பிலவ வருட பலன்கள் 2021 - 2022 ; ரோகிணி நட்சத்திர அன்பர்களே! தைரியம் கூடும்; நிதான முடிவு; உதவி கிடைக்கும்; முயற்சியில் வெற்றி! 

By செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ரோகிணி:

கிரகநிலை:

ராகு பகவான் உங்கள் நட்சத்திரத்தின் 3ம் பாதம் - கேது பகவான் பதினைந்தாவது நட்சத்திரத்தின் 3ம் பாதத்திலும் - சனி பகவான் பத்தொன்பதாவது நட்சத்திரத்தின் 1ம் பாதத்திலும் - குரு பகவான் இருபதாவது நட்சத்திரத்தின் 3ம் பாதத்திலும் சஞ்சரிக்கிறார்கள்.

கிரகமாற்றம்:

பிலவ ஆண்டு ஐப்பசி மாதம் 27ம் தேதி - 13.11.2021 - சனிக்கிழமை அன்று குரு பகவான் இருபதாவது நட்சத்திரத்தின் 3ம் பாதத்திற்கு மாறுகிறார்.
பிலவ ஆண்டு பங்குனி மாதம் 07ம் தேதி - 21.03.2022 - திங்கட்கிழமை அன்று ராகு பகவான் இருபத்தி ஏழாம் நட்சத்திரத்தின் 1ம் பாதத்திற்கு மாறுகிறார்.
பிலவ ஆண்டு பங்குனி மாதம் 07ம் தேதி - 21.03.2022 - திங்கட்கிழமை அன்று கேது பகவான் பதிமூன்றாவது நட்சத்திரத்தின் 1ம் பாதத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்:

தனது வசீகரமான பேச்சால் எந்தச் சூழ்நிலையையும் சமாளிக்கும் ரோகிணி நட்சத்திர அன்பர்களே!

இந்த வருடத்தில் எதையும் ஆராய்ந்து அதன் பிறகே அதில் ஈடுபடுவது நன்மைகளைத் தரும். ஆன்மிகப் பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். காரிய அனுகூலங்களும் உண்டாகும். மனோ தைரியம் அதிகரிக்கும். வீடு, வாகனங்கள் தொடர்பான செலவு ஏற்படும்.

தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். லாபம் கூடும். பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகப் பணிகளால் டென்ஷன் அடைவார்கள். எதிர்பார்த்தபடி சக ஊழியர்களால் உதவிகள் கிடைக்கும்.

குடும்பத்தில் சில்லறைச் சண்டைகளும், பூசல்களும் இருக்கும். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் உண்டாகும். உறவினர்களுடன் கருத்து வேற்றுமை வரலாம். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடிப்பது நல்லது.

பெண்களுக்கு எந்தவொரு வேலையில் ஈடுபட்டாலும் அதுபற்றி ஒருமுறைக்கு பலமுறை யோசித்தபின் ஈடுபடுவது நல்லது. துணிச்சல் அதிகரிக்கும்.
கலைத்துறையினருக்கு போட்டிகள் நீங்கும். உங்களுக்கு பக்கபலமாக ஒருவரது உதவி கிடைக்கும்.

அரசியல்வாதிகளுக்கு வாழ்க்கைத் தரம் உயர எடுக்கும் முயற்சிகள் கை கூடும்.

மாணவர்களுக்கு தன்னம்பிக்கையுடன் பாடங்களைப் படித்து கூடுதல் மதிப்பெண் பெற முயற்சி மேற்கொள்வீர்கள்.

+: பொருளாதாரத்தில் மேன்மை
-: எதிர்பாராத வெளியூர் பயணம் ஏற்படலாம்
மதிப்பெண்: 78%
வணங்க வேண்டிய தெய்வம்: ஸ்ரீகிருஷ்ணர், ஸ்ரீரங்கநாதரை வணங்குங்கள்.
*********************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

சினிமா

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

8 hours ago

வாழ்வியல்

9 hours ago

தமிழகம்

9 hours ago

ஆன்மிகம்

8 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்