அஸ்தம், சித்திரை, சுவாதி (ஏப்ரல் 27 முதல் மே 3 வரை) - இந்தவாரம் உங்களுக்கு இப்படித்தான்! 

By செய்திப்பிரிவு

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

அஸ்தம் -
நிதானமாக செயல்பட்டு காரியங்களைச் சாதித்துக் கொள்ள வேண்டிய வாரம்.
அலுவலக பணிச்சுமை அதிகமாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். இதுவரை இருந்த குழப்பமான நிலை மாறும். குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படும்.
வியாபாரிகள் வியாபாரத்தில் வளர்ச்சி காண்பார்கள். தொழில் தொடர்பான வளர்ச்சி சீராக இருக்கும். தேவையான உதவிகள் தானாக தேடி வரும்.
திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் உறுதியாகும். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.
மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் ஏற்படும். புதிய கல்வி கற்கும் ஆர்வமும் ஏற்படும்.

இந்த வாரம் -
திங்கள்-

தேவைகள் பூர்த்தியாகும் நாள். பணவரவு சரளமாக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படும். அலைச்சல் அதிகரித்தாலும் லாபத்தில் குறைவிருக்காது. குடும்பச் செலவுகள் அதிகமாக இருக்கும்.

செவ்வாய்-
மனம் பரபரப்பாக இருக்கும். தேவையில்லாத சிந்தனைகள் தோன்றும்.பதட்டத்தை குறைக்க வேண்டும். மனதை ஒருநிலைப்படுத்த தியானம் செய்யுங்கள். குழந்தைகளிடமும் வாழ்க்கைத் துணையிடம் இணக்கமாக இருங்கள்.

புதன்-
குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்து கொள்வீர்கள். அலுவலகத்திலிருந்த நெருக்கடி தீரும். தாமதப்பட்ட வேலைகளை இன்று விறுவிறுப்பாக செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும்.

வியாழன்-
அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். அலுவலகத்திலும் பணி செய்யும் இடத்திலும் கவனமாக இருக்க வேண்டும். எந்த ஒரு விஷயத்திலும் அலட்சியமாக இருக்க வேண்டாம். உறவினர்களிடம் அனுசரித்துச் செல்லுங்கள். அவர்களிடம் தேவையில்லாமல் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.

வெள்ளி-
நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல தகவல் இன்று கிடைக்கும். திருமண முயற்சிகள் சாதகமாக இருக்கும். குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படும். சகோதரர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். அவர்களால் உதவிகளும் கிடைக்கும்.

சனி -
அதிக ஆதாயம் ஏற்படும் நாள். அலுவலகப் பணிகளில் திருப்தியான மனநிலை உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் இருக்கும் மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். குடும்பத்துக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள்.

ஞாயிறு -
எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். நீண்ட நாளாக வராமலிருந்த பாக்கிகள் வசூலாகும். நண்பர்கள் தேடி வந்து உதவி செய்வார்கள். ஆரோக்கிய பிரச்சினைகள் தீரும். தாயாரின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். தந்தைவழி உறவுகள் பலப்படும். சொத்து பிரச்சினைகளைப் பேசித் தீர்க்கும் வாய்ப்பு உள்ளது.

வணங்க வேண்டிய தெய்வம் -
மகாலட்சுமி தாயாரை வணங்குங்கள். கனகதாரா ஸ்தோத்திரம் பாராயணம் செய்யுங்கள். எதிர்ப்புகள் காணாமல் போகும். நன்மைகள் அதிகமாகும்.
******************************

சித்திரை -
எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும்.
பணவரவு தாராளமாக இருக்கும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் ஒரு சில பிரச்சினைகள் வந்து மறையும். சிறிய அளவிலான மருத்துவ செலவுகள் உண்டு.
வாழ்க்கைத் துணையின் குடும்பத்திற்கு உதவிகள் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். சகோதர உறவுகளுக்கும் உதவி செய்ய வேண்டியது வரும் அல்லது அவர்களிடமிருந்து உதவிகள் பெற வேண்டியது வரும்.
உத்தியோகத்தில் ஒரு சில சலுகைகள் கிடைக்கும். தொழிலில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் இருக்கும். அரசின் உதவிகள் கிடைக்கும்.
பெண்கள் தங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதில் மகிழ்ச்சி அடைவார்கள். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். கலைஞர்களுக்கு நண்பர்கள் மூலமாக உதவிகளும் புதிய வாய்ப்புகளும் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். அலுவலகப் பணிகளில் இருந்த ஒரு சில பிரச்சினைகளும் இன்று முடிவுக்கு வரும்.

செவ்வாய் -
மனதில் தேவையற்ற சஞ்சலம் உண்டாகும். குழப்பங்கள் அதிகரிக்கும். முடிவுகளை அவசரப்பட்டு எடுக்க வேண்டாம். கோப உணர்வை வெளிப்படுத்தாமல் இருக்க வேண்டும். நிதானமாக இருங்கள்.

புதன் -
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் எளிதாக முடியும். செய்கின்ற வேலைகளில் மனத் திருப்தி உண்டாகும். எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் தோன்றும். ஒரு சில முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். அதில் தொழில் தொடங்குவது பற்றிய சிந்தனையும் இருக்கும். அதற்கான ஒரு சில திட்டங்களை மனதிற்குள் வரையறுத்துக் கொள்வீர்கள்.

வியாழன் -
நேற்றைய பிரச்சினைகள் இன்று முடிவுக்கு வரும். வேலை தொடர்பான புதிய ஒப்பந்தம் கிடைக்கும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் வளர்ச்சி சீராக இருக்கும்.சேவை சார்ந்த தொழில் செய்து கொண்டிருக்கும். ஒரு சிலரால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

வெள்ளி -
குழந்தைகளுக்கு.சிறிய அளவிலான செலவுகள் ஏற்படும். பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். அலுவலகத்தில் சக ஊழியருக்கு உதவி செய்வீர்கள். முகமறியாதவர்களுக்கும் உதவி செய்ய வேண்டியது வரும்.

சனி-
தொழில் தொடர்பான எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கப் பெறுவார்கள். சகோதர சகோதரிகளால் ஆதரவு கிடைக்கும். மாமன் வழிவகை உறவுகளுக்கு உதவிகள் செய்ய வேண்டியது இருக்கும். எதிர்பாராத பண வரவுக்கும் வாய்ப்பு உள்ளது.

ஞாயிறு -
கோபத்தை தவிர்க்க வேண்டும். அடுத்தவர் விஷயங்களில் தலையிட வேண்டாம். நண்பர்களிடமும் உறவினர்களிடமும் கோபத்தை காட்டாதீர்கள். அக்கம்பக்கத்தினருடன் அனுசரித்துச் செல்லுங்கள்.

வணங்க வேண்டிய தெய்வம்-
சுவாமி ஐயப்பனை வழிபாடு செய்யுங்கள். வணங்குங்கள். நன்மைகள் அதிகமாகும். நினைத்தது நிறைவேறும்.
********************************************


சுவாதி -
இந்த வாரம் நீங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகளில் எளிதான வெற்றி கிடைக்கும்.
குடும்ப உறவுகள் பலப்படும். கணவன்-மனைவிக்குள் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் முற்றிலுமாக அகலும். அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். அல்லது உங்கள் மகன்/மகளுக்கு அலுவலகத்தில் எதிர்பாராத சிறப்பு சலுகைகள் கிடைக்கும்.
தொழிலில் தேவையான உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சீரான லாபம் கிடைக்கும். பெண்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். திருமண முயற்சிகள் கைகூடும். தாமதமாகிக் கொண்டிருந்த புத்திரபாக்கியம் இப்பொழுது கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் அதிக ஆர்வம் ஏற்படும்.

இந்த வாரம் -

திங்கள் -
எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் கணிசமான லாபம் ஏற்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமுகமாக இருக்கும்.

செவ்வாய் -
தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். பணவரவு எதிர்பார்த்தபடியே இருக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் இருமடங்காக கிடைக்கும். புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளுங்கள். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்வீர்கள்.

புதன் -
மனதில் சஞ்சலம் அதிகரிக்கும். தேவையற்ற கோபம் உணர்வுகள் ஏற்படும். அமைதியாக இருங்கள். கோபத்தை கட்டுப்படுத்துங்கள். குடும்பத்தாருடன் இணக்கமாக இருங்கள். அக்கம்பக்கத்தினருடன் தேவையில்லாத வாக்குவாதம் செய்ய வேண்டாம்.

வியாழன் -
மனநிம்மதி ஏற்படும் நாள். அலுவலகப் பணிகளில் மனநிறைவு உண்டாகும். தொழில், வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். சொத்துக்கள் சம்பந்தமான பிரச்சினைகள் பேசி தீர்க்கப்படும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். தாயாரின் உடல்நலம் திருப்திகரமாக இருக்கும். தாய்வழி உறவுகளால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள்.

வெள்ளி-
நண்பர்கள் உறவினர்கள் என பலரும் உங்களிடம் உதவிகள் கேட்டு வருவார்கள். உங்களால் ஆன உதவிகளை செய்து தாருங்கள். தர்ம சிந்தனைகள் அதிகரிக்கும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். சகோதரர்களிடம் சொத்துக்கள் சம்பந்தமான விஷயங்களைப் பேசி முடிப்பீர்கள். உங்களுக்கு வரவேண்டிய பணம் இன்று கைக்கு வந்து சேரும் வாய்ப்பு உள்ளது.

சனி-
மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் நண்பர்களால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். நீண்ட நாளாக தொடர்பில் இல்லாத நண்பரை தொடர்பு கொண்டு பேசுவீர்கள்.

ஞாயிறு -
வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். உங்களுடைய மனக்கவலை தீரும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
காலபைரவர் வழிபாடு செய்யுங்கள். பைரவர் அஷ்டோத்திரம் பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.
**************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

11 mins ago

தமிழகம்

25 mins ago

கல்வி

28 mins ago

விளையாட்டு

38 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

கல்வி

2 hours ago

மேலும்