புனர்பூசம் பூசம், ஆயில்யம்; (ஏப்ரல் 20 முதல் 26 வரை) - இந்தவாரம் உங்களுக்கு இப்படித்தான்! 

By செய்திப்பிரிவு

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

புனர்பூசம் -
விருப்பங்கள் நிறைவேறும் வாரம். நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். தேவையான உதவிகள் தானாக தேடி வரும்.
தொழிலில் நல்ல வளர்ச்சி முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் வளர்ச்சியும் லாபமும் கிடைக்கப்பெறுவார்கள். புதிய கிளைகள் தொடங்குவார்கள்.
பெண்கள் தங்களின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காண்பார்கள்.கணவர் வீட்டாரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மறையும். இதுவரை புத்திர பாக்கியம் இல்லாத தம்பதிக்கு புத்திர பாக்கியமும் உண்டாகும்.
பூர்வீகச் சொத்து சம்பந்தமான விஷயங்கள் சகோதரர்களிடம் பேசி நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். ஒரு சிலர் தாங்கள் பணிபுரியும் வேலையை விட்டுவிட்டு புதிதாக தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபடுவார்கள்.
மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல தேர்ச்சி விகிதம் பெறுவார்கள். கலைஞர்களுக்கு நல்ல ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
செலவுகள் அதிகமாக இருக்கும். வீண் அலைச்சல்கள் ஏற்படும். எதிர்பார்த்த பண உதவி தள்ளிப் போகலாம். வியாபாரத்தில் ஒரு சில தடைகளும் மந்தநிலையும் இருக்கும்.

செவ்வாய்-
பணவரவு எதிர்பார்த்தபடியே கிடைக்கும். வருமானம் இருமடங்காக இருக்கும். பணியில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். வரவேண்டிய நிலுவைத் தொகை வரும். தற்போது செய்து வரும் வேறு வியாபாரங்கள் செய்யும் எண்ணம் தோன்றும்.

புதன் -
குடும்பத்தில் சுப விசேஷங்கள் பற்றிய பேச்சு வார்த்தைகள் நடக்கும். குழந்தைகளின் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். ஒரு சில எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். அலுவலகப் பணிகளில் மனநிறைவு ஏற்படும்.

வியாழன் -
எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். பெண்களுக்கு குழந்தை பாக்கிய பற்றிய தகவல் உறுதியாகி மகிழ்ச்சியைத் தரும். பூர்வீகச் சொத்து தொடர்பான விஷயங்கள் நல்ல முடிவு கிடைக்கும். எதிர்ப்புக் காட்டி வந்த சகோதரர் இப்போது எதிர்ப்பைக் கைவிடுவார்.

வெள்ளி -
வேலை தொடர்பான விஷயங்களில் இருந்த நெருக்கடிகள் விலகும். ஆட்குறைப்பு, சம்பள குறைப்பு போன்ற பிரச்சினைகளை எதிர்பார்த்து இருந்த உங்களுக்கு, இப்போது அந்த பிரச்சினை இல்லை என்பதை உணர்ந்து மன நிம்மதி ஏற்படும். நண்பர்களுடன் இணைந்து புதிய தொழில் தொடங்குவது பற்றிய ஆலோசனை செய்வீர்கள்.

சனி-
குடும்ப நலன் சார்ந்த சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். குழந்தைகளின் எதிர்காலத்திற்காக சேமிப்பு தொடங்குவீர்கள். அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும்.

ஞாயிறு -
பெரும் நன்மைகள் ஏற்படும் நாள். பணவரவுகள் தாராளமாக இருக்கும். எடுத்துக்கொண்டு வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். வியாபாரப் பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பாக முக்கிய நபர்களின் சந்திப்பு நம்பிக்கை தருவதாக இருக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
தட்சிணாமூர்த்தி குருபகவானை வணங்கி வாருங்கள். நன்மைகள் பெருகும், தடைகள் அகலும்.
********************************************

பூசம்-
எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும் வாரம். தேவைகள் பூர்த்தியாகும்.
குடும்பத்தில்ஒரு சில பிரச்சினைகள் தோன்றி மறையும். கணவன் அல்லது மனைவியின் உடல் நலத்தில் பாதிப்புகள் ஏற்படும். தகுந்த மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். அலுவலகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும். ஒரு சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். குழுவாக இணைந்து பணியாற்றும் நிலையும் ஏற்படும். தொழிலில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அரசு உதவிகளும் வங்கியின் கடன் உதவியும் தொழிலுக்கு கிடைக்கும். பெண்களுக்கு தந்தைவழி உறவுகளால் ஆதாயம் ஏற்படும். சகோதரர்களுக்கு திருமணம் நடக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி காண்பார்கள்.

இந்த வாரம் -
திங்கள் -

சொந்தத் தொழில் தொடங்குவது தொடர்பான சிந்தனை தோன்றும். அதற்கான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் தேவையான உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு சுயதொழில் தொடர்பான உதவிகள் கிடைக்கும். அதற்குத் தேவையான உதவிகளை சகோதரர்கள் செய்து கொடுப்பார்கள்.

செவ்வாய் -
அலுவலகப் பணிகளில் இருந்த நெருக்கடிகள் விலகும். சொந்த வீடு வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். பூர்வீகச் சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.தொழில் மற்றும் வியாபாரத்தில் தேவையான முதலீடுகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

புதன் -
அக்கம்பக்கத்தினருடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் அகலும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும். குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். குழந்தைகளின் கல்வியில் முன்னேற்றம் ஏற்படுவதை கண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். மனைவியின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

வியாழன் -
தரகு மற்றும் கமிஷன் ஏஜெண்டுகள் வருமானம் திருப்திகரமாக இருக்கும். வியாபார வளர்ச்சி ஏற்படும். தாய்வழி உறவுகளால் உதவிகள் கிடைக்கும். தந்தையின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்குத் திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாக இருக்கும்.

வெள்ளி-
நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல தகவல் இன்று கிடைக்கும். புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். தற்போது இருக்கும் வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான முயற்சியில் இறங்குவீர்கள். தொழிலுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்வீர்கள். வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியமானப் பொருட்கள் வாங்குவதால் செலவுகள் ஏற்படும்.

ஞாயிறு -
நீண்ட நாளாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் அனைத்தும் செய்து முடிப்பீர்கள். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும்.தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சி தரும். அயல்நாட்டில் வசிக்கும் நண்பர்களிடமிருந்து மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
திருச்செந்தூர் முருகனை மனதில் நினைத்து வணங்குங்கள். நன்மைகள் கூடுதலாகும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
*************************************************

ஆயில்யம் -
அதிரடியாக செயல்பட்டு உங்கள் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து கொள்வீர்கள்.
உங்களுடைய புத்திசாலித்தனம் இப்போது வெளிப்படும். அலுவலகத்தில் உங்கள் திறமையின் மீது அதிக நம்பிக்கை வைப்பார்கள். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். கடன் பிரச்சினைகள் அனைத்தும் கட்டுக்குள் இருக்கும்.
அலுவலகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் இருந்த தடைகள் தாமதங்கள் அகலும். முன்னேற்றம் ஏற்படும். வியாபாரிகள் புதிய கிளைகள் ஆரம்பிப்பார்கள். வியாபாரத்தை விரிவு படுத்துவதற்கான உதவிகள் கிடைக்கும்.
பெண்கள் தாங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்திலும் வெற்றி காண்பார்கள். திருமண முயற்சிகள் கைகூடும். தந்தை வழி சொத்துக்கள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சக நண்பர்களால் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். மாணவர்கள் கல்வியில் அபரிமிதமான முன்னேற்றம் காண்பார்கள்.

இந்த வாரம் -

திங்கள் -
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். அலுவலக வேலைகள் அனைத்தையும் செய்து முடித்து உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும்.

செவ்வாய் -
வாழ்க்கைத்துணையின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும், மருத்துவச் செலவுகள் குறையும். பணவரவு எதிர்பார்த்தபடியே இருக்கும். வியாபாரத்தில் அபாரமான வளர்ச்சி ஏற்படும், புதிய வாடிக்கையாளர்கள் அல்லது புதிய வியாபாரத் தொடர்புகள் கிடைக்கும். ஒப்பந்தங்கள் ஏற்படும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெண்களுக்கு சகோதர வகையில் இருந்து உதவிகள் கிடைக்கும்.

புதன்-
நிதானமாக செயல்பட வேண்டும். அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை தள்ளிவைக்க வேண்டும். பயணங்களைத் தவிர்க்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் கோபத்தைக் காட்டாமல் இருக்க வேண்டும்.

வியாழன்-
அலுவலகத்தில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் அனைத்தும் இன்று முடிவுக்கு வரும். எதிர்பார்த்த வியாபார ஒப்பந்தங்கள் கிடைக்கும். சுபவிசேஷங்கள் பற்றிய தகவல் வந்து சேரும். உறவினர்களால் நல்ல தகவல் கிடைக்கப்பெறுவீர்கள். பெண்களுக்கு எதிர்பாராத உதவிகளும, நன்மைகளும் கிடைக்கும்.

வெள்ளி -
உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு வேலைக்கான தகவல் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சினைகள் பேசித் தீர்க்கப்படும். அடகு வைத்த பொருட்களை மீட்பதற்குத் தேவையான பண வரவு கிடைக்கும்.

சனி-
பயணங்களைத் தவிர்த்து விடுங்கள். கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவுகளையும் எடுக்கக் கூடாது.வீண் செலவுகள், விரயங்கள் ஏற்படும்.

ஞாயிறு-
குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்து தருவீர்கள். வீட்டுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள். நண்பர்களிடமிருந்து தேவையான உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். வியாபார நிமித்தமாக பேச்சுவார்த்தைகள் மனநிறைவை ஏற்படுத்தும்.


வணங்கவேண்டிய தெய்வம் -
ஸ்ரீ ஹனுமனை வழிபாடு செய்யுங்கள். அனுமன் சாலீசா கேளுங்கள். நன்மைகள் அதிகமாகும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

17 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

8 hours ago

மேலும்