குருப்பெயர்ச்சி பலன்கள் ; அனுஷம் நட்சத்திர அன்பர்களே! பூர்வீகச் சொத்து; வீண் செலவு வேண்டாம்;வாழ்வில் முக்கிய திருப்புமுனை!   

By செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


அனுஷம்:


கிரகநிலை:


குரு பகவான் உங்களின் ஏழாம் நட்சத்திரத்தின் 3ம் பாதத்திற்கு மாறுகிறார்.


பலன்கள்:


மற்றவர்களின் இடையூறுகளையும் தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும் அனுஷ நட்சத்திர அன்பர்களே!

இந்த குருப்பெயர்ச்சியால் உங்கள் வாழ்வில் சந்தோஷமும், முன்னேற்றமும் அடையப் போகிறீர்கள். சிலர் வாழ்வில் முக்கிய கட்டங்களை சந்திக்கப் போகிறீர்கள். குடும்பத்தில் தந்தை வழியே வர வேண்டிய சொத்துகள், பிதுரார்ஜித சொத்துகளிலிருந்த பாகப் பிரிவினைகள் எந்த பிரச்சினையுமின்றி தீரும். வழக்குகள் ஏதாவது நடைபெற்றுக் கொண்டிருக்குமாயின் அது இந்த குருப்பெயர்ச்சிக்குப் பிறகு உங்களுக்கு சாதகாகும். நல்ல தீர்ப்புகள் வரும். அதுவரை பொறுமையாக இருந்து அனைவரின் ஒத்துழைப்பையும் பெறுவீர்கள்.

தொழில் செய்பவர்கள் சில முக்கிய முடிவுகளை தந்தையின் ஆலோசனையின்படி கேட்டு முடிவு எடுப்பது உங்களுக்கு நன்மையைத் தரும். வீண் செலவுகளைத் தவிருங்கள்.

உத்தியோகஸ்தர்களில் வெளிநாடுகளுக்கு செல்ல நினைக்கும் அன்பர்கள் இப்போது அதற்கான முயற்சியை மேற்கொள்ளுங்கள். சக நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.
பெண்களுக்கு பெற்றோர் வகையில் ஆதாயம் உண்டு. கணவரிடம் அந்நியோன்யம் அதிகரிக்கும். நிர்வாகம் செய்வதில் எந்தவித தொல்லைகளும் வராது. சிறிதாக சேமிக்கத் தொடங்குவீர்கள்.

மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உங்களை சிறப்பாக வழி நடத்துவார்கள். சங்கீதம் பயிலும் மாணவர்களுக்கு நல்ல ஞானம் கிடைக்கும்.

அரசியல்துறையினருக்கு கட்சியில் மிகப் பெரிய பதவி உயர்வு கிடைக்கும். மக்களிடையேயும், தொண்டர்களிடையேயும் செல்வாக்கு உயரும்.

கலைத்துறையினருக்கு கிடைக்கக்கூடிய விருதுகள் கிடைக்கும். வெளிநாடுகளுக்கு சென்று பணியாற்றும் வாய்ப்பு அமையும்.

பரிகாரம்:


சித்தர்களை வணங்கி தியானத்தில் ஈடுபட மனக்கலக்கம் நீங்கும்.


மதிப்பெண்கள்: 72% நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.
**********************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

8 mins ago

வணிகம்

25 mins ago

சினிமா

47 mins ago

இந்தியா

19 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

4 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

6 hours ago

வாழ்வியல்

1 hour ago

மேலும்