சிம்மம் ராசியினருக்கான ஜனவரி மாத பலன்கள் - முழுமையாக | 2023

By செய்திப்பிரிவு

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) | கிரகநிலை: தைரிய வீர்ய ஸ்தானத்தில் கேது - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன், புதன்(வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்கிரன், சனி - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் குரு - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன், ராகு - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் செவ்வாய் (வ) என கிரகநிலை இருக்கிறது.

கிரகமாற்றங்கள்: 08-01-2023 அன்று பஞ்சம ஸ்தானத்தில் இருக்கும் புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார். | 13-01-2023 அன்று தொழில் ஸ்தானத்தில் இருக்கும் செவ்வாய் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார். | 15-01-2023 அன்று சூரிய பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார். | 23-01-2023 அன்று சுக்ர பகவான் ரண ருண ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்: மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்வது போல் செயல்பட்டாலும் இறுதியில் நீங்கள் நினைத்ததையே செய்யும் குணமுடைய சிம்ம ராசியினரே இந்த மாதம் பணம் சம்பாதிக்கும் திறமை அதிகமாகும். தடை பட்டு வந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ராசியில் குரு இப்பதன் மூலம் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். பணியாட்கள் மூலம் நன்மை ஏற்படும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களிடம் நன் மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நேர்மையாக சிறப்பாக பணிகளை செய்து மேல் அதிகாரிகளிடம் பாராட்டுக்கள் கிடைக்க பெறுவார்கள். உயர் பதவிகளும் கிடைக்க கூடும். சக பணியாளர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். எல்லா வகையிலும் நன்மை ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கி மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். பிள்ளைகள் நீங்கள் கூறியதை கேட்டு அதன்படி நடப்பது ஆறுதலை தரும். நண்பர்கள் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சுமூகமாக நடந்து முடியும்.

பெண்களுக்கு தேவையான உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தடைபட்ட காரியங்கள் சாதகமாக முடியும். பணவரத்து அதிகரிக்கும்.

கலைத்துறையினருக்கு ஒப்பந்தங்கள் எடுப்பதில் கவனம் தேவை. லாபம் உண்டாகும். கடின உழைப்பு உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். சிறு சிக்கல்கள் ஏற்பட்டு மறையும். கவனத்துடன் செயல்பட்டால் சிக்கல்களைத் தவரிக்கலாம். சின்னச் சின்ன செலவுகளை சந்திக்க நேரிடலாம். உழைப்பிற்கான ஊதியம் சற்று குறைவாக கிடைக்கலாம். மன தைரியத்தால் வெற்றி காண்பீர்கள்.

அரசியல் துறையினருக்கு அதீத கவனத்துடன் செயல்படுவது உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் வெற்றியைத் தேடித்தரும். எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும். சிலருக்கு நெடுநாளைய ஆசைகள் நிறைவேறும். லட்சியங்கள் கைகூடும். மனதிற்கு நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும். நிதானம் தேவை.

மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் நீங்கி முன்னேற்றம் காண்பீர்கள். பெற்றோர், ஆசிரியர் பாராட்டும் கிடைக்கும்.

மகம்: இந்த மாதம் நல்ல பெயர் வாங்குவீர்கள். மூலதனத்திற்குத் தேவையான பணம் வந்து குவியும். எதிரிகள் வகையில் சற்று கவனமுடன் செயல்படவும். அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளவும்.

பூரம்: இந்த மாதம் சுக்ரன் சஞ்சாரத்தால் கலைத்துறைகளைச் சார்ந்த துறைகளில் ஈடுபட்டு இருப்பவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். பிறமொழி பேசுபவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

உத்திரம்: இந்த மாதம் உங்கள் நிலைமை மாறும். நீங்கள் விரும்பியதை கேட்டு பெற்றுக் கொள்ளலாம். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். கன்சல்டன்சி துறைகளில் வேலை செய்பவர்கள் தகுந்த முன்னேற்றம் கிடைக்கும். பள்ளி, கல்லூரிகளில் பணிபுரிபவர்களும் நற்பலன்கள் கிடைக்கப் பெறுவார்கள். பதவி உயர்வு கிடைக்கும்.

பரிகாரம்: தினமும் கோதுமை தூளை காகத்திற்கு வைக்க பிரச்சனைகள் குறையும். தடைபட்ட காரியங்களில் தடை நீங்கும். | சந்திராஷ்டம தேதி: 26, 27 | அதிர்ஷ்ட தேதி: 20, 21

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

கல்வி

28 mins ago

சினிமா

30 mins ago

சினிமா

17 mins ago

தமிழகம்

32 mins ago

கல்வி

36 mins ago

சுற்றுலா

45 mins ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

48 mins ago

விளையாட்டு

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்