தனுசு, மகர ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்! 24 முதல் மார்ச் 2ம் தேதி வரை 

By செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)


இந்த வாரம் எல்லா காரியங்களிலும் அதிக முயற்சி மூலம் வெற்றி கிடைக்கும். பணவரத்து அதிகரிக்கும். கடன் பிரச்சினை தீரும். தகராறு, வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். கவுரவம் அதிகரிக்கும். மறைமுக நோய் நீங்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். பணப் பிரச்சினை தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப் பளு குறையும்.

முயற்சிகள் காலதாமதமாக பலன் கொடுக்கும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். திருமண காரியங்கள் கைகூடும். பெண்களுக்கு எதிர்ப்புகள் விலகும். தடைபட்ட காரியம் நடந்து முடியும். கலைத்துறையினருக்கு பணவரத்து திருப்தி தரும். அரசியல்வாதிகள் வாக்கு வன்மை அதிகரிக்கும். பேசி சில காரியங்களைச் சாதிக்க முற்படுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டிகள் குறையும். எதை பற்றியும் கவலைப்படாமல் காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.


பரிகாரம்: நவக்கிரக குரு பகவானை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். பண பிரச்சினை தீரும். குடும்ப நன்மை ஏற்படும்.
****************************************************************************


மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)


இந்த வாரம் வாக்குவன்மையால் காரிய அனுகூலம் உண்டாகும். ஆனால் மனதில் ஏதாவது சஞ்சலம் இருந்து கொண்டே இருக்கும். திடீர் பணத்தேவை ஏற்படலாம். தேவையான நேரத்தில் மற்றவர்களின் உதவி கிடைக்கும். புதிய சொத்து வாங்குவதில் கவனம் செல்லும். தொழில் வியாபாரம் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும். திறமையான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் சொல்வதைச் செய்வதன் மூலம் நன்மை கிடைக்கப் பெறுவார்கள்.

குடும்பத்தில் அமைதி ஏற்படும். குடும்பத்தினருக்கு தேவையான பொருட்கள் வாங்கிக் கொடுத்து மகிழ்வீர்கள். பெண்களுக்கு புதிதாக செய்யும் காரியங்களில் கவனம் தேவை. கலைத்துறையினருக்கு இனிமையான வார்த்தைகளால் பேசுவதன் மூலம் மற்றவர் மத்தியில் மதிப்பு கூடும். அரசியல்வாதிகளுக்கு பணம் சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக நடந்து முடியும். தனது பேச்சுத் திறமையால் சில காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். மாணவர்களுக்கு ஆசிரியர் சொல்படி பாடங்களைப் படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற்று வெற்றி பெற உதவும்.


பரிகாரம்: சனி பகவானை வணங்கி வர கஷ்டங்கள் குறையும். வேலைப் பளு குறையும்.
************************************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

2 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

11 mins ago

தமிழகம்

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்