நெட்டிசன் நோட்ஸ்: குஜராத், இமாச்சல் தேர்தல் முடிவுகள்- மோடி அலையா, அழுகையா?

By க.சே.ரமணி பிரபா தேவி

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட குஜராத், இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் இன்று (திங்கட்கிழமை)வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக தேசிய அளவில் Hardik Patel, Gujarat and Hiamchal Pradesh, #PremKumarDhumal, #ElectionResults2017 ஆகிய ஹேஷ்டேகுகளும் ட்ரெண்டாகி வருகின்றன.

இரு மாநிலங்களிலும் பாஜக வெற்றிமுகம் காட்டிவரும் சூழலில் இதுகுறித்த நெட்டிசன்களின் கருத்து இன்றைய நெட்டிசன் நோட்ஸில்…

Srinivasan J

500-1000 வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் இழந்த தொகுதிகள் 25. குஜராத்தில் சுமார் 5 லட்சம் வாக்குகள் நோட்டாவுக்கு!

தமிழகம் போன்றே நடுநிலை என்ற பெயரில் ஆளுங்கட்சியை வெற்றி பெற வைக்கும் "அதிமேதாவிகள்" அங்கேயும் இருக்கிறார்கள்!

Sathish Sangkavi

குஜராத்தில் பாஜக வென்றாலும், மகிழ்ச்சி ராகுலுக்கே!!

விஷ்வாவிஸ்வநாத்

குஜராத் தேர்தல் ஹைலைட்ஸ்:

1. கடந்த தேர்தலில் 120 இடங்களில் வென்ற பாஜக இந்த முறை 105 இடங்களில் மட்டுமே முன்னிலை

2. பாஜக - காங். இடையே வாக்கு சதவீதம் மிக குறைவு

3. குஜராத் தேர்தல் கதாநாயகன்கள் என்று கூறப்பட்ட ஓபிசி தலைவர் அல்பேஷ் வெற்றி முகம். தலித் தலைவர் ஜிக்னேஷ் வெற்றி முகம். ஹர்திக் படேல், படேல் வாக்குகளை கணிசமாகப் பிரித்துள்ளார்.

4. சாதி மத வேறுபாடு இன்றி நகர்ப்புற, நடுத்தர வருவாய் மக்கள் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

5. இஸ்லாமியர்கள் பெரும்பான்மை உள்ள தொகுதிகளில் 20-க்கு 10 இடங்களில் பாஜக வெற்றி பெறுகிறது.

6. ஊரக, வணிகப் பகுதிகளில் காங்கிரஸ்க்கு ஆதரவு அதிகரித்துள்ளது.

7. ஜிஎஸ்டியை 28 %-ல் இருந்து 15% ஆக குறைக்காமல் தேர்தல் நடந்திருந்தால் இந்த வேறுபாடுகள் அதிகரித்திருக்க கூடும்.

திருவளத்தான்‏ @Shankarfocuss

குஜராத், இமாச்சல பிரதேச தேர்தல் முடிவுகள் தமிழகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் – தமிழிசை.

கோழிக் குஞ்சைப் பிடித்து விட்ட தைரியத்தில், யானையையும் பிடிக்க தயார் ஆகறீங்களா? போய் ஓரமா நில்லுங்க!

Muthu Bagavath

இந்த தேர்தல்களில் மகிழ்ச்சியான செய்தியாக பார்க்கவேண்டியது ஜிக்னேஷ் மேவானியின் வெற்றியைத்தான்!

மாட்டிறைச்சி தடைக்கு எதிராக போராடியவர், உனா பேரணி, தலித் மக்களின் குரல் என குஜராத் மக்களின் நம்பிக்கைக்கு உரியவராகியிருக்கிறார். குஜராத்தின் வாட்கம் பகுதியில் சக்திவாய்ந்த பாஜக வேட்பாளர் விஜயகுமாரை எதிர்த்து போட்டியிட்டு வென்றிருக்கிறார். நீலம் பரவத்தொடங்கியிருப்பது மகிழ்ச்சியே....!

வேங்கை @selvaraj851

குஜராத் தேர்தலில் பாகிஸ்தானின் சதி இருக்கின்றது- மோடி.

இது எப்படி இருக்கு தெரியுமா மோடிஜி? செமஸ்டர்ல A கிரேடு பத்தாம, ரீவேல்யூசன் போட்டு S கிரேடு கேக்குற மாதிரி இருக்கு..

Bhairavi‏ @Bhairavibhairav

2012 குஜராத் தேர்தலில் காங்கிரஸ் 6 முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தியது. அதில் 2 பேர் வெற்றி. 2017-ல் முஸ்லிம் வேட்பாளர்கள் இல்லை!! இதுதாங்க மதச்சார்பின்மை.

மோதியின்காவிபடை‏ @Modi_Bloods

குஜராத் தேர்தல் முடிவை தமிழக பெட்டிக்கடை வரை பேச வைத்ததே நமது சாதனைதான்...

vinoth‏ @mohan_vinoth

குஜராத் மக்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.

Sivakumar‏ @josiva4419

குஜராத் தேர்தல்- நல்லா விசாரிச்சிட்டோம், ஓட்டு போட்டது மக்கள் இல்லையாம், #EVM_மெஷினாம்.

கிரியேட்டிவ் @CreativeTwitz

குஜராத் இமாச்சல் வெற்றி தமிழகத்திலும் தொடரும் - தமிழிசை // நீங்களும் எச்.ராசா அண்ணனும் இருக்குற வரை அந்த பயம் எங்களுக்கு இல்ல தோழர்.

பெரியார்தேசம்‏ @dhonivskholi

தயவுசெய்து குஜராத் மக்களை திட்டாதீர்கள்.. அவர்கள் சிந்தனைக்கு அவ்வளவுதான் முடியும்... அனுதாபப்படுங்கள், அவர்கள் தனி ஒருவன் தம்பி ராமையாக்களே... #GujaratVerdict

sangeetha‏ @sgeeth1975

குஜராத் தேர்தல்ல ஒரு முக்கியமான செய்தி என்ன தெரியுமா ?! 4 லட்சம் பேரு NOTA (நோட்டா) க்கு வோட்டு போட்டு இருக்காங்க.. அது மிகவும் உற்று நோக்கப்படவேண்டிய விஷயம்..

நா.குமரேசன்‏ @kumaresann01

குஜராத் தேர்தலை பொறுத்தவரையில் பாஜக வெற்றி மதிப்பு மிகுந்த வெற்றியாக இருக்காது, காங்கிரஸ் தோல்வி மதிப்புமிகு தோல்வியாகத்தான் இருக்கும்!!

Apmani‏ @Apmani6

தமிழ்நாட்டு அரசியலே தலைகீழாக் கிடக்கு, நீங்க ஏன் குஜராத் அரசியலைப் பத்தி பொலம்பறீங்க?

kdnl thangal‏ @kdnlthangal

பாஜகவின் எஃகு கோட்டைன்னு சொல்லப்பட்ட குஜராத், காங்கிரஸால் துருப்பிடித்திருக்கிறது.

BALAJI VENKATRAMAN‏ @MVBALAJE

ஐரோம் ஷர்மிளாவைப் போல ஜிக்னேஷை, காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்காத குஜராத் மக்கள் தெளிவானவர்கள்.

Srinivasan

மோடி அலையினால் அல்ல, மோடி அழுகையினால் வெற்றி பெற்றிருக்கிறது குஜராத்தில் பாஜக!

Karthik Duraisamy

கடந்த காலங்களில் அனாயசமாகக் குஜராத்தில் வெற்றிபெற்ற பாஜகவுக்கு இந்த முறை மதில் மேல் பூனையாக அது மாறியதே எதிர்கட்சிகளுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் சேதிதான். குஜராத்தில் பாஜக வெற்றி பெற்றிருந்தாலும், அவர்கள் கொண்டாடி மகிழும் அளவுக்குத் தேர்தல் முடிவு இல்லை என்பதை அவர்களே ஏற்றுக்கொள்வார்கள்.

Sam Nathan

வாழ்த்துக்கள் மோடி ஜி. மொத்த தேசத்திற்கும் ஒரே கட்சி ஒரே தலைவன் என பெயரெடுக்க விதைத்த தங்கள் உழைப்பை தேசத்தின் குடிமகனாக உளமாரப் பாராட்டுகிறேன். கொண்டாடுங்கள்.

Arul Ezhilan

மோடியின் குகைக்குள் ஜிக்னேஷ் மேவானியின் வெற்றிதான் பெருமைமிக்க வெற்றி. மோடி ஆட்சியைப் பிடித்திருக்கலாம் ஆனால் இளைஞர் ஜிக்னேஷ் மேவானி மோடியை வீழ்த்தியிருக்கிறார். வாழ்த்துக்கள் மேவானி..!

கயல்விழி‏ @Kayal_Twitz

குஜராத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது பாஜக- செய்தி.

இதைக் கொண்டாட ஒரு புது இந்தியாவ மோடி பெத்து போடப்போறார்.

AIவிவசாயி‏ @Rahul_james95

மோடி அலை இல்ல, மோடி சுனாமியா வந்தாலும் பெரியார் மண்ணை அசைக்க முடியாது. #Verified

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

48 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்