ஸ்பேஸ் கிட்ஸ் நடத்திய இளம் இந்திய விஞ்ஞானி- 2017 போட்டி: மாணவர்களுக்கு பரிசளிப்பு

By செய்திப்பிரிவு

'ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா' அமைப்பு நடத்திய தேசிய அளவிலான அறிவியல் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு வந்த பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதில் அரசுப்பள்ளி மாணவர்களும் இடம்பெற்றிருந்தனர்.

முன்னதாக நேற்று இறுதிச் சுற்றுக்கு தேர்வானவர்களின் பிராஜக்டுகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று இறுதிச் சுற்று வரைக்கும் வந்த மாணவர்களுக்கு பரிசுக்கோப்பை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், ரஷ்ய அறிவியல் மற்றும் கலாச்சார மையத்தின் துணைத் தலைவர் மிக்கெய்ல் கோர்படோவ், ஹெக்சாவேர் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி கிருஷ்ண குமார், ஹார்ட்புல்னெஸ் அமைப்பில் கஸ்தூரி, 'ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா' அமைப்பின் நிறுவனர் ஸ்ரீமதி கேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஒவ்வோர் ஆண்டும்..

'ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா' அமைப்பு ஒவ்வோர் ஆண்டும் 9 முதல் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்காக தேசிய அளவிலான அறிவியல் போட்டியை நடத்தி ‘இந்திய இளம் விஞ்ஞானி’ என்னும் விருது வழங்கி வருகிறது. 

அறிவியல், தொழில்நுட்பம், கலை மற்றும் கலாச்சாரம் குறித்து சர்வதேச அளவிலான புரிதலை ஏற்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வரும் அமைப்பு 'ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா'.

 

 

இந்திய மாணவ, மாணவிகளின் கண்டுபிடிப்புத் திறனை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு போட்டிகளை நடத்திவருகிறது. குறிப்பாக விண்வெளி அறிவியல், மின்னியல், மின்னணுவியல் மற்றும் ரோபோட்டிக்ஸ் பிரிவுகளின் கீழ் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு, 'இந்திய இளம் விஞ்ஞானி' விருதை வழங்கி வருகிறது.

இந்தாண்டு போட்டிகளில் கலந்துகொள்ள பலநூறு மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில் வெற்றி பெறுவோர் ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் உள்ள காக்ரின் காஸ்மோநெட் மையத்துக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.

வெற்றியாளார் தேர்வு எப்படி?

தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் பிரபல கல்வி நிறுவனங்களைச் சார்ந்த பேராசிரியர்களுடன் கலந்துரையாடுவர். அதிலிருந்து முதல் 10 இடங்களைப் பிடிக்கும் மாணவர்கள் அறிவியல் பேச்சுப் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். (இதில் ஒரு பொதுத் தலைப்பு கொடுக்கப்படும். அதில் இந்த மாணவர்கள் தலா 2 நிமிடங்கள் பேச வேண்டும்.) அதுவே இறுதி வெற்றியாளரை தேர்ந்தெடுக்கும் போட்டியாகும்.

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

53 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்