2022 எப்படி இருக்கும்?   சதயம் நட்சத்திர அன்பர்களே! செல்வம் சேரும்; பதவி உயர்வு; சம்பள உயர்வு; மதிப்பு கூடும்! 

By செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


சதயம்:


ராகுவை நட்சத்திரநாதனாகக் கொண்ட சதயம் நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களே!


இந்த ஆண்டு காரிய அனுகூலங்கள் ஏற்படும். மனோதிடம் அதிகரிக்கும். பயன் தரும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். செல்வம் சேரும். வாகனம் வாங்க எடுத்த முயற்சி கைகூடும். பயணங்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும்.

எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். லாபம் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டாகும். வேலைப்பளு குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். பிள்ளைகளின் செயல்கள் சந்தோஷத்தைத் தரும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி திருப்தியடைவீர்கள். பெண்களுக்கு மனதில் துணிச்சல் அதிகரிக்கும். திட்டமிட்டபடி செயலாற்றி காரிய அனுகூலம் பெறுவீர்கள்.

கலைத்துறையினருக்கு மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு வாக்குவன்மையால் அனுகூலம் உண்டாகும். மாணவர்களுக்கு பாடங்களைப் படிப்பது வேகம் பெறும்.

பொதுவாக இந்த ஆண்டு உங்களுக்கு உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

பரிகாரம்: வாராஹி தேவிக்கு தீபம் ஏற்றி வணங்க எல்லாக் கஷ்டங்களும் நீங்கும். மன நிம்மதி உண்டாகும்.

மதிப்பெண்கள்: 76% நல்லபலன்களை எதிர்பார்க்கலாம்.
**************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

வணிகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தொழில்நுட்பம்

4 hours ago

சினிமா

6 hours ago

க்ரைம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

6 hours ago

க்ரைம்

7 hours ago

மேலும்