அஸ்வினி, பரணி, கார்த்திகை; வார நட்சத்திர பலன்கள் (ஆகஸ்ட் 10 முதல் 16ம் தேதி வரை) 

By செய்திப்பிரிவு

’சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


அஸ்வினி -

செலவுகளைக் கட்டுப்படுத்தி சேமிப்பை அதிகப்படுத்த வேண்டிய வாரம்.

வார மத்தியில் பழைய உற்சாகமான மனநிலைக்கு வருவீர்கள். இதுவரை இருந்த மனக் குழப்பங்கள் முடிவுக்கு வரும். அதேசமயம் அவசர அவசரமாக முடிவெடுக்கும் குணத்தை மாற்றிக்கொள்ளுங்கள்.

எந்த விஷயத்திலும் நிதானத்தைக் கடைபிடியுங்கள். தடைகளைத் தாண்டி வெற்றி பெறக் கூடிய வாய்ப்புகளும் கிடைக்கும். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். பதட்டத்தைக் குறைத்துக் கொண்டு சிந்தனையை அதிகப்படுத்திக் கொண்டால் எளிதாக இந்த வாரத்தைக் கடக்க முடியும்.

குடும்பத்தில் சிற்சில பிரச்சினைகள் வந்தாலும் விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலம் அனைத்தையும் சரிப்படுத்த முடியும். அலுவலகப் பணிகளில் இயல்பான நிலை தொடரும். சக ஊழியர்களின் உதவி கிடைக்கும்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படும். இதுவரை இருந்து வந்த தடைகள் படிப்படியாக விலகும்.

பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தந்தை வழி சொத்துகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
குடும்பத்தினரின் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்து தருவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகளைக் கையாளுவீர்கள். எடுக்கின்ற முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். தேவையான உதவிகளும் ஆதரவும் கிடைக்கும்.

செவ்வாய் -
ஆதாயம் தரும் விஷயங்கள் அனைத்தும் சாதகமாக இருக்கும். பணவரவு எதிர்பார்த்தபடியே இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் தேவையான உதவிகளும், சலுகைகளும் கிடைக்கும். அலுவலகப் பணிகள் எளிதாக முடியும். எடுத்துக் கொள்ளும் முயற்சிகளில் முழுமையாக வெற்றி கிடைக்கும். வருமானம் தொடர்பான விஷயங்களில் வெற்றிகள் கிடைக்கும்.

புதன் -
நிதானமாக செயல்பட வேண்டிய நாள். அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். அலுவலகத்திலும் வெளியிடத்திலும் பேசுகின்ற வார்த்தைகளில், செயல்களில் கவனம் தேவை.

வியாழன் -
குழப்பங்களுக்கு முடிவு ஏற்படும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். ஆதாயம் தரும் வியாபார விஷயங்கள் நடக்கும். சொத்துகள் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மருத்துவச் செலவு வெகுவாகக் குறையும். தாய்வழி உறவினர்களால் தேவையான உதவிகள் கிடைக்கும்.

வெள்ளி -
எதிர்பார்த்த விஷயங்கள் எதிர்பார்த்தபடியே நடக்கும். தேவையான உதவிகள் தேடி வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் லாபமும் கிடைக்கும். கமிஷன் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பாராத வருமானம் கிடைக்கும்.

சனி -
அலுவலகப் பணியில் சில சலுகைகள் கிடைக்கும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். சகோதரர்கள் ஒற்றுமை ஏற்படும். சகோதரர்களால் ஒரு சில உதவிகளும் ஆதாயமும் ஏற்படும்.

ஞாயிறு -
நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல தகவல் இன்று கிடைக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். மனதை உறுத்திக் கொண்டிருந்த ஒரு பிரச்சினை இன்று முடிவுக்கு வரும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
முருகப்பெருமானை வணங்குங்கள். முருகப் பெருமானுக்கு செவ்வரளி மாலை சூட்டி வணங்குங்கள். நன்மைகள் அதிகமாகும். மனக்குழப்பம் தீரும். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.
********************

பரணி -

தேவையான உதவிகள் அனைத்தும் தக்க சமயத்தில் கிடைக்கும்.

பணவரவு திருப்திகரமாக இருக்கும். ஆரோக்கிய பாதிப்புகள் வெகுவாகக் குறையும். குடும்பத்தில் ஒரு சில பிரச்சினைகள் தோன்றும்.

தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்த வேண்டாம். தந்தைவழி உறவினர்களிடம் அனுசரித்துச் செல்லுங்கள். சொத்துகள் தொடர்பான பிரச்சினைகளை பேசித் தீர்க்க இது சாதகமான நேரம். இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
அலுவலகப் பணிகளில் கவனமாக செயல்பட வேண்டும். வியாபாரம் மற்றும் தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். வியாபாரத்திற்குத் தேவையான பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும்.

பெண்களுக்கு நன்மைகள் பலவாறாக நடக்கும். குழந்தைகள் பற்றிய கவலை நீங்கும். மாணவர்கள் புதிய கல்வி கற்கும் ஆர்வமும், புதிய மொழிகளைக் கற்கும் ஆர்வமும் ஏற்படும். கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தைகள் ஏற்படும்.

இந்த வாரம் -

திங்கள் -
எதிர்பார்த்த தேவையான உதவிகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். மனநிறைவு ஏற்படும் நாள்..வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். ஒரு சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும்.

செவ்வாய் -
குடும்ப நலன் கருதி ஒரு சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளின் எதிர்காலத்துக்கான திட்டங்களைத் தீட்டுவீர்கள். அலுவலகப் பணிகளில் மன நிறைவு உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நண்பர்கள் மூலமாக தேவையான உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். உறவினர் வகையில் கிடைக்கின்ற தகவல் மன நிம்மதி தருவதாக இருக்கும்.

புதன் -
தேவையற்ற பயணங்கள் மேற்கொள்ள வேண்டாம். சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிக்காமல் இருப்பது நல்லது. குடும்பத்தினரிடம் கோபத்தை வெளிப்படுத்தக்கூடாது. எதிர்பார்த்த சில விஷயங்கள் காரணமின்றி தள்ளிப் போகும்.

வியாழன் -
பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். தொழில் மற்றும் வணிகத்தில் லாபம் கிடைக்கும். பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள், சுய தொழில் முயற்சிகள் அனைத்தும் சாதகமாக இருக்கும்.

வெள்ளி -
அலுவலகப் பணியை பகிர்ந்து கொள்ள வேண்டியது வரும். எதிர்பார்த்த பண உதவிகள் உள்ளிட்ட சில விஷயங்கள் தாமதமாகலாம். தேவையில்லாத மன உளைச்சல் மற்றும் மனக் குழப்பங்கள் ஏற்படும்.

சனி -
மனதை உறுத்திக் கொண்டிருந்த பிரச்சினைகளில் நல்ல முடிவு ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். தொழிலிலும் வியாபாரத்திலும் சீரான வளர்ச்சி இருக்கும். அலுவலகத்தில் இருந்து வரவேண்டிய நிலுவைத் தொகை இன்று கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

ஞாயிறு -
குடும்பத்தாருடன் நேரத்தை செலவிடுங்கள்.எந்த ஒரு பிரச்சினைகளிலும் தலையிட வேண்டாம். சமூக வலைதளப் பயன்பாட்டை குறைத்துக் கொள்ளுங்கள்.

வணங்க வேண்டிய தெய்வம் -
சக்தி வடிவான அம்மனை வழிபடுங்கள். அபிராமி அந்தாதி பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும். நினைத்தது நடக்கும்.
**********************************

கார்த்திகை -

அதிக நன்மைகள் ஏற்படும் வாரம்.

இதுவரை தாமதப்பட்டுக் கொண்டிருந்த விஷயங்கள் அனைத்தும் இனி எளிதாக முடியும். குடும்பப் பிரச்சினைகள் படிப்படியாக முடிவுக்கு வரும். இளைய சகோதரர்களால் உதவிகள் கிடைக்கும்.

தாயார் மற்றும் தந்தையின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் பேசித் தீர்க்கப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி சுறுசுறுப்புக்கு மாறும்.

தொழில் தொடர்பாக புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வேறு நிறுவனங்களோடு இணைந்து தொழிலை வளர்ப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார விஷயங்களில் புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். புதிய கிளைகள் தொடங்குவது வியாபார இடத்தை மாற்றுவது போன்ற விஷயங்கள் சாதகமாக இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும்.
கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் பெண்களுக்குச் சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். ஆரோக்கிய பாதிப்புகளால் மனதளவில் தளர்ந்து போயிருந்த பெண்கள் இப்போது உடல்நலம் முற்றிலும் சீராகி உற்சாகமான மனநிலைக்கு மாறுவார்கள்.

மாணவர்களுக்கு கல்வியில் சீரான வளர்ச்சியும் முன்னேற்றமும் இருக்கும். தேவையான உதவிகள் கிடைக்கும். கல்வி தொடர்பான வங்கிக் கடன் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது'

இந்த வாரம் -

திங்கள் -
கிடைக்கின்ற தகவல்கள் அனைத்தும் உற்சாகத்தைத் தருவதாக இருக்கும். நண்பர்களாலும் உறவினர்களாலும் தேவையான உதவிகள் கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிடைக்கும்.

செவ்வாய் -
எதிர்பாராத அளவுக்கு அதிக உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். குடும்பத்தினர் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பெண்களுக்கு சகோதர வழியில் உதவிகள் கிடைக்கும். இல்லத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள்.

புதன் -
மன சஞ்சலத்திற்கு இடம் கொடுக்காதீர்கள். ஆரோக்கியம் பற்றிய கவலை தோன்றி மறையும். குழந்தைகளின் எதிர்காலம் கருதி ஒரு சில நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் சற்று நிதானமாக இருக்க வேண்டும்.

வியாழன் -
எதிர்பார்த்த உதவிகள் மட்டுமல்லாமல் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் லாபமும் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தினர் மகிழ்ச்சிகரமாக இருப்பார்கள். குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வேலை தொடர்பான நல்ல தகவல் கிடைக்கும்.

வெள்ளி -
தேவையற்ற பயணங்கள் வேண்டாம். நண்பர்களுடனும் உறவினர்களுடனும் தேவையில்லாத சர்ச்சைப் பேச்சுவார்த்தைகளை வைத்துக் கொள்ள வேண்டாம். செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். வாகனங்களை சரியாக பராமரித்துக் கொள்வது நல்லது.

சனி -
ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். மருத்துவச் செலவுகள் குறையும். கடன் தொடர்பான பிரச்சினைகள் தீரும். சொத்துகள் சம்பந்தமான விஷயங்கள் பேசி முடிவாகும். தாயாரின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். எதிரிகள் தொல்லை குறையும்.

ஞாயிறு -
வரவும் செலவும் சமமாக இருக்கும் நாள். குடும்பத்தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள். நண்பர்களால் ஒரு சில மன வருத்தங்களைச் சந்திக்க வேண்டியதிருக்கும். எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
கால பைரவரை வழிபாடு செய்யுங்கள். பைரவர் அஷ்டோத்திரம் பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும்.
*******************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

30 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

4 hours ago

ஆன்மிகம்

3 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

மேலும்