த விவகாரத்தில் ராஜ் நாத் சிங், அமித்ஷா போன்றோர் வருத்தம் தெரிவித்ததாக எனக்கு ஞாபகம் உள்ளது' என்றும் கூறுவார்.

உணர்வுப்பூர்வமான விஷயம் குறித்த கேள்விக்கு மத்திய பாதுகாப்புத்துறை  அமைச்சர் இவ்வாறான பொறுப்பற்ற தோரணையில் தான் பதில் அளிப்பாரா?  என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதுகுறித்த நெட்டிசன்கள் சிலரின் கருத்து

டான் DON டான்

‏பைப்ல தண்ணி எப்ப வரும்னு கேட்டதுக்கு சொல்ற மாதிரி

'கேட்டுச் சொல்றேன்'னு அலட்சியமான பதில்!

13 பேர் அநியாயமா சுட்டுக் கொன்னுதுக்கு ஏன் பிரதமர் வருத்தம் தெரிவிக்கலைன்னு தானே கேட்டாங்க

சித்தர்

மக்கள் சேவைக்கும் பொது வாழ்க்கைக்கும் வந்துட்டா கொஞ்சமாவது ஒரு சபை மரியாதை வேண்டும்

Arun

தன் பிள்ளைக்கு வரும் போது வலி வேதனை அடுத்தவர் பிள்ளைகள் இறந்தால் நமக்கென்ன

 

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இந்தியா

10 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

உலகம்

2 hours ago

மேலும்