துலாம் ராசியினருக்கான மே மாத பலன்கள் - முழுமையாக | 2023

By Guest Author

துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்) கிரகநிலை - ராசியில் கேது - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி - களத்திர ஸ்தானத்தில் புதன் (வ), ராகு, சூர்யன், குரு - அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகநிலை அமைந்திருக்கிறது.

கிரகமாற்றங்கள்: 03-05-2023 அன்று சுக்ர பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 12-05-2023 அன்று செவ்வாய் பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 15-05-2023 அன்று சூரிய பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 30-05-2023 அன்று சுக்ர பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: பக்குவமாக எடுத்து சொல்லி எதிரில் இருப்பவர்களை திருப்தியடையச் செய்யும் துலாம் ராசி அன்பர்களே! இந்த மாதம் பல வழிகளிலும் ஏற்பட்ட தொல்லைகள் குறையும். ஆனால் எந்த ஒரு வேலையிலும் எச்சரிக்கையுடன் ஈடுபடுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதும் நல்லது. திடீர் இடமாற்றம் ஏற்பட்டாலும் அதன் மூலம் சாதகம் உண்டாகலாம். வீண் செலவுகள் கவுரவ குறைச்சல் ஏற்படலாம். மிகவும் கவனம் தேவை. தாய் தந்தையின் உடல் நிலையிலும் கவனம் செலுத்துவது நல்லது.

தொழில் வியாபாரத்தில் மெத்தன போக்கு காணப்பட்டாலும் குருவின் சஞ்சாரத்தால் தேவையான பணவரத்தும் இருக்கும். புதிய முயற்சிகளில் தாமதமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சல் காரியங்களில் இழுபறி என்ற நிலையை காண்பீர்கள். பேச்சை குறைத்து செயலில் ஈடுபடுவது நன்மையை தரும்.

குடும்பத்தில் சுமூகமான நிலை காணப்படும். ஆனாலும் மனதில் குடும்பம் தொடர்பான கவலை, பிள்ளைகள் பற்றிய கவலை இருந்து வரும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. பெண்களுக்கு தொல்லைகள் குறையும். வீண் செலவுகள் உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

கலைத்துறையினருக்கு உங்களுக்குக் கிடைக்கும் சிறு வாய்ப்புகளைக் கூட வீணாக்காமல் பயன்படுத்துவது நல்லது. உங்கள் திறமைகளை வெளிக்கொண்டு வர சிறந்த காலகட்டம் இதுவாகும். பாராட்டு, புகழ், விருது உங்களைத் தேடி வரும்.

அரசியல்வாதிகளுக்கு உங்கள் மீது தலைமை அதிகமான நம்பிக்கை கொள்ளும். உங்கள் நண்பர்களே உங்களுக்கு எதிராக செயல்படலாம். உங்களுடைய விசுவாசத்திற்கு மேலிடம் உங்களுக்கு சரியான பதவிகளை அளிப்பார்கள். மாணவர்களுக்கு கல்வியில் மெத்தன போக்கு ஏற்படாமல் தீவிர கவனத்துடன் பாடங்களை படிப்பது வெற்றிக்கு வழி வகுக்கும்.

சித்திரை 3, 4 பாதங்கள்: இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி விறுவிறுப்பு அடையும். வசூலாக வேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பான பிரச்சினைகள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி தொடர்பான கஷ்டங்கள் குறையும்.

சுவாதி: இந்த மாதம் குடும்பத்தில் மரியாதை கூடும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு இருக்கும். கணவன், மனைவிக்கிடையில் மனம்விட்டு பேசி எடுக்கும் முக்கிய முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

விசாகம் 1, 2, 3 பாதங்கள்: இந்த மாதம் அடுத்தவர் செய்யும் நற்காரியங்களுக்கு ஆதரவாக இருப்பீர்கள். மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். வீண் கவலை நீங்கும். தடைபட்ட காரியங்களில் தடை நீங்கி சாதகமாக நடந்து முடியும். வழக்கு விவகாரங்களில் சாதகமான நிலை காணப்படும்.

பரிகாரம்: ஊனமுற்றவர்களுக்கு தொண்டு செய்வதும் பிரதோஷ காலத்தில் சிவனை வழிபடுவதும் கஷ்டங்களை நீக்கி வீண் விரயத்தை குறைக்கும். காரியத்தடை நீங்கும் | சந்திராஷ்டம தினங்கள்: 19-05-2023 பகல் 02:01 மணி முதல் 21-05-2023 இரவு 10:12 மணி வரை | அதிர்ஷ்ட தினங்கள்: 13, 14

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

கல்வி

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

தமிழகம்

9 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

மேலும்