உ.பி.யில் விலைமதிப்பற்ற செடிகளைத் தின்ற கழுதைகளுக்கு சிறை தண்டனை- வைரலாகும் வீடியோ

By செய்திப்பிரிவு

உத்தரப் பிரதேசத்தில் சிறைக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த விலைமதிப்பற்ற செடிகளைத் தின்று, அழித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட கழுதைகள் சிறையில் அடைக்கப்பட்டன. 4 நாட்கள் கழித்து அவை விடுதலை செய்யப்பட்டன. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த சம்பவம் உ.பி.யின் ஜலோன் மாவட்டத்தில் உள்ள உராய் சிறையில் நிகழ்ந்துள்ளது.

இதுகுறித்துப் பேசிய சிறைத்துறை தலைமைக் காவலர் ஆர்.கே.மிஸ்ரா, ''மூத்த அதிகாரியின் அறிவுறுத்தலின்பேரில் சிறைக்கு வெளியே ரூ.5 லட்சம் செலவில் செடிகள் வைக்கப்பட்டிருந்தன. கடந்த வாரத்தில் நவம்பர் 24-ம் தேதி, எட்டு கழுதைகள் சேர்ந்து அவற்றை உண்டும், அழித்தும் நாசம் செய்தன.

இதுகுறித்து முன்னதாகவே கழுதைகள் உரிமையாளரிடம் நாங்கள் எச்சரிக்கை செய்திருந்தோம். ஆனால் அவர் அதை மதிக்கத் தவறியதால் 4 நாட்களுக்கு கழுதைகள் சிறையில் அடைக்கப்பட்டன'' என்றார்.

கழுதைகள் சிறையில் இருப்பதைக் கேள்விப்பட்ட உரிமையாளர் கம்லேஷ், சிறைத்துறை அதிகாரிகளிடம் சென்று கழுதைகளை விடுவிக்கும்படி கோரியுள்ளார். ஆனால் அதற்கு அதிகாரிகள் ஒப்புக்கொள்ளவில்லை.

இதைத் தொடர்ந்து உள்ளூர் பாஜக தலைவர் ஷக்தி ககோயை அணுகினார் கம்லேஷ். ஷக்தியின் அறிவுறுத்தலால் நான்கு நாட்களுக்குப் பிறகு நேற்று (திங்கட்கிழமை) கழுதைகள் விடுவிக்கப்பட்டன.

இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

வணிகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

தொழில்நுட்பம்

8 hours ago

சினிமா

9 hours ago

க்ரைம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்