துலாம், விருச்சிகம், தனுசு ; வார ராசிபலன்; அக்டோடர் 8 முதல் 14ம் தேதி வரை

By செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

துலாம்

(சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)

அடுத்தவர்கள் நலனில் அக்கறை கொண்டு செயல்படும் துலா ராசி அன்பர்களே!

இந்த வாரம் எதிலும் லாபகரமான நிலை காணப்படும். எடுத்த காரியத்தை சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். பணவரத்து அதிகரிக்கும். துணிச்சலாக எதிலும் ஈடுபட்டு பாராட்டு பெறுவீர்கள். எதிலும் தயக்கமோ பயமோ இருக்காது.

தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. அவருக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். ஆனால் கைக்கு பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

புதிய ஆர்டர்கள் கூடுதலாக உழைப்பதன் பேரில் கிடைக்கும். வாடிக்கையாளர்களை திருப்தி செய்ய முற்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேன்மை அடைவார்கள். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்கள் விருப்பத்திற்கு மாறாக எல்லாக் காரியங்களையும் செய்வார்கள்.

கணவன் மனைவிக்கிடையே பிரச்சினைகள் ஏற்பட்டு நீங்கும். நண்பர்கள் மூலம் நன்மை உண்டாகும். பெண்கள் எதிலும் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். கலைத்துறையினர் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும்.

அரசியல்வாதிகளுக்கு மேலிடத்திலிருந்து சந்தோஷமான செய்தி வரும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். கல்விக்கான செலவு கூடும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி
திசைகள்: மேற்கு, தென்மேற்கு
நிறங்கள்: வெள்ளை
எண்கள்: 2, 5, 6
பரிகாரம்: ஸ்ரீரங்கநாதரை, அருகில் உள்ள பெருமாளை தரிசனம் செய்து வணங்குங்கள். சுபிட்சத்தைத் தரும். இல்லறத்தில் இருந்த சச்சரவுகள் நீங்கும்.
*******************

விருச்சிகம்

(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

கொடுத்த வேலையை சரியான நேரத்தில் செய்து பெயர் எடுக்கும் விருச்சிக ராசி அன்பர்களே!

இந்த வாரம் பலவிதத்திலும் பணவரத்து உண்டாகும். ஆனாலும் சுபச்செலவுகள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் நன்றாக நடந்து முடியும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் வரும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற பாடுபடுவீர்கள்.

வெளியூர் பயணம் செல்ல நேரிடும். அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடாமல் ஒதுங்கிச் செல்வது நல்லது. ஆரோக்கியம் சம்பந்தமான குறைபாடு வரலாம். தொழில் வியாபாரத்தில் வேகமான முன்னேற்றம் இருப்பது கடினமாகத்தான் இருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் சுபகாரியங்கள், மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் இருக்கும். அதேநேரத்தில் கணவன், மனைவிக்கிடையே ஏதேனும் மனவருத்தம் ஏற்படலாம்.

பெண்களுக்கு பணவரத்து திருப்தி தரும். கலைத்துறையினர் கடுமையாக உழைப்பின் மூலம் முன்னேற வேண்டி இருக்கும். அரசியல்வாதிகளுக்கு மேலிடத்திலிருந்து முக்கியப் பொறுப்புகள் வரும்.
மாணவர்களுக்குப் பாடங்களை கவனமாகப் படித்து கூடுதல் மதிப்பெண் பெற முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய்
திசைகள்: வடக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு
நிறங்கள்: சிவப்பு, அடர் நீலம்
எண்கள்: 2, 9
பரிகாரம்: முருகப் பெருமானை வணங்கி வாருங்கள். எல்லா துன்பமும் நீங்கும். மனநிம்மதி கிடைக்கும்.
****************************************

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

எப்போதும் உற்சாகமாக இருக்கும் தனுசு ராசி அன்பர்களே!

இந்த வாரம் சில குழப்பங்கள் நேர்ந்தாலும் இதுவரை நடக்காமல் இருந்த காரியத்தை சிறப்பாக செய்து முடித்து மனநிம்மதி அடைவீர்கள். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் நடந்து முடியும். முக்கிய நபர்கள் மூலம் எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும்.

பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். ஆடம்பரச் செலவுகள் அதிகரிக்கும். தொழில் வியாபாரம் நன்கு நடைபெறத் தேவையான உதவிகள் கிடைக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக பணிகளை செய்து முடித்து நிர்வாகத்தில் நல்ல பெயர் பெறுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்சினைகள் தீரும். வீடு, வாகனம் போன்றவற்றை வாங்குவது, புதுப்பிப்பது போன்றவற்றில் ஈடுபடுவீர்கள்.

பெண்களுக்கு மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடக்கும். கலைத்துறையினருக்கு மிகவும் அனுகூலமான காலமிது. அரசியல்வாதிகளுக்கு இனிமையான செய்திகள் தேடி வரும்.

மாணவர்களுக்கு சகமாணவர்களை அனுசரித்துச் செல்வது நன்மை தரும். கல்வியில் ஆர்வம் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி
திசைகள்: கிழக்கு, தென்மேற்கு
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
எண்கள்: 1, 3, 6
பரிகாரம்: தட்சிணாமூர்த்தி அஷ்டகம் படித்து தட்சிணாமூர்த்தியை வணங்கி வாருங்கள். பணக் கஷ்டம் தீரும். கல்வியில் வெற்றி உண்டாகும்.
***************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

34 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

க்ரைம்

4 hours ago

மேலும்