இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: தொலைநோக்குச் சிந்தனை அதிகரிக்கும். சூழ்நிலைக்கேற்ப செயல்படும் சாமர்த்தியத்தை கற்றுக் கொள்வீர்கள். அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்த திட்டமிடுவீர்கள்.

ரிஷபம்: சவாலான காரியங்களையும் சாமர்த்தியமாக முடித்துக் காட்டுவீர்கள். அடுத்தடுத்து செலவுகள் வந்தாலும் அதற்கேற்ற வருமானமும் உண்டு. கலைப்பொருட்கள் சேரும்.

மிதுனம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிட்டும். நம்பிக்கைக்குரியவர்களின் அறிமுகம் கிடைக்கும். வாகனம் செலவு வைக்கும்.

கடகம்: செயலில் வேகம் கூடும். அரசால் அனுகூலம் உண்டாகும். விஐபிகளின் உதவியுடன் சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். பங்கு வர்த்தகத்தில் லாபம் கிடைக்கும்.

சிம்மம்: பிள்ளைகளின் பிடிவாத குணம் தளரும். உங்கள் ஆலோசனையை குடும்பத்தில் அனைவரும் ஏற்பார்கள். மகளுக்கு நல்ல இடத்தில் திருமணம் கூடி வரும்.

கன்னி: கவுரவப் பதவிகள் தேடி வரும். மனைவிவழி உறவினரால் சில காரியங்கள் நிறைவேறும். நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். புண்ணிய தலம் செல்ல திட்டமிடுவீர்கள்.

துலாம்: சவாலான காரியங்களையும் சாதுர்யமாக முடித்துக் காட்டுவீர்கள். எதிர்காலத்துக்கான முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வீடு கட்டும் பணியில் இருந்த தாமதம் விலகும்.

விருச்சிகம்: குடும்பத்தில் குதூகலமான நிலை காணப்படும். கடன் பிரச்சினையைத் தீர்க்க வழி பிறக்கும். சுபநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடாகும். பால்ய நண்பரை எதிர்பாராது சந்திப்பீர்கள்.

தனுசு: ஓய்வெடுக்க முடியாதபடி அடுத்தடுத்து வேலைகள் இருந்துகொண்டே இருக்கும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். மூத்த சகோதரர் தக்க சமயத்தில் உதவுவார்.

மகரம்: குடும்பத்தில் சுபச் செலவுகள் இருந்து கொண்டேயிருக்கும். விலகியிருந்த உறவினர்கள் மீண்டும் வருவார்கள். நவீன மின்னணு சாதனங்கள் வாங்கி மகிழ்வீர்கள்..

கும்பம்: சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் அதிகரிக்கும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும் உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

மீனம்: உங்களின் நிர்வாகத் திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வீடு பராமரிப்பை மேற்கொள்வீ்ரகள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

வாழ்வியல்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

10 hours ago

ஓடிடி களம்

10 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்