திருவோணம், அவிட்டம், சதயம் ; (மே 4 முதல் 10 வரை) - இந்தவாரம் உங்களுக்கு இப்படித்தான்! 

By செய்திப்பிரிவு


’சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


திருவோணம்-
நன்மைகள் பலவாறாக நடக்கும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் சாதகமாகவும் லாபகரமாகவும் இருக்கும்.குடும்பப் பிரச்சினைகள் முடிவுக்கு பிரிந்த தம்பதி மீண்டும் ஒன்று சேர்வார்கள்.
வழக்குகள் ஏதேனும் இருந்தால் தள்ளிப்போகும். சகோதரர்களிடம் ஏற்பட்ட மனவருத்தங்கள் அகலும். தந்தை அல்லது தந்தை வழி உறவினர்களிடம் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கும். பெரியப்பா மற்றும் சித்தப்பா உறவு முறையில் மீண்டும் ஒற்றுமை ஏற்படும். பாகப்பிரிவினைகள் சம்பந்தமான விஷயங்கள் பேசி தீர்க்கப்படும்.
அலுவலக நெருக்கடிகள் தீரும். வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். தொழில் தொடர்பாக வேண்டிய உதவிகளும், ஒப்பந்தங்களும் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
பெண்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமணம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். திருமணமான பெண்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். இளைய சகோதரிக்கு திருமணம் நிச்சயமாகும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
அலுவலகப் பணியில் இயல்பான நிலையே இருக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி இருக்கும். தொழில் தொடர்பான உதவிகளும் சலுகைகளும் கிடைக்கப் பெறுவீர்கள். பெண்களுக்கு கடன் பிரச்சினைகள் தீரும் வாய்ப்பு உள்ளது, அதற்கான பண உதவிகள் கிடைக்கும்.

செவ்வாய்-
பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். எதிர்பார்த்த வியாபார வாய்ப்பு கிடைக்கும். தொழில் தொடர்பாக வேண்டிய உதவி கிடைக்கும். கடன் தொடர்பான ஒரு முக்கியமான பிரச்சினையை பேசித் தீர்ப்பீர்கள்.

புதன்-
பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பெண்களுக்கு சுயதொழில் தொடங்குவது தொடர்பான உதவிகள் கிடைக்கும்.

வியாழன்-
நினைத்தது நிறைவேறும் நாள். புதிதாக தொழில் தொடங்குவது அல்லது புதிதாக வியாபாரம் தொடங்குவது போன்ற விஷயங்கள் சாதகமாக இருக்கும். வங்கிக் கடன் தொடர்பாக நல்ல தகவல் கிடைக்கும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் தொடர்பான விஷயங்கள் நல்லவிதமாக வந்துசேரும். சகோதரர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். சொத்து சம்பந்தமான பிரச்சினைகளை இன்று பேசித் தீர்ப்பதற்கான சாதகமான நாளாக இருக்கும்.

வெள்ளி-
திட்டமிடாத காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். எதிர்பாராத பணம் வரும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த அரசின் சலுகைகள் கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் தொடர்பான நல்ல தகவல் உறுதியாகும்.

சனி-
எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பராமரிப்புச் செலவுகள் கூடுதலாகும். வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும். கடன் கொடுப்பது அல்லது கடன் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

ஞாயிறு-
வியாபார வாய்ப்புகள் தேடி வரும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். தொழில் தொடர்பான முன்னேற்றமான செய்கைகள் நடக்கும். தேவையான பண உதவி கிடைக்கும். குடும்பத்தின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து தருவீர்கள். கமிஷன் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு இன்று வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்யுங்கள் அல்லது கேளுங்கள். நன்மைகள் பெருகும். பணவரவு தாராளமாக இருக்கும்.
*******************************************************


அவிட்டம் -
எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வாரம். தேவைக்கேற்ற பணவரவு இருக்கும்.
இதுவரை இருந்த நெருக்கடிகள் விலகும். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த சண்டை சச்சரவுகள் முடிவுக்கு வரும். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் முற்றிலுமாக விலகும். முயற்சிகளில் ஏற்பட்டுக் கொண்டிருந்த தடைகள் தாமதங்கள் இனி இருக்காது.
உடல்நலத்தை கெடுத்துக் கொண்டிருந்த கெட்ட பழக்கத்தை கைவிடுவீர்கள். ஒருசிலருக்கு உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உறவினர்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வியாபாரம் வளர்ச்சியடையும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும்.

இந்த வாரம்-

திங்கள்-
நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான நல்ல தகவல் கிடைக்கும். கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். அதன் தொடர்பாக ஊதிய உயர்வும் உண்டாகும். குடும்பத்தினரின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து தருவீர்கள். அத்தியாவசிய பொருட்களை வாங்குவீர்கள்.

செவ்வாய்-
நேற்றைய தினமே முடிக்க வேண்டிய வேலைகளை இன்று சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். எதிர்பார்த்த கடன் கிடைக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் கருதி சேமிப்புகளைச் செய்வீர்கள்.

புதன்-
குடும்ப பிரச்சினைகள் முடிவுக்கு வரும். எதிர்பார்த்த வேலைவாய்ப்பு பற்றிய தகவல் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். நண்பர்கள் தேடி வந்து உதவி செய்யவார்கள்.

வியாழன்-
அலுவலகத்தில் சக ஊழியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். தொழிலுக்கு அரசு உதவிகள் கிடைக்கும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். பெண்களுக்கு வேலை தொடர்பான தகவல் கிடைக்கும்.

வெள்ளி-
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரவு எதிர்பாராத அளவுக்கு தாராளமாக இருக்கும். தரகுத் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கும், கமிஷன் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் பற்றிய விஷயங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வரும்.

சனி-
வியாபாரத்தில் லாபம் இருமடங்காக இருக்கும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அவர்களால் ஆதாயம் கிடைக்கும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் இறுதி நிலையை எட்டும். எதிர்பார்த்த பணம் எதிர்பார்த்தபடியே கிடைக்கும்.

ஞாயிறு-
வீண்செலவுகள் ஏற்படும். பிள்ளைகளால் சங்கடங்கள் ஏற்படும். உடல் நலத்தில் சற்று பாதிப்பு ஏற்படும். மருத்துவச் செலவு உண்டு. பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
துர்கை வழிபாடு செய்யுங்கள். துர்கை அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்யுங்கள். சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்து தானமாகத் தாருங்கள். நன்மைகள் நடக்கும்.
***********************************


சதயம் -
எடுத்துக்கொண்ட முயற்சிகளில் முழுமையான வெற்றியைக் காண்பீர்கள்.
இதுவரை தாமதப்பட்டுக் கொண்டிருந்த திருமண முயற்சிகள் இப்பொழுது முழுமையாக நிறைவேறும். ஏற்கெனவே மணவாழ்க்கை இழந்தவர்களுக்கு இரண்டாவது திருமண முயற்சிகள் சாதகமாக இருக்கும்.
திருமணம் நடந்து பல ஆண்டுகளாக புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் உண்டாகும். புத்திர பாக்கியத்திற்காக மருத்துவச் செலவு செய்து கொண்டிருந்தவர்களுக்கு இனி மருத்துவ செலவில்லாமல் இயற்கையான முறையில் குழந்தை பாக்கியம் உண்டாகும்.
அலுவலக வேலைகளில் சகஜமான நிலையே இருக்கும். தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். சிலருக்கு கடன் பிரச்சினைகள் நெருக்கடி தருவதாக இருக்கும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். பெண்களுக்கு சொந்த வீடு, வேலை போன்றவை கிடைக்கும். திருமண முயற்சிகள் கைகூடும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு நண்பர்களால் உதவிகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
அலுவல் தொடர்பாக தேங்கி நின்ற வேலைகள் அனைத்தும் முடியும். தொழில் தொடர்பான வாய்ப்புகள் மனநிறைவைத் தரும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். வியாபார ஒப்பந்தம் ஏற்படும்.

செவ்வாய்-
தேவையற்ற சர்ச்சையில் சிக்க வேண்டாம். அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிடுவது பிரச்சினையை உண்டுபண்ணும். சிறிய விஷயம் கூட உங்களுக்கு கோபத்தை ஏற்படுத்துவதாக இருக்கும். சுய கட்டுப்பாடு தேவை.

புதன்-
மனநிம்மதி ஏற்படும் நாள். பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். குடும்ப பிரச்சினைகள் தீரும். தொழில் வளர்ச்சி மனநிறைவைத் தரும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும்.


வியாழன்-
லாபகரமான நாளாக இருக்கும். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். வேலையில் வரவேண்டிய சலுகைகள் தொடர்பான தகவல் கிடைக்கும்.

வெள்ளி-
குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவீர்கள். கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் தீரும். வியாபார வளர்ச்சி நன்றாக இருக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். இல்லத்தில் சுப காரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடக்கும்.

சனி-
வரவும் செலவும் சமமாக இருக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வியாபாரம் தொடர்பாக ஆதாயம் ஏற்படும். குடும்பத்தினர் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். தொழில் தொடர்பான சந்திப்புகள் மன நிறைவைத்தரும்.

ஞாயிறு-
எதிர்பார்ப்புகள் சற்று ஏமாற்றம் தரும். வீண் விவாதம் வேண்டாம். எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருக்க வேண்டும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
விநாயகரை வணங்கி வாருங்கள். அரச மரத்தை 11 முறை வலம் வருவது சிறப்பான பலன்களைத் தரும். விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் சார்த்தி வழிபடுங்கள். நன்மைகள் அதிகமாகும். நினைத்தது நிறைவேறும்.
*******************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

6 hours ago

ஓடிடி களம்

7 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்