மேஷம், ரிஷபம், மிதுன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்! நவம்பர் 11 முதல் 17ம் தேதி வரை

By செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)


கிரகநிலை:
தன ஸ்தானத்தில் ராகு - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், புதன் - அஷ்டம ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன் - தொழில் ஸ்தானத்தில் குரு, சனி, சந்திரன் என கிரக நிலவரம் உள்ளது.

13-11-2021 அன்று குரு பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

17-11-2021 அன்று புதன் பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.


பலன்கள் :


தான் உண்டு தன்வேலை உண்டு என்று இருக்கும் மேஷ ராசியினரே!


நீங்கள் மற்றவர்களின் நடவடிக்கைகளை நன்கு அறிந்து கொள்வதில் வல்லவர். இந்த வாரம் எதிர்பாராத செல்வச் சேர்க்கை உண்டாகும். அதேநேரத்தில் மனதில் வீண்கவலையும் ஏற்படலாம். எதிலும் ஒரு வேகம் உண்டாகும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடும்போது கவனம் தேவை. உல்லாச பயணங்கள் செல்ல நேரலாம். எதிலும் அளவுக்கு மீறாமல் இருப்பது நல்லது. ஆடம்பரப் பொருட்கள் சேரும்.


தொழில் வியாபாரத்தில் இருந்த மெத்தனப் போக்கு நீங்கி வேகம் பிடிக்கும். தொழில் விஷயமாக வெளியூர் செல்ல நேரலாம். எதிர்பார்த்த ஆர்டர் கிடைக்க இருந்து வந்த தாமதம் நீங்கும்.


உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகள் கிடைக்கப் பெற்று அதனால் நன்மை அடைவார்கள். மேலிடத்திலிருந்து பொறுப்புகள் அதிகமாக வழங்கப்படும்.
குடும்பத்தில் திருப்தியான நிலை காணப்படும். வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதால் செலவு ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கி நெருக்கம் ஏற்படும். பிள்ளைகளுடன் மனதுக்குப் பிடித்த இடத்திற்கு சென்று பொழுதைக் கழிப்பீர்கள். வீடு மனை போன்ற முதலீடுகளில் ஆர்வம் அதிகரிக்கும்.
பெண்களுக்கு எதிர்பார்த்த செல்வச் சேர்க்கை உண்டாகும். மனதில் வீண் கவலை ஏற்படலாம். அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.
மாணவர்களுக்கு கல்வியைப் பற்றிய மனக்கவலை உண்டாகும். பயணங்கள் மகிழ்ச்சிகரமாக இருக்கும்.


பரிகாரம்: தினமும் கந்தசஷ்டி கவசம் படித்து முருகப் பெருமானை வணங்கினால் கஷ்டம் நீங்கும். எதிர்ப்புகள் விலகும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி;
****************************************************


ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)


கிரகநிலை:
ராசியில் ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், புதன் - களத்திர ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் குரு, சனி, சந்திரன் என கிரக நிலவரம் உள்ளது.

13-11-2021 அன்று குரு பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.


17-11-2021 அன்று புதன் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.


பலன்கள்:


குணத்தில் சாந்தமாக இருக்கும் அதே வேளையில் உங்களை யாரேனும் தேவையற்று சீண்டினால் பொறுக்க மாட்டாமல் பாய்ந்து விடும் குணமுடைய ரிஷப ராசியினரே!
இந்த வாரம் மனதில் நிம்மதி உண்டாகும். உதவி என்று வருபவர்களுக்கு தயங்காமல் உதவிகளை செய்வீர்கள். இரவில் நல்ல உறக்கம் வரும். மற்றவர்களுக்கு ஆலோசனை கூறும் நிலை உருவாகலாம். ஆடை, ஆபரணம் வாங்குவதால் செலவு உண்டாகும்.

தொழில் வியாபாரம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். எதிலும் ஒரு முறைக்கு மறுமுறை யோசித்து முடிவெடுப்பது நல்லது.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. இல்லையெனில் பலரையும் விரோதித்துக் கொள்ள வேண்டி இருக்கும். வர வேண்டிய பணம் வந்து சேரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும். பணி நிமித்தமாக வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும்.

குடும்பத்தில் இருப்பவர்கள் உங்கள் யோசனையைக் கேட்டு நடந்து கொள்வது மனதிற்கு திருப்தியை தரும். கணவன், மனைவிக்கிடையே இருக்கும் அன்பு நீடிக்கும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். விருந்தினர் வருகை இருக்கும். தந்தை வழியில் இருந்து வந்த கருத்து மோதல்கள் அகலும். பிதுரார்ஜித சொத்துகள் கைக்கு வந்து சேரும்.

பெண்களுக்கு உங்களது ஆலோசனையைக் கேட்டு அதன்படி சிலர் நடந்து காரிய வெற்றி அடைவார்கள். தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
மாணவர்களுக்கு வீண் அலைச்சலை குறைத்துக் கொண்டு கல்வியில் கவனம் செலுத்துவது நன்மை தரும்.

பரிகாரம்: மாரியம்மனை பூஜித்து வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். மனநிம்மதி உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி;
***************************************************************


மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)


கிரகநிலை:
பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், புதன் - ரண் ருண ரோக ஸ்தானத்தில் கேது - களத்திர ஸ்தானத்தில் சுக்கிரன் - அஷ்டம ஸ்தானத்தில் குரு, சனி, சந்திரன் - அயன சயன போக ஸ்தானத்தில் ராகு என கிரக நிலவரம் உள்ளது.

13-11-2021 அன்று குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17-11-2021 அன்று புதன் பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.


பலன்கள்:


எதிலும் நேரிடையாக ஈடுபடாமல் மறைமுகமாக காரியம் சாதித்துக் கொள்ளும் திறமை உடைய மிதுன ராசியினரே!

இந்த வாரம் மனதில் இருந்த கவலை நீங்கி தைரியம் உண்டாகும். எதிலும் லாபத்தை பார்க்க முடியும். எல்லா நன்மையும் உண்டாகி உடல் ஆரோக்கியம் பெறும். வாக்கு வன்மையால் எந்த காரியத்தையும் சுலபமாக செய்து முடிப்பீர்கள்.


தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைப்பளு குறைந்து மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். பணவரத்தும் திருப்தியாக இருக்கும். எல்லாவற்றிலும் முன்னேற்றம் காணப்படும். அலுவலகத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் அகலும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குழந்தைகளின் எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள். நண்பர்கள் உறவினர்கள் மூலம் தேவையான உதவி கிடைக்கும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். எதிர்ப்புகள் விலகும். தாமதமாகி வந்த சுபகாரியங்கள் சிறப்பாக நடக்கும்.

பெண்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி காண்பீர்கள். மனக்கவலை நீங்கும். பணவரத்துகூடும்.

மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்க்கும் வெற்றி கிடைக்க பாடுபடுவீர்கள். எதிலும் முன்னேற்றம் உண்டாகும்.

பரிகாரம்: நாலாயிர திவ்ய பிரபந்தம் படித்து வர காரியத்தடை நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள், வியாழன்;
**************************************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

6 mins ago

தமிழகம்

21 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

ஜோதிடம்

4 hours ago

மேலும்