இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: எதிர்பார்த்த வகையில் பணம் வரும். பழைய பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். ஆன்மிகத்தில் மனம் செல்லும். மாலை முதல் எதிலும் நிதானம் தேவை.

ரிஷபம்: புத்திசாலித்தனம் வெளிப்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பிரபலங்கள் நண்பர்களாவார்கள். வீட்டில் குழப்பம் நீங்கி அமைதி நிலவும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

மிதுனம்: பழைய நண்பர்களால் சில காரியங்கள் நிறைவேறும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். வாகனம் செலவு வைக்கும்.

கடகம்: பிரபலங்களின் உதவியை நாடிச் செல்வீர்கள். குடும்பத்தினரின் விருப்பத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள். வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் வரும்.

சிம்மம்: நீண்டநாள் ஆசைகள் நிறைவேறும். சுபநிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பங்கு வர்த்தகம் லாபம் தரும்.

கன்னி: தடுமாற்றங்கள் நீங்கும். எடுத்த காரியங்களை எப்படியாவது முடித்துவிட வேண்டும் என்ற வைராக்கியம் பிறக்கும். பூர்வீகச் சொத்தை மாற்றியமைப்பீர்கள்.

துலாம்: எதிர்காலத்தைப் பற்றிய பயம் அடிக்கடி வரும். பிள்ளைகளின் நடவடிக்கைகளை கவனியுங்கள். மாலை முதல் தொட்டது துலங்கும். தாயாரின் ஆதரவு கிடைக்கும்.

விருச்சிகம்: வீண் செலவு, அலைச்சல் வரும். அக்கம்பக்கத்து வீட்டாரிடம் அளவாகப் பழகுங்கள். குடும்பத்தில் வீண் விவாதங்கள் வேண்டாம். கலைப்பொருட்கள் சேரும்.

தனுசு: எதிலும் வெற்றி பெறுவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள்.

மகரம்: திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். சேமிக்கும் அளவுக்கு பணவரவு உண்டு.

கும்பம்: நெடுநாட்களாகத் திட்டமிட்டுக் கொண்டிருந்த சில காரியங்களை செயல்படுத்திக் காட்டுவீர்கள். பிள்ளைகள் குடும்பச் சூழ்நிலையறிந்து பொறுப்புடன் செயல்படுவார்கள்.

மீனம்: மனப்போராட்டம், ஒருவித பயம் இருக்கும். கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. மாலை முதல் மகிழ்ச்சிகரமான சூழல் நிலவும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்