துலாம், விருச்சிகம், தனுசு; வார ராசிபலன்; ஆகஸ்ட் 20 முதல் 26ம் தேதி வரை

By செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

துலாம்

(சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)

இந்த வாரம் எடுத்த காரியம் கைகூடும். விரோதிகளும் நண்பர்களாவார்கள்.

மறைமுக எதிர்ப்புகள் விலகும். பணவரத்து திருப்தி தரும். கடன் விவகாரங்களில் எச்சரிக்கை தேவை. குடும்பத்தில் வாழ்க்கைத் துணை மூலம் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள்.

உறவினர்கள், நண்பர்கள் மூலம் தக்க தருணத்தில் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் வழியில் எதிர்பார்த்த நன்மைகள் உண்டாகும். அவர்களின் ஆதரவும் கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். விரிவாக்கம் செய்வது தொடர்பான ஆலோசனைகளில் ஈடுபடுவீர்கள். பயணங்கள் மூலம் லாபம் கிடைக்கப் பெறலாம்.

மேலதிகாரிகளால் உத்தியோகஸ்தர்களுக்கு நன்மை உண்டாகும். பெண்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் விலகும். எதிரிகளும் நண்பராவார்கள்.

கலைத்துறையினருக்கு கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.
உங்களுக்குப் பின்னால் உங்களை பற்றி புறம் பேசியவர்கள் உங்களிடம் சரண் அடைவார்கள். எதிலும் எச்சரிக்கை தேவை.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி
திசைகள்: மேற்கு, வடமேற்கு
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
எண்கள்: 2, 6
பரிகாரம்: மாரியம்மனை வழிபட காரிய வெற்றி உண்டாகும்.
**************************

விருச்சிகம்
(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

இந்த வாரம் சுபச்செலவு உண்டாகும். எதிர்பார்த்த வெற்றி உண்டாகும்.

எதிர்பாராத பணவரத்து இருக்கும். புதிய நண்பர்கள் சேர்க்கையும் ஏற்படும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். எதிர்ப்புகள் நீங்கும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்த மனத்தாங்கல் நீங்கி மகிழ்ச்சியும், சகஜ நிலையும் காணப்படும்.

கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகளிடம் பேசும்போது நிதானமாகப் பேசுவது நல்லது. தொழில் வியாபாரம் சிறிது மந்தமான நிலையில் காணப்பட்டாலும் வருமானம் குறையாத நிலை இருக்கும்.
போட்டிகள் பற்றிய கவலையை விட்டுவிட்டு தொழில் வியாபாரத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெளியூர் மாற்றங்கள் உண்டாகலாம். சக ஊழியர்களிடம் பேசும்போது கோபப்படாமல் இருப்பது நன்மை தரும்.

பெண்கள் மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். பணவரத்து தாமதப்படும். கலைத்துறையினர் கோபத்தைத் தவிர்ப்பது நல்லது.

மாணவர்களுக்கு சக மாணவர்களிடம் சகஜமாகப் பேசிப் பழகுவது நல்லது. கல்வியில் முன்னேற்றம் காண கூடுதல் நேரம் ஒதுக்கிப் படிப்பது நல்லது.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், புதன்
திசைகள்: வடக்கு, வடமேற்கு
நிறங்கள்: சிவப்பு
எண்கள்: 1, 5, 9
பரிகாரம்: முருகப்பெருமானை தீபம் ஏற்றி வழிபட வாழ்க்கை வளம் பெறும்.
*******************

தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

இந்த வாரம் எதிர்ப்புகள் நீங்கி எதிலும் உற்சாகம் உண்டாகும்.

மனமகிழ்ச்சிக்காக பணம் செலவு செய்யத் தயங்க மாட்டீர்கள். நண்பர்கள் சேர்க்கையும் அவர்களால் உதவியும் கிடைக்கும். குடும்பத்தில் வாழ்க்கைத் துணை மூலம் மகிழ்ச்சி உண்டாகும்.

வார மத்தியில் உஷ்ண சம்பந்தமான நோய்வரக்கூடும். எச்சரிக்கையாக இருப்பதன் மூலம் அதைத் தடுக்கலாம். பிள்ளைகள் மனம் மகிழும்படி நடந்து கொள்வார்கள். வீண் விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது.

தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரம் தொடர்பான வெளியூர்ப் பயணங்கள் சாதகமான பலன்தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேண்டிய உதவிகள் மேலதிகாரிகள் மூலம் கிடைக்கும். பொறுப்புகள் கூடும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வும் கிடைக்கக்கூடும்.

பெண்கள் தாராளமாக பணம் செலவு செய்து தேவையானவற்றை வாங்குவீர்கள். கலைத்துறையினருக்குத் தேவையான நேரத்தில் தேவையான உதவிகளும் கிடைக்கும். மாணவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். கல்வியில் முன்னேற்றமடையத் தேவையான உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி
திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
எண்கள்: 3, 6
பரிகாரம்: நவக்கிரக குருவை வழிபட மதிப்பும், மரியாதையும் கூடும்.
***********************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

38 mins ago

வணிகம்

8 hours ago

சுற்றுச்சூழல்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

கல்வி

44 mins ago

தமிழகம்

1 hour ago

சுற்றுலா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

ஆன்மிகம்

3 hours ago

மேலும்